சுடச்சுட

  

  கல்யாண வெங்கடேஸ்வரர் கோயிலில் அஷ்டபந்தனம் சமர்ப்பணம்

  By DIN  |   Published on : 12th June 2019 02:31 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  kalyanavenkadeswar

  சிலைகளின் பீடத்தில் சமர்ப்பிக்க அஷ்டபந்தன சூரணத்தைத் தயாரித்த அர்ச்சகர்கள் உள்ளிட்டோர்.


  திருப்பதியை அடுத்த சீனிவாசமங்காபுரத்தில் உள்ள கல்யாண வெங்கடேஸ்வரர் கோயிலில் அஷ்டபந்தனம் சமர்ப்பிக்கப்பட்டது.
  இக்கோயிலில்  வியாழக்கிழமை (ஜூன் 13) மகா சம்ப்ரோக்ஷணம் நடைபெற உள்ளது. அதற்கான வைதீக காரியங்கள் கோயிலில் நடந்து வருகிறது. அவற்றின் ஒரு பகுதியாக, அர்ச்சகர்களும், பண்டிதர்கள் இணைந்து எட்டு பொருள்களை உரலில் இட்டு இடித்து, அஷ்டபந்தனம் என்ற சூரணத்தை செவ்வாய்க்கிழமை தயாரித்தனர். 
  இதையடுத்து, கோயிலில் உள்ள சிலைகள், கொடிமரம், பலிபீடம் ஆகியவற்றின் பீடங்களில் அஷ்டபந்தனம் சமர்ப்பிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் கோயில் அதிகாரிகள் கலந்து கொண்டனர். 
  கல்யாண வெங்கடேஸ்வரர் கோயிலில் புதன்கிழமை மகாசாந்தி ஹோமம், மகாபூர்ணாஹுதி உள்ளிட்டவை நடைபெற உள்ளன.    

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai