ஆற்காட்டை அடுத்த தாஜ்புரா கிராமத்தில் பொன்னியம்மன் கோயில் கும்பாபிஷேம் வியாழக்கிழமை நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு, நவகிரஹ பூஜை, கோ பூஜை உள்ளிட்டவை நடைபெற்றன. தொடர்ந்து, கலசப் புறப்பாடுடன் கோயில் கோபுர கலசங்களுக்கும், மூலவர்களுக்கும் புனித நீர் வார்க்கப்பட்டு, கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து, மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னர், சுவாமி திருவீதி உலா வந்தது.