Enable Javscript for better performance
இந்த வாரம் எந்த ராசிக்காரர்களுக்கு தனவரவு அதிகரிக்கும்?- Dinamani

சுடச்சுட

  
  astrology2

  12 ராசிக்காரர்களுக்குமான இந்த வார (ஜூன் 7 - ஜூன் 13) பலன்களை தினமணி ஜோதிடர் கே.சி.எஸ்.ஐயர் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்து பலனடைவோம். 

  மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

  கவனமாக இருக்க வேண்டிய காலமிது. நிதானத்துடனும் பொறுமையுடனும் செயலாற்றி வெற்றி பெறுவிர்கள். உறவினர்கள் உதவிகரமாக இருக்க மாட்டார்கள். 

  நண்பர்களாலும் குழப்பங்கள் வரலாம். யாருக்கும் கடன் கொடுக்க வேண்டாம். 

  உத்தியோகஸ்தர்கள் அனைத்து வேலைகளையும் குறித்த காலத்திற்குள் முடித்து மேலதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவாக்ரள். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல்கள் 

  சுமுகமாக முடிவடையும். வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். 

  விவசாயிகள் எதிலும் முன்எச்சரிக்கையுடன் ஆராய்ந்து செயல்பட்டால் நஷ்டங்களைத் தவிர்க்கலாம். 

  அரசியல்வாதிகளின் பேச்சுக்கு நல்ல வரவேற்பு இருக்கும். கட்சி மேலிடத்திடம் கவனமாக இருக்கவும். செயல்களில் தடைகளுக்குப் பிறகே வெற்றி கிடைக்கும். 
  கலைத்துறையினர் உழைப்பிற்குத் தகுந்த பாராட்டுகளைப் பெறுவார்கள். பெண்மணிகளுக்கு கணவருடனான ஒற்றுமை நன்றாக இருக்கும். 

  உற்றார் உறவினர்களை அனுசரித்துச் செல்லவும். மாணவமணிகள் கல்வியில் முன்னேற்றம் அடைவார்கள். விளையாட்டில் ஆர்வம் குறையும். 

  பரிகாரம்: செவ்வாயன்று முருகரை தரிசித்து வளம் காணலாம்.

  அனுகூலமான நாள்கள்: 7, 8

  சந்திராஷ்டமம்: இல்லை.

  {pagination-pagination}

  ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய)

  பொருளாதாரத்தில் அபிவிருத்தி உண்டாகும். உங்கள் பேச்சுக்கு மதிப்பு அதிகரிக்கும். குடும்பத்தில் மகிர்ச்சி தாண்டவமாடும். உற்றார் உறவினர்களிடம் சற்று 

  எச்சரிக்கையுடன் நடந்துகொள்ளவும். 

  உத்தியோகஸ்தர்கள் தடைப்பட்டிருந்த காரியங்கள் அனைத்திலும் வெற்றிவாகை சூடுவீர்கள். பதவி உயர்வு பெறுவதற்கான அறிகுறிகள் தென்படும். 

  வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல்களில் பலன் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய யுக்திகளைப் புகுத்துவீர்கள. விவசாயிகளுக்கு மகசூல் நன்றாக இருக்கும். நீர்ப்பாசன 

  வசதிகளுக்காக செலவு செய்ய நேரிடும். புதிய குத்தகைகள் கிடைக்கும். 

  அரசியல்வாதிகளுக்கு கட்சியில் வாக்குவாதங்கள் அதிகரிக்கும். போட்டிகளையும் சந்திக்க நேரிடும். எதிலும் புதிய உத்வேகத்துடன் ஈடுபடுவீர்கள். 

  கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களால் மனஅமைதி பெறுவார்கள். சமூகத்தில் உங்கள் பெயரும் புகழும் ஓங்கும். பெண்மணிகள் குடும்பத்தில் ஒற்றுமையை காண்பார்கள். 

  கனவரின் பாராட்டுகளால் மகிழ்ச்சி அடைவார்கள். மாணவமணிகள் எதிர்வரும் இடையூறுகளைச் சமாளித்தால் வெற்றி வாகை சூடலாம். 

  பரிகாரம்: ஞாயிறன்று சூரிய நமஸ்காரம் செய்து ஆத்ம ஒளி பெறுங்கள். 

  அனுகூலமான நாள்கள்: 7, 9

  சந்திராஷ்டமம்: இல்லை.

  {pagination-pagination}
  மிதுனம் (மிருகசீரிஷம்3ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)

  குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் பலப்படும். தொழிலில் முன்னேற்றம் தென்படும். நம்பிக்கையுடன் செயல்களைச் செய்து முடிப்பீர்கள். வீடு மாறும் எண்ணம் உள்ளவர்களுக்கு இது ஏற்ற காலமே. 

  உத்தியோகஸ்தர்களுக்கு கோரிக்கைகள் நிறைவேறும். சக ஊழியர்கள் உங்களிடம் சற்று பாராமுகமாகவே இருப்பார்கள். வியாபாரிகள் சற்று மந்தமான சூழ்நிலையை காண்பார்கள். புதிய முயற்சிகளைத் தள்ளிப்போடவும். விவசாயிகளுக்கு நீர்ப்பாசன வசதிகள் நன்றாக இருப்பதால் விளைச்சல் அளவுக்கு அதிகமாக இருக்கும். கொள்முதலில் நல்ல லாபம் கிடைக்கும். 

  அரசியல்வாதிகள் பொறுப்புகளை உணர்ந்து செயல்படவும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். கட்சி மேலிடத்தின் ஆதரவு குறைவாக இருப்பதால் எச்சரிக்கையுடன் இருக்கவும். கலைத்துறையினர் வெற்றி மேல் வெற்றி காண்பார்கள். புதிய ஒப்பந்தங்களைச் செய்வார்கள். 

  பெண்மணிகளுக்கு கணவருடனான  ஒற்றுமை சொல்லிக்கொள்ளும்படி இருக்காது. மாணவமணிகள் உள்ளரங்கு விளையாட்டுகளில் ஈடுபடுவது நல்லது.

  பரிகாரம்:  விநாயகரை வழிபட்டு வர, சங்கடங்கள் குறையும். 

  அனுகூலமான தினங்கள்: 8, 9. 

  சந்திராஷ்டமம்: இல்லை.

  {pagination-pagination}
  கடகம் (புனர்பூசம்4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

  செயல்கள் அனைத்தும் நேர்த்தியாக முடியும். சுபச்செலவுகளைச் செய்து மகிழ்வீர்கள். வசதி வாய்ப்புகள் பெருகும். தாயின் உடல்நிலையை கவனிக்கவும். மருத்துவச் செலவுகளும் செய்ய நேரிடலாம்.

  உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலக வேலைகள் அனைத்தும் சுமுகமாகவே முடிவடையும். பதவி உயர்வும் கிடைக்கப் பெறுவீர்கள். வியாபாரிகளுக்கு கடன்கள் குறையும். புதிய யுக்திகளைப் புகுத்தி வருமானத்தைப் பெருக்குவீர்கள். போட்டி பொறாமைகள் கூடுதலாக இருக்கும். விவசாயிகளுக்கு கொள்முதலில் நல்ல லாபம் உண்டு. கால்நடைகள் மூலம்  எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். 

  அரசியல்வாதிகளின் முயற்சிகள் அனைத்தும் வெற்றியடையும். தொண்டர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். கலைத்துறையினர் பழைய ஒப்பந்தங்களை நன்றாக முடித்துக்கொடுத்து புதிய ஒப்பந்தம் பெறுவர். 

  பெண்மணிகள் குடும்பத்தில் ஒற்றுமையை காண்பார்கள். வேலைக்குச் செல்லும் பெண்மணிகளின் கோரிக்கைகள் நிறைவேறும். மாணவமணிகள் விடாமுயற்சியால் வெற்றி அடைவார்கள். பெற்றோர் சொல்படி நடந்து கொள்ளவும்.

  பரிகாரம்:  புதனன்று பெருமாளையும் ஞாயிறன்று சூரிய நமஸ்காரமும் செய்து வரவும். 

  அனுகூலமான தினங்கள்: 9, 10. 

  சந்திராஷ்டமம்:  இல்லை.

  {pagination-pagination}
  சிம்மம் (மகம், பூரம்,உத்திரம் முதல் பாதம் முடிய)

  குடும்பத்தில் நிம்மதி பூத்துக் குலுங்கும். புதிய நட்புகள் உருவாகும். பொருளாதாரத்தில் சீரிய முன்னேற்றம் தென்படும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடப்பதற்கான வாய்ப்புகள் ஏற்படும். சில நேரங்களில் விரயமும் உண்டாகலாம்.

  உத்தியோகஸ்தர்கள் அலுவலகப் பணிகளில் கவனம் செலுத்தவும். காலநேரங்களை வீணாக்காமல் பயன்படுத்திக்கொள்ளவும்,. வியாபாரிகள் வரவேண்டிய பணம் விஷயமாக அக்கறை காட்டவும். கூட்டாளிகளிடம் எச்சரிக்கையுடன் பழகவும். 

  விவசாயிகளுக்கு மகசூல் நன்றாக இருக்கும். புதிய முயற்சிகளில் தைரியமாக ஈடுபடலாம். கால்நடைகளால் நன்மைகள் உண்டாகும்.

  அரசியல்வாதிகளுக்கு கட்சி மேலிடத்தின் பாராட்டு கிடைக்கும். புதிய பதவிகளும் வரும். எதிரிகள் சற்று ஒதுங்கியே இருப்பார்கள். கலைத்துறையினர் பெயரும் புகழும் பெறுவற்காக புதிய சாதனைகளைச் செய்வீர்கள். 

  பெண்மணிகள் ஆடை ஆபரணங்களை வாங்குவீர்கள். கணவரிடம் அன்போடு நடந்து கொள்வார்கள். இல்லத்தில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். 

  மாணவமணிகள் கல்வியில் முன்னேற்றம் காண்பார்கள்.

  பரிகாரம்: குலதெய்வ வழிபாடும்; காக்கைக்கு அன்னமிடலும் நல்லது. அனுகூலமான தினங்கள்: 8, 10. சந்திராஷ்டமம்:  இல்லை.

  {pagination-pagination}
  கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)

  துணிவோடும் தன்னம்பிக்கையோடும் திட்டமிட்ட காரியங்களில் ஈடுபடுவீர்கள். முக்கியஸ்தர்களின் உதவிகள் கிடைக்கும். குடும்பத்தினரிடம் அன்பு, பாசம் அதிகரிக்கும். தேவைக்கு ஏற்ற வருமானம் வந்து கொண்டிருக்கும்.

  உத்தியோகஸ்தர்களுக்கு அனைத்து வேலைகளையும் திறம்பட செய்துமுடிக்கும் ஆற்றல் உண்டாகும். சக ஊழியர்களிடம் ரகசியங்கள் பேச வேண்டாம். வியாபாரிகளுக்கு அலைச்சல்கள் அதிகமாகும். அகலக்கால் வைக்க வேண்டாம்.கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் சிக்கல்கல் வராது. விவசாயிகள் குடும்பத்தில் சுப காரியங்களை நடத்தி மகிழ்வார்கள். எதிர்ப்புகள் விலகும்.

  அரசியல்வாதிகளின் கோரிக்கைகள் நிறைவேறும். முயற்சிகள் அனைத்தும் படிப்படியாக பலன் தரும். மதிப்பு மரியாதைகள் உயரும். கலைத்துறையினர் புதிய வாய்ப்புகளை கடும் போட்டிக்குப் பிறகே பெறுவார்கள். வளர்ச்சிக்கான  முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். 

  பெண்மணிகள் கணவரிடமிருந்து எதிர்பார்த்த நன்மையையும் அன்பையும் பாசத்தையும் பெறுவீர்கள். மாணவமணிகள் உழைப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து படித்தால் நல்ல மதிப்பெண்கள் பெறலாம்.

  பரிகாரம்: புதனன்று பெருமாளையும்; சனியன்று சனீஸ்வரரையும் வணங்கி வரவும். 

  அனுகூலமான தினங்கள்: 8,  10. 

  சந்திராஷ்டமம்:  இல்லை.

  {pagination-pagination}
  துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம் முடிய)

  முயற்சிகள் அனைத்தும் வெற்றியடையும். சிறிய முயற்சிகள் பெரிய வருமானத்தைக் கொண்டு வந்து சேர்க்கும். இனிய செய்திகள் உங்களைத் தேடிவரும். பெரியவர்களின் நட்பும் ஆசியும் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் சிறக்கும்.

  உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகப் பணிகள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். எதிர்வரும் இடையூறுகள் அனைத்தையும் சாதுர்யமாக சமாளிப்பீர்கள். 

  வியாபாரிகளுக்கு மனதில் குழப்பங்கள் சூழும். அவசியமான செலவுகளுக்கு கடன் வாங்க நேரிடும். இருப்பினும் கொடுக்கல் வாங்கல்கள் நலமாகவே முடியும். விவசாயிகள் சந்தையில் போட்டிக்குத் தகுந்தவாறு விளைபொருள்களை விற்பனை செய்வீர்கள்.

  அரசியல்வாதிகளின் திட்டங்கள் அனைத்தும் நிறைவேறும். மாற்றுக் கட்சிக்காரர்களும் ஒத்துழைப்பு கொடுப்பார்கள். கலைத்துறையினரைத் தேடி புதிய வாய்ப்புகள் வரும். புதிய வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளவும். 

  பெண்மணிகள் வீண் வாக்குவாதங்களில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். மாணவமணிகள் படிப்பில் அதிக மதிப்பெண்கள் பெறுவார்கள்.விரும்பிய பாடப் பிரிவுகளும் கிடைக்கும்.

  பரிகாரம்: செவ்வாயன்று முருகப் பெருமானை வழிபட்டு வரவும்.

  அனுகூலமான தினங்கள்: 10, 11. 

  சந்திராஷ்டமம்:  இல்லை.

  {pagination-pagination}

  விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)

  பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். தந்தைவழி உறவினர்களிடம் எதிர்பார்த்த ஆதரவுகளைப் பெறுவீர்கள். செயல்களில் திறமை வெளிப்படும், எதிரிகளின் பலம் குறையும். பெயரும் புகழும் உயரும். குடும்பத்தில் அன்பு, பாசம் அதிகரிக்கும்.

  உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் ஆதரவுடன் வேலைகளை எளிதில் முடிப்பீர்கள். சிலருக்கு விரும்பிய இடமாற்றமும் கிடைக்கும். 

  வியாபாரிகளுக்கு சிக்கல்கள் விலகி, சுமுகமான நிலைமை உருவாகும். வாடிக்கையாளர்களைத் திருப்திப் படுத்துவதில் கவனத்தைச் செலுத்துவீர்கள். விவசாயிகளுக்கு மகசூல் சிறப்பாக இருக்கும். புதிய பயிற்சிகளை உற்பத்தி செய்து லாபம் அடைவீர்கள். 

  அரசியல்வாதிகள் புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டாம். கோரிக்கைகளை தலைமையிடம் கூறிவிட்டு அமைதியாக இருக்கவும். கலைத்துறையினர் அனைத்து வேலைகளையும் நேர்த்தியாக முடிப்பீர்கள். பயணங்களால் நன்மைகள் உண்டு. 

  பெண்மணிகளுக்கு கணவரிடம் ஒற்றுமை மேலோங்கும். உடல்நலத்தில் அக்கறை செலுத்தவும். மாணவமணிகளுக்கு படிப்பில் நாட்டம் அதிகரிக்கும். விளையாட்டிலும் வெற்றி பெறும் காலமிது.

  பரிகாரம்: துர்க்கையை செவ்வரளி மலர் கொண்டு வழிபடவும். 

  அனுகூலமான தினங்கள்: 7, 11. 

  சந்திராஷ்டமம்:  இல்லை.

  {pagination-pagination}
  தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)

  தந்தை வழி உறவினர்களிடம் எதிர்பார்த்த  ஆதரவுகளைப் பெறுவீர்கள். பொருளாதார நிலைமை திருப்திகரமாக இருக்கும். அனைத்து செயல்களிலும் உங்கள் தனித்தன்மை வெளிப்படும். பெயரும் புகழும் உயரும். வீடு வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். 

  உத்தியோகஸ்தர்களின் ஆற்றல் அதிகரிக்கும். மேலதிகாரிகளின் மூலம் சில சஞ்சலங்கள் உண்டாகும். வேலைகளைச் சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல்களில் சீரான நிலைமை தென்படும். வசீகரமான பேச்சினால் வாடிக்கையாளர்களைக் கவருவீர்கள். விவசாயிகள் கடினமான உழைப்பிற்கேற்ற பலனைப் பெறலாம். கால்நடைகளைக் கவனமாக பராமரிக்கவும்.

  அரசியல்வாதிகள் புதிய பொறுப்புகளைப் பெறுவார்கள். பதவி உயர்வையும் பாராட்டையும் பெறுவீர்கள். கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் சுமாராக இருக்கும். ரசிகர்களின் ஆதரவும்  குறைந்திருக்கும். பெண்மணிகளுக்கு கணவருடனான ஒற்றுமை அதிகரிக்கும். வீட்டுக்குப் புதிய பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். 

  மாணவமணிகளின் விருப்பத்தை பெற்றோர் நிறைவேற்றுவர். 

  பரிகாரம்: சனீஸ்வரரையும் ஆஞ்சநேயரையும் வழிபட்டு வரவும். 

  அனுகூலமான தினங்கள்: 9, 12.

  சந்திராஷ்டமம்:  7, 8.

  {pagination-pagination}

  மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)

  குடும்பத்தில் சுப காரியங்களை நடத்துவீர்கள். மதிப்பு மரியாதைகள் உயரும். பெரியோர்களின் உதவியை நாடிப் பெறுவீர்கள். ஆன்மிகத்தில் ஈடுபடுவீர்கள். தாயார் வழி உறவினர்கள் உதவும் நிலையில் இருக்க மாட்டார்கள்.

  உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். வேலைகளில் குறை காணக் காத்திருக்கும் மேலதிகாரிகளிடம் கவனமாக இருக்கவும். பொருளாதாரத்தில் குறைவு ஏற்படாது. 

  வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல்கள் நன்றாக முடியும். புதிய வாடிக்கையாளர்களை நாடிச் சென்று வியாபாரத்தைப் பெருக்குவீர்கள். விவசாயிகளுக்கு சக விவசாயிகளின் மத்தியில் முக்கியத்துவம் கூடும்.  

  அரசியல்வாதிகள் வீண் விவாதங்களில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். மனதைத் தெளிவுடன் வைத்துக் கொண்டு திட்டங்களை நிறைவேற்றவும். 

  கலைத்துறையினருக்கு கடின முயற்சிகளுக்குப்பிறகே புதிய ஒப்பந்தங்கள் கைகூடும்.  பெண்மணிகள் கணவரிடம் ஒற்றுமையோடு பழகுவார்கள். ஆனாலும் காரணமில்லாமல் மனதில் அமைதி குறையும். மாணவமணிகள் கல்வியில் கவனம் செலுத்தவும். மதிப்பெண்களைப் பெறுவதற்கு அதிகமாக உழைக்கவும்.

  பரிகாரம்: திங்களன்று விநாயகருக்கு அருகம்புல் மாலை சாற்றி வழிபடவும். 

  அனுகூலமான தினங்கள்: 14, 12. 

  சந்திராஷ்டமம்:  9, 10.

  {pagination-pagination}

  கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)

  பொருளாதாரத்தில் இருந்து வந்த சிரமங்கள் குறையும். பழைய கடன்கள் வசூலாகும். திட்டமிட்ட வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். சேமிப்பில் ஸ்திரத் தன்மை ஏற்படும். தேக ஆரோக்கியம் நன்றாக இருக்கும். உற்றார் உறவினர்கள் அனுகூலமாக இருப்பார்கள்.

  உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின் பாராட்டுகள் கிடைக்கும். கடமை தவறாமல் உழைக்கவும். வியாபாரிகள் தங்கள் கூட்டாளிகளை விட்டுப் பிரிய நேரிடும். புதிய கடன்களை வாங்கி வியாபாரத்தைப் பெருக்க நினைக்க வேண்டாம். விவசாயிகளுக்கு லாபம் குறையும். இதனால் கூடுதல் வருமானத்தைப் பெற தோட்டப் பயிர்களை பயிரிடவும். 

  அரசியல்வாதிகள் உட்கட்சிப்  பூசலில் சிக்கிக்கொள்ள நேரிடும். கட்சித் தலைமையின் எண்ணப்படி நடந்து கொள்ளவும். கலைத்துறையினருக்கு கடின முயற்சிகளுக்குப் பிறகே புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். திறமையாகச் செயல்பட்டாலும் வெற்றியை எட்டமுடியாது. 

  பெண்மணிகள் குடும்பத்தாரிடம் நன்மதிப்பு பெறுவார்கள். கணவரின் உடல்நலனில் கவனம் செலுத்துவார்கள். மாணவமணிகள் விளையாட்டுகளில் ஈடுபடுவதைக் குறைத்துக்கொண்டு படிப்பில் அக்கறை காட்டவும்.

  பரிகாரம்: சனீஸ்வரரையும் ஆஞ்சநேயரையும் வழிபட்டு வரவும். 

  அனுகூலமான தினங்கள்: 10, 13. 

  சந்திராஷ்டமம்:  11, 12.

  {pagination-pagination}
  மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

  குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உறவினர்களின்ஆதரவு கிடைக்கும். செயல்களை தெளிவுடன் சிந்தித்து ஊக்கத்துடன் செய்து முடிப்பீர்கள். பணவரவு சீராக இருக்கும். செலவுகளும் கூடும். பெரியோர்களைச் சந்தித்து ஆசிகளைப் பெறுவீர்கள். 

  உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு கூடும். பண வரவு சீராக இருக்கும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். வியாபாரிகள் கூட்டாளிகளிடம் எச்சரிக்கையாகப் பழகவும். புதிய முதலீகளைச் செய்ய வேண்டாம். விவசாயிகளுக்கு கொள்முதல் அதிகமாக இருந்தாலும் லாபம் குறைவாகவே இருக்கும். அதனால் வருமானத்தைப் பெருக்க தோட்டப்பயிர் சாகுபடி செய்யவும். 

  அரசியல்வாதிகளுக்கு தூரப்பயணம் ஏற்படும். சமூகத்தில் அந்தஸ்தான பதவிகள் கிட்டும். தேவையில்லாமல் யாரிடமும் பேச  வேண்டாம். கலைத்துறையினரின் வாய்ப்புகள் அதிகரிக்கும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்காது. 

  பெண்மணிகளுக்கு சற்று குழப்பம் இருக்கும். கணவரிடம் மனம் திறந்து பேசி வம்பில் மாட்டிக்கொள்ள வேண்டாம். மாணவமணிகள் படிப்பில் சற்று மந்த நிலையை காண்பார்கள். பெற்றோரை அனுசரித்துச் செல்லவும்.

  பரிகாரம்: புதனன்று பெருமாள்} தாயாரை வழிபடவும். 

  அனுகூலமான தினங்கள்: 9, 12. 

  சந்திராஷ்டமம்:  13.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai