ஜூன் 14 முதல் ஆனிவார திருமஞ்சனம்

திருமலையில் வரும் 14 முதல் 16-ஆம் தேதி வரை ஆனிவார திருமஞ்சனம் நடத்தப்பட உள்ளதாக திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
ஜூன் 14 முதல் ஆனிவார திருமஞ்சனம்

திருமலையில் வரும் 14 முதல் 16-ஆம் தேதி வரை ஆனிவார திருமஞ்சனம் நடத்தப்பட உள்ளதாக திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
 திருமலையில் உள்ள அன்னமய்யா பவனில் தொலைபேசி மூலம் பக்தர்கள் குறைகேட்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது. இதில் பங்கேற்று கேள்வி எழுப்பிய பக்தர்களுக்கு தேவஸ்தான செயல் அதிகாரி அனில்குமார் சிங்கால் பதிலளித்தார். அதன் பின் அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
 திருமலையில் வரும் 14 முதல் 16-ஆம் தேதி வரை ஆனிவார திருமஞ்சனம் நடத்தப்பட உள்ளது. அப்போது, மலையப்ப சுவாமிக்கு அணிவிக்கப்பட்டிருக்கும் தங்கக் கவசம் அகற்றப்படும். அது செப்பனிடப்பட்டு 3 நாள்களுக்குப் பின் சுவாமிக்கு மீண்டும் அணிவிக்கப்படும். இதையொட்டி அந்த 3 நாள்களும் சில ஆர்ஜித சேவைகள் ரத்து செய்யப்படும். சீனிவாசமங்காபுரத்தில் உள்ள கல்யாண வெங்கடேஸ்வரர் கோயிலில் வரும் 13-ஆம் தேதி மகா சம்ப்ரோக்ஷணம் நடைபெற உள்ளது.
 ஏழுமலையான் கோயிலுக்கான ஆர்ஜித சேவா டிக்கெட்டுகள் மட்டுமின்றி திருப்பதியில் உள்ள தேவஸ்தானம் நிர்வகிக்கும் கோயில்களின் ஆர்ஜித சேவா டிக்கெட்டுகளும் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு வெளியிடப்பட்டன. இதையடுத்து, செப்டம்பர் மாதத்திற்கான ரூ.300 விரைவு தரிசன டிக்கெட்டுகள் தேவஸ்தான இணையதளத்தில் வரும் 11-ஆம் தேதி வெளியிடப்படும்.
 ஏழுமலையானை கடந்த மாதம் 25.89 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்தனர். தேவஸ்தானம் வெளியிட்டு வரும் "சப்தகிரி' ஆன்மிக மாத இதழுக்கு 2 லட்சம் சந்தாதாரர்கள் உள்ளனர். திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் பக்தர்கள் காத்திருக்க புதிய மண்டபம் கட்டப்பட்டுள்ளது என்றார் அவர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com