Enable Javscript for better performance
சங்ககிரி ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோயிலில் கும்பாபிஷேக விழா- Dinamani

சுடச்சுட

    

    சங்ககிரி ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோயிலில் நாளை கும்பாபிஷேக விழா

    Published on : 13th June 2019 10:52 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    kumbabishegam

     

    சங்ககிரி வட்டம், கஸ்தூரிபட்டி கிராமத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ மஹா கணபதி, ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா வெள்ளிக்கிழமை காலை 6 மணிக்கு நடைபெறுகிறது.

    கும்பாபிஷேகத்தையொட்டி, கோயில் வளாகத்தில் ஜூன் 13 வியாழக்கிழமை கணபதி, லட்சுமி பூஜைகளோடு முதல்கட்ட யாகசாலை பூஜைகள் தொடங்குகின்றன.

    அன்றைய தினம் காவிரியிலிருந்து புனித தீர்த்தம் எடுத்து வருதலும், கோபுரத்தில் கலசங்கள் நிறுவதலும் நடைபெற உள்ளன. அதனையடுத்து, ஜூன் 14 வெள்ளிக்கிழமை 2-ஆம் கட்ட யாகசாலை வேள்வி பூஜைகளும், இதனையடுத்து கும்பாபிஷேகமும் நடைபெற உள்ளன. விழாவுக்கான ஏற்பாடுகளை விழாக் குழுவினர் செய்து வருகின்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai