சுடச்சுட

  
  Prayer

   

  சத்துவகுணம், ரஜோ குணம் மற்றும் தமோ குணம் ஆகிய மூன்று குணங்களில் ஒரு குணம் ஒருவனுக்கு அதிகமாக இருக்கும். இந்த மூன்று குணங்களில் சத்துவ குணமே நல்ல குணமாகும்.
   
  ரஜோ குணம் உள்ளவன் கோபக்காரனாகவும், தமோ குணம் உள்ளவன் மந்த புத்தி உள்ளவனாகவும் இருப்பான். சத்துவ குணம் வளர பல வழிகள் உள்ளன. அவற்றில் ஒன்று உணவுப் பழக்கம் ஆகும்.

  முதலில் நாம் சாப்பிடுவதால் ஏற்படும் பின்விளைவுகளை நினைத்து சாப்பிட வேண்டும். எப்படி தூண்டிலில் உள்ள தீனியை நினைக்காத மீனும் பொறியில் உள்ள உணவைப் பற்றி நினைக்காத எலியும் மாட்டிக் கொள்ளுமோ அவ்வாறு பார்த்தது எல்லாவற்றையும் சாப்பிட்டு விட்டு மாட்டிக் கொள்ளக் கூடாது. 

  எது செரிக்குமோ அதைத்தான் சாப்பிட வேண்டும். அவ்வாறு செரித்தாலும் எது உடம்புக்கு ஆரோக்கியம் கொடுக்குமோ அதைத்தான் சாப்பிட வேண்டும். சாப்பிடச் சுவையாக இருக்கின்றது என்று எண்ணிச் சாப்பிட்டு விட்டு அது உடம்புக்குக் கெடுதல் செய்யுமானால் அதைச் சாப்பிடக் கூடாது. அடுத்து அதிக காரம், சூடு, உப்பு, கார்ப்பு கொண்ட உணவுகளைச் சாப்பிடக்கூடாது. 

  இவ்வாறு சாப்பிட்டால் நமக்கு ரஜோ குணம் தான் வளரும். அடுத்து மிச்சத்தைச் சாப்பிடக்கூடாது. எச்சில் படாத உணவைத் தான் சாப்பிட வேண்டும். அவ்வாறு சாப்பிட்டால் நமக்கு தமோ குணமே வளரும். அடுத்து எத்தனை வேளை சாப்பிட வேண்டும் என்றும் கூறியுள்ளார். 

  ஒரு வேளை சாப்பிடுபவன் யோகி

  இரண்டு வேளை சாப்பிடுபவன் போகி

  மூன்று வேளை சாப்பிடுபவன் ரோகி

  அதற்கு மேல் அதாவது நான்கு, ஐந்து வேளைகளைப் பற்றி அவர் கூறவில்லை. அவ்வாறு சாப்பிடுவோம் என்று நினைக்கவில்லை போலும். சத்துவ குணம் இருந்தால்தான் பகவானைப் பற்றி சிந்தனை வரும். இல்லை என்றால் சிந்தனையே வராது. இவ்வாறு சத்துவ குணம் வளர சாப்பிட வேண்டிய உணவுப் பழக்கத்தைப் பற்றி விதுர நீதியில் கூறியுள்ளார்.

  "நவகோடி சித்தர்கள் திருவடிகளே சரணம்"

  "ஆன்ம ஞானத்தை அடைய சித்தர்கள் வழிகாட்டுதல் அவசியம் என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்தி அகிலம் புகழும் பாரதத்தை உருவாக்குவோம்"

  - கோவை பாலகிருஷ்ணன் 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai