பஞ்சாங்கத்தில் ஐந்து அங்கங்களில் முக்கிய பங்கு திதிகளுக்கு! (பகுதி 1)

பஞ்சாங்கத்தில் அங்கத்தின் ஒரு முக்கிய அங்கம் திதிகள். திதி என்றவுடன் திவசம், சிராத்தம் என்று நினைப்போம்.
பஞ்சாங்கத்தில் ஐந்து அங்கங்களில் முக்கிய பங்கு திதிகளுக்கு! (பகுதி 1)

  
பஞ்சாங்கத்தில் அங்கத்தின் ஒரு முக்கிய அங்கம் திதிகள். திதி என்றவுடன் திவசம், சிராத்தம் என்று நினைப்போம். அதுதவிர சில சூட்சமங்களும் உள்ளன. பிறந்த ஜாதகத்தில் முக்கியமானவை கிரகங்கள் அமர்ந்த நட்சத்திரம் மற்றும் திதி ஆகும். பஞ்சபூதத்தில் நீரின் தத்துவம் கொண்டது இந்த திதிகள். இவற்றின் கிரக அதிபதி அசுரர்குரு சுக்கிரன் ஆவர். திதியென்றால்  தூரம் அல்லது  தொலைவு என்று  அர்த்தம். சூரியனுக்கும் சந்திரனுக்கும் உள்ள இடைப்பட்ட தொலைவு திதி ஆகும். ஜாதகருக்கு தெய்வ அருள் கிட்ட நட்சத்திர மற்றும் திதி தெய்வங்களையும், சித்தர்களையும், ஆசான்களையும் வணங்குவார்கள். 

நம் இந்திய காலெண்டரில் ஒவ்வொரு மாதமும் 30 திதிகள் கடவுளால் உருவாக்கப்பட்டன. எப்படி என்று கேட்கிறீர்களா சுருக்கமான கதையைச் சொல்லுகிறேன். சந்திரன் தன் பணிகளை முப்பது நாட்களும் சரியாக செய்ய முடியவில்லை இதை அறிந்த ஈஸ்வரன் சந்திரனிடன் கேட்டபொழுது அவர் என்னால் எல்லா நாட்களும் தொடர்ந்து என்னால் பணியினை செவ்வனே ஒரேமாதிரி செய்ய முடியவில்லை. என்னுடைய  உடலும் ஒத்துழைக்க மறுகின்றது, எனக்கு பணியினை குறைத்துச் சிறு ஓய்வு கொடுக்கவும் என்று கேட்டார் சந்திரன். சிவனும் அதற்கு இணங்க பாதி நாட்கள் நீ வளர்பிறையாக இருந்து சுபராகவும் மீதி பாதி தேய்பிறையாக இருந்து அசுபரவும் நிகழ்வாய் உன்னைப் பார்வையிட திதிகள் என்ற வேலையாட்களை நியமிக்கிறேன் என்று கட்டளையிட்டார். சந்திரனின் முழுநேர வேலையை பௌர்ணமி காலங்களில் உலகிற்கு அதிக ஒளி சக்தியை சூரியனின் பார்வையில் ஒளிறுவாய் மற்றும் அமாவாசை காலங்களில் ஒளியிழந்து முழுநேர வேலை தொடராமல் அமைதி நிலையில் இருண்டு இருப்பாய் என்று வரம் அளித்தார்.

திதிகளில் வலிமை சூரியனின் ஒளி சந்திரனோடு சேரும்பொழுது ஒளி இழந்த அமாவாசையாக திகழ்கிறது அதற்கு பிறகு வரும் மதி வளர்த்துக்கொண்டு 14 வளர்பிறை (சுக்லபட்சம்) திதிகளான பிரதமை, துவிதியை, திருதியை, சதுர்த்தி, பஞ்சமி, சஷ்டி, சப்தமி, அஷ்டமி, நவமி, தசமி, ஏகாதசி, துவாதசி, திரயோதசி, சதுர்த்தசி தாண்டி, பின்பு  சூரியன் நேர் எதிர்கோட்டில் 180ºயில்  சந்திரன் திகழும்பொழுது சிவனானவர் சக்தியின் பார்வையில் ஒளியானது தன் முழு சக்தியை பார்வதி பெறுகிறது அதுவே பூர்ண பௌர்ணமி அன்று மகா சக்தியாக திகழ்வாள் நம் அம்பிகை. அதற்கு பிறகு வரும் மறுசுழற்ச்சியாக தேய்பிறை (கிருஷ்ணபட்சம்)  திதிகள் வந்துகொண்டு இருக்கும்.  சூரியப் பாதையின் தளத்தில், புவியில் இருந்து பார்க்கும்போது சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடையிலான சுற்றும் மொத்த 360 பாகை, ஒரு திதி 12 பாகை மொத்தம் 30 திதிகள்  (360/30)

தள்ளிவைக்கப்பட்ட மூன்று திதிகள் 

பிரதமை

இந்திய சமயத்தில் மூன்று திதிகளான பிரதமை, அஷ்டமி, நவமி, காலங்களில் எந்தவித நல்ல காரியங்களும் (திருமணம், கிரஹப் பிரவேசம், சொத்து வாங்குதல்). செய்யாமல் இருப்பார்கள். இதனால் வருத்தம் கொண்ட திதிகள் கடவுளிடம் அழுது முறையிட்டனர். அதற்கு கடவுள் உங்கள் மூவரையும் நான் சிறப்பித்து கொண்டாடச் செய்கிறேன் என்று வாக்களித்தார். அதன்படி முக்கிய கடவுளின் அவதாரம் இந்த மூன்று திதியில் நடைபெற்றது.

பிரதமை என்றால் முதன்மை மற்றும் முதல் திதி ஆகும். முதல் சந்திர நாள் இந்த திதியில் பிறந்தவர்கள் சுக வாழ்வு வாழ்வார்கள். பூஜைகள் மற்றும் மங்கல காரியங்கள் செய்ய, சித்திர வேலைபாடு செய்தல், போர் தொடுத்தல், யாககங்கள், ஆநிரை கவர்தல், போருக்கான துவக்கங்களை அன்று செய்யலாம், அக்னி சம்பந்தபட்ட காரியங்கள் செய்ய உகந்த திதி ஆகும் .

முழு மதி (நிலவிற்கு) பிறகு வரும் நாட்கள் சந்திரனால் தன் இயக்கத்தை சரிவர செய்யமுடியாம தேய்ந்து கொண்டு வரும் அப்பொழுதுதான் தேய்பிறை நிகழ்வு நடக்கும். ஒளி இழகும்பொழுது எந்த சுபகாரியம் செய்ய முடியாது. பெளர்ணமிக்குப் பிறகு தேய்வு பெற்ற சந்திரன் சக்தி அறிந்து இதனை பாட்டிமை, பாட்டிமுகம் என்றெல்லாம் பலவாறாக அழைப்பார்கள். அதனையே பிரதமை திதி என்றகாக்கிறோம் அந்த திதியில் எதுவும் செய்யக் கூடாது என்பார்கள். 

அறிவியல் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியில் ஆத்ம காரகன் சூரியனும், மனதும் உடலுக்குரியவன் சந்திரனும் இணைவு நேரம் அமாவாசை அன்று இந்த பிரபஞ்ச நிலை மற்றும் உடல் நிலை மாற்றம் நிகழும். அந்த நேரம் கடல் மாற்றம் நிகழும். நீண்ட நாள் நோயுற்றவர்களை அமாவாசையைத் தாண்டுமா என்று பேச்சு வழக்கில் சொல்லுவார்கள். அமாவாசை, அதற்கு முதல் நாள், அல்லது மறுநாளான பிரதமை திதிகளில் உயிர் நீப்போரின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். அதற்குக் காரணம், சந்திரனின் ஒளி சக்தி உடலில் வலிமையைக் குறைத்துவிடும்.

பிரதமைக்கு அதிதேவதை மற்றும் கிரகம்: அக்னி, சூரியன்  

வணங்கும் தெய்வங்கள் :  குபேரன் மற்றும் பிரம்மா, துர்க்கை

அஷ்டமி

அஷ்டமியில் பிறந்தவர்கள் மனைவியின் சொல் கேட்டு நடப்பர், துணைவருக்கு உகந்து நடப்பர், பேச்சாற்றல் கொண்டவர்கள்.  அஷ்டமி நாளில் புதிய கலைகளை துவங்குதல், ஆயுதம் எடுத்தல், அரண் அமைத்தல், பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம், தானியம், சிற்பம், தளவாடம் வாங்கலாம் மற்றும் தற்காப்பு கலை கற்றல் ஆகியவை உகந்தது.

நம் முன்னோர்கள் சாதாரணமாக அஷ்டமி, நவமியில் தொட்டது துலங்காது என்றொரு பழமொழி உண்டு. எட்டின் ஆதிக்கம் கொண்ட சனி ஆட்சியோ உச்சமோ அல்லது  மகர, கும்ப ராசிக்காரர்களும் பாதிப்பு அவ்வளவாகக் கொடுக்காது. அஷ்டம என்றால் எட்டு என்பதாகும்.  அதனால் 8 மற்றும் அதன் கூட்டு தொகையில் கொண்டவருக்கு அஷ்டமியில் பாதிப்பு  நிகழாது .
அஷ்டமியன்று தேவியை வணங்கினால் தீய சக்திகளான ஏவல், பில்லி, சூனியம் போன்றவை  அழிப்பதற்காகக் காளி, நீலி, துர்க்கை அம்மன், பிரத்யங்கரா தேவி, இந்திராணி என்று ஆக்ரோஷமான தோற்றத்துடன் அருள் கொடுத்து நம்மை காத்தருளுவாள். 

அஷ்டமி திதிக்கு அதிதேவதை மற்றும் கிரகம்: ஐந்து முகம் கொண்ட ருத்ரன் , ராகு வணங்கும் தெய்வங்கள் :   காலபைரவர், மகா காளி மற்றும் துர்க்கை

நவமி

நவமி திதியில் பிறந்தவர்கள் கலைநாட்டம் கொண்டவர்கள், தைரியமானவர்கள், பாசக்காரர்கள். இது சத்ரு பயம் நீக்கும் திதி மற்றும் கெட்ட விஷயங்களை அழிப்பதற்கான செயல்களை, எதிரிகளை வதம் கொள்ளுவர், கைவனை சிறைபிடித்தல் இந்நாளில் செய்வார்கள். மாந்த்ரீகத்திற்கு இந்த திதியை பயன்படுத்துவார்கள். நவமி என்றால் ஒன்பதாவது திதி, நவமியன்று திதிக்குரிய தெய்வத்தை வணங்கும்பொழுது, ‘நவ நவமாய் பெருகும்..’ என்று ஒரு அர்த்தம் உண்டு. அதாவது நவக்கிரகங்கள் நவரத்தினங்கள், நவதானியங்கள், நவயோகங்கள், நவரசங்கள், நவபாஷாணங்கள், நவகற்பங்கள், நவநிதிகள் ஆகிய எல்லாம் அதற்கேற்ப நமக்குக் கிட்டும்.
  
நவமி திதிக்கு அதிதேவதை மற்றும் கிரகம்: அம்பிகை, சூரியன்  

வணங்கும் தெய்வங்கள் :  சரஸ்வதி

இன்னும் வரும் பகுதிகளில் மற்ற திதிகளும் மற்றும் ஒதுக்கிவைக்கப்பட்ட திதிகளில் ஏற்படும் சுபநிகழ்வுகளை பார்ப்போம்.

- ஸ்ரீ லட்சுமி ஜோதிட நிலையம்

ஜோதிட சிரோன்மணி தேவி 

Email: vaideeshwra2013@gmail.com
Whatsapp:  8939115647

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com