சுடச்சுட

  

  மதுரவாயல் சிவ சுடலைமாட சுவாமிக்கு ஜூன் 14-ல் மகா கும்பாபிஷேகம்

  By DIN  |   Published on : 11th June 2019 06:11 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  sudalai

   

  சென்னை, மதுரவாயல் கிருஷ்ணா நகரில் உள்ள ஸ்ரீசிவசுடலைமாட சுவாமி திருக்கோயிலில் 14.06.2019-ம் தேதி மஹா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. 

  சிவசுடலைமாட ஸ்வாமி தென்னக மாவட்டங்களைப் பூர்வீகமாகக் கொண்ட பல லட்சம் பேரின் குலதெய்வமாகும். சென்னையே சேர்ந்த பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் "கனல்" கண்ணன் மாடன் சாமிக்கு கோயில் கட்டியுள்ளார். 

  அருள்மிகு ஸ்ரீசிவசுடலைமாட சுவாமி கோயில் கட்டி, பதினான்கு ஆண்டுகளாக பொதுமக்களால் வழிபட்டு வரப்படுகிறது. அக்கோயிலின் கும்பாபிஷேகம் நிகழ்ச்சிகள் வருகிற 12.06.2019 முதல் தொடங்கி 14.06.2019 வரை நடைபெற இருக்கிறது. 

  வைகாசி மாதம் 31-ம் தேதி 14.06.2019 வெள்ளிக்கிழமையும், வளர்பிறை துவாதசி திதியும் கூடிய சுபயோக சுபதினத்தில் அன்று காலை 6.30 மணிக்கு மேல் 8.00 மணிக்குள் மிதுன லக்னத்தில் ஆலய விமானம், இராஜ கோபுரம் மற்றும் மூலஸ்தானம் மஹா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. 

  பக்த பெருமக்கள் அனைவரும் கலந்துகொண்டு எல்லாம் வல்ல ஸ்ரீசிவசுடலைமாட சுவாமி, ஸ்ரீஇசக்கியம்மன், ஸ்ரீகருப்பசாமி திருவருள் பெற்று வாழ்வாங்கு வாழ பிரார்த்தனை செய்து கொள்கிறோம். 
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai