Enable Javscript for better performance
அடையாரில் அருளும் அனந்த பத்மநாபசுவாமிக்கு ஜூன் 20-ல் மகாகும்பாபிஷேகம்- Dinamani

சுடச்சுட

  

  அடையாரில் அருளும் அனந்த பத்மநாபசுவாமிக்கு ஜூன் 20-ல் மகா கும்பாபிஷேகம்

  By DIN  |   Published on : 10th June 2019 11:42 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  kumbabishegam

   

  சென்னை அடையார் என்றவுடன் நமக்கு நினைவிற்கு வருவது ஸ்ரீ அனந்த பத்மநாப சுவாமி ஆலயம் தான்! திருவனந்தபுரத்தில் அருள்பாலிப்பது போல ஸ்ரீ அனந்த பத்மநாபர் அடையாருக்கும் தன் பெருங்கணையால் எழுந்தருளியுள்ளதாகக் கருதலாம். 

  ஆதிப்பரம்பொருள் நாரணர் அனந்தன் மேலே துயில் கொள்ளும் அற்புத மூலவர் சந்நிதி மூன்று வாயில்கள். பிறப்பு, வாழ்வு, ஓய்வு என்று இந்த அமைப்பினை பெரியவர்கள் சிலாகித்து கூறுகின்றனர். முதல் வாயிற்கதவின் மூலமாக ஸ்ரீ அனந்த பத்மநாப சுவாமியின் திருமுக தரிசனம் மற்றும் சிவலிங்கத் திருமேனியின் மேல் வைத்த வலக் கரத்தின் தரிசனம் ஆகியன காணலாம். நடுவாயிலில் பெயருக்கு ஏற்றவாறு நாபிக்கமலத்தின் மேலே (தொப்பூழிலிருந்து மேலே எழுந்துள்ள தாமரை மலரின் மீது) பிரம்ம தேவனின் தரிசனம், இடக்கை தொடையில் சாய்த்தவாரே தாமரை மலரைப் பற்றியிருக்கும் பேரழகின் தரிசனம், மூன்றாம் வாயிலில் திருப்பாத சேவை ஆகியவைக் கண்டு பிறவிப்பயனை எய்துகின்றோம். 

  ஒரே கருவறையில் மூம்மூர்த்திகளையும் தரிசிக்கும் பேற்றினைப் பெறுகின்றோம். நடுவிலே உற்சவர் தேவிமார்களுடன் அருள்பாலிக்க ஸ்ரீ தேவி, பூதேவி தாயார்களின் மூலவிக்ரகம் ஒருவரை ஒருவர் நோக்கியவாறு இருப்பது யார் பெருமாளை இப்பூவலகில் அனந்த பத்மநாபராக தரிசிக்கின்றார்களோ அவர்களை இப்பூலகின் செல்வச் சக்ரவர்த்தியாக மாற்றுவோம் என்று சொல்லுவது போல் தெரிகின்றது. பிருகு முனிவரும், மார்க்கண்டேய மகரிஷியும் நித்ய சேவை செய்யும் பேறு பெற்றவர்களாய் தலைமாட்டிலிலும், பாதத்தின் அருகிலும் அமரும் பேற்றினைப் பெற்றுள்ளார்கள்.

  ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ கருடர், ஸ்ரீ ஆஞ்சநேயர், ஸ்ரீ சுதர்ஸனர், ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர், ஸ்ரீ அஷ்டாதசபுஜ மகாதுர்கா, நவக்கிரகங்கள் ஆகியோர்கள் சந்நிதி கொண்டு மூலவரைச்சுற்றி அருள்கூட்டுகின்றார்கள். ஆண்டு முழுவதும் திருவிழாக்கள், ரதோத்ஸவம், வைகுண்ட ஏகாதசி உற்சவம் எனக்கோலகலமாக நித்யகல்யாண உற்சவங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

  தற்போது 6-ஆவது மகாகும்பாபிஷேகம் வருகின்ற ஜூன் 20 -ஆம் தேதி வியாழன் காலை 7.30 மணிக்குமேல் 9.00 மணிக்குள் நடமாடும் கிருஷ்ண ஸ்வரூபமாகவே விளங்கும் பரமபூஜ்ய ஜகத்குரு பதரீ சங்கராச்சார்ய ஸ்ரீ க்ஷேத்ர சகடபுரம் ஸ்ரீ வித்யா பீடாதீஸ்வர ஸ்ரீ வித்யா பிநவ ஸ்ரீஸ்ரீ கிருஷ்ணானந்த தீர்த்த மஹாஸ்வாமிகளின் அமுத பொற்கரங்களால் நிகழ்த்தப் பெற உள்ளது. பூர்வாங்க ஹோமங்கள் பூஜைகள் ஜூன் 17 -ஆம் தேதி திங்கள்கிழமை காலை கணபதி ஹோமத்துடன் துவங்குகின்றது. 

  பக்தர்கள் இந்த சிறப்பு வாய்ந்த மகாகும்பாபிஷேகத்தை தரிசித்து ஸ்ரீ தேவி பூதேவி சமேத ஸ்ரீ அனந்த பத்மநாம சுவாமியின் பேரருளுக்கு பாத்திரராகும்படி திருக்கோயிலின் பரம்பரை அறங்காவலர்கள் கேட்டுக் கொள்கின்றனர். 

  தொடர்புக்கு: 044-2441 2529

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai