பஞ்சாங்கத்தில் ஐந்து அங்கங்களில் முக்கிய பங்கு திதிகளுக்கு! (பகுதி 2)

ஒதுக்கிவைக்கப்பட்ட திதிகளில் அவதரித்த புருஷர்கள் மற்றும் சுப நிகழ்வுகள்
பஞ்சாங்கத்தில் ஐந்து அங்கங்களில் முக்கிய பங்கு திதிகளுக்கு! (பகுதி 2)

ஒதுக்கிவைக்கப்பட்ட திதிகளில் அவதரித்த புருஷர்கள் மற்றும் சுப நிகழ்வுகள்

பெரியவா ஜெயந்தி: என் குருநாதர் காஞ்சி மகாபெரியவா அவதரித்தது சுபம் பெற்ற உயர்ந்த அனுஷ நட்சத்திரம், கிருஷ்ணபட்ச பிரதமை திதி அவதரித்தார். சுக்லப்பட்ச  பிரதமையில் மறுபிறவியான சந்நியாசம் பூண்டார்.

கோகுலாஷ்டமி: அஷ்டமியில் ஸ்ரீகிருஷ்ணர் அவதரித்ததால் இந்துக்கள் கோகுலாஷ்டமி பண்டிகையாகக் கொண்டாடுகிறார்கள்.

ஸ்ரீராம நவமி: ராமர் அவதரித்தது நவமி திதியில் அன்று முக்கிய பூஜைகள் நடைபெறும்.  

சந்திரமான யுகாதி: சித்திரை மாதச் சுக்கிலபட்ச பிரதமை சந்திர ஆண்டு பிறப்பு. 

நவராத்திரி பூஜை: ஐப்பசி மாத சுக்கிலபட்சப் பிரதமைத் திதி முதல் 9 திதி முடிய இந்த விழா லட்சுமி, சரஸ்வதி, துர்க்கையாகிய சக்திகளைப் பூஜிக்கும் ஒன்பது தினமாகக்  கொண்டாடப்படுகிறது. இம்மூவரையும் முறையே ஒவ்வொருவருக்கு மூன்று தினமாக ஒன்பது நாளும் பூசித்து வருகிறார்கள் நம் மக்கள். அஷ்டமி திதியில் தான்  சக்திக்குரிய பலம் அதிகமாக இருக்கும்.  

விநாயக சஷ்டி விரதம்: இது கார்த்திகை மாதத்துக் கிருட்டிண பட்சப் பிரதமை முதல் மார்கழி மாதத்துச் சுக்கிலபட்ச சஷ்டி ஈறாகிய 21 நாள்களும் விநாயகரை எண்ணி  வழிபாடு நடைபெறும். அப்பொழுது எல்லா செல்வமும் கிட்டும்.

மற்ற திதிகள் பற்றிப் பார்ப்போம். திதிகளில் வளர்பிறை துவிதியை, திருதியை, பஞ்சமி, சப்தமி, தசமி, ஏகாதசி, துவாதசி, திரயோதசி ஆகியவை யோக திதிகள் அன்று  விசேஷமானவை. தேய்பிறையில் துவிதியை, திருதியை, பஞ்சமி மூன்றும் சிறப்பானவை அன்று சுப காரியங்கள் செய்யலாம்.

துவிதியை
திதியின் இரண்டாம் நாள் துவிதியை ஆகும். இந்த திதியை பத்ரை திதிக்குள் அடங்கும். ஹிந்தியில் தோ (இரண்டு) என்றும் சைக்கிளை துவிச் சக்கர வண்டி என்றும்  கூறுவார். தேய்பிறையில் வரும் துவிதியை இரு கண்ணுள்ள திதி என்பர். துவிதியை திதியில் பிறந்தவர்கள் பொய் சொல்லாதவர்களாக்கவும், பொன்னும் பொருள்  சேர்ப்பவன், தன் இனத்தாரை வளர ஆர்வம் கொண்டவன், பிரபஞ்சத்தில் புகழுடையவர்களாகவும், வாக்கு மாறாதவர்களாகவும், கவிதை எழுதுபவராகவும், கால்நடை   வளர்ப்பவராகவும்  மற்றும் முயற்சியாளர். இந்த திதி நாட்களில் ஆன்மீக பயணம் செய்து கடவுளுக்கு விளக்கேற்ற சுத்த நெய் கொடுக்கலாம். 

துவிதியை திதியில் புல்லால் செய்யக்கூடிய வேலைகள், வண்டி வாகனங்களை வாங்கலாம், தேவதா பிரதிஷ்டை செய்யலாம், தெய்வங்களுக்கு விரதம் இருக்கலாம், புது  ஆடை ஆபரணங்கள் தயாரித்தல் மற்றும் உடுத்திக்கொள்ளலாம். ஸ்திரமான காரியங்கள், அரசு காரியங்கள் செய்யலாம், திருமண காரியங்கள் செய்தல், கட்டிடம்  கட்டுவதற்கான அஸ்திவாரம் அமைத்தல் நன்மை தரும். 

துவிதியை திதிக்கு அதிதேவதை மற்றும் கிரகம்: துஷ்ட தேவதை, சந்திரன்   
வணங்கும் தெய்வங்கள்: பிரம்ம தேவர் மற்றும் வாயு 

திருதியை திதி

திருதியை என்றால் மூன்றாம் நாள் திதியாகும். இந்த திதி சபை திதிக்குள் அடங்கும். தேய்பிறையில் வரும் திரிதியை இரு கண்ணுள்ள திதி என்றழைப்பர். இந்த திதியில்  பிறந்தவர்கள் நல்ல குணமுடையவராகவும், உயர்ந்த பிரபு தனவான் என்று அழைக்கப்படுபவராகவும், ஆலயங்களுக்குத் தர்மம் செய்பவனாகவும் தீய செயல் செய்யப்  பயப்படுபவராகவும், எண்ணிய காரியத்தை முடிப்பவன், பயம் உள்ளவன், பராக்கிரமம் உடையவன், சுத்தமுடையோன், திருக்கோவில் கைங்கரியமும் மற்றும் பக்தருக்குத்  தர்மம் செய்பவன், பலசாலியாகவும் இருப்பார் என்று அகத்தியர் தன் பாடல்களில் கூறியுள்ளார். 

திருதியை அன்று கெளரி மாதாவுக்கு உகந்த நாள், குழந்தைக்கு முதன்முதல் அன்னம் ஊட்டலாம், வீடு கட்டுதல், கிரக பிரவேசம், பெண் பார்த்தல், சங்கீதம் கற்க  ஆரம்பிக்கலாம், சீமந்தம் செய்யலாம். சிற்ப காரியங்களில் ஈடுபடலாம், முகச்சவரம், சிகை திருத்தம் செய்தல், நகம் வெட்டுதல் அழகுக் கலையில் ஈடுபடலாம். சகல சுப  காரியங்களுக்கும் உகந்த திதி. ஒளிரும் கிரகங்கள் சூரியன் சந்திரன் 36º பயணம் செய்யும்பொழுது, சித்திரை மாதத்தில், வளர்பிறையில் திருதியை திதியில், சந்திரன்  ரோகிணியில் பயணிக்கும் காலம் அக்ஷய த்ரிதியாகும். இரண்டு ஒளி கிரகங்கள் உச்சம் பெற்ற நிலை திரிதியை உயர்த்தும் என்பது உண்மை. அன்று நாம் என்ன  செய்கிறோமோ அது பலமடங்காகப் பெருகும் என்பது நியதி. முதல் யுகமான கிருதயுகத்தில் பிரம்மனால் உலகம் தோற்றுவித்த நாள் அட்சய திருதியை ஆகும். இந்த திதியில்  தான் குசேலன் கிருஷ்ணரிடமிருந்து அவலைப் பெற்றுச் செல்வதில் மற்றும் நட்பில் உயர்ந்தார். திரௌபதிக்கு கிருஷ்ணன் அளவற்ற துணியை அருளி அவமானத்திலிருந்து  மீட்டார். சிவபெருமான் அன்னபூரணியிடம் பிட்சாடனராக வந்து யாசகம் பெற்றது இந்த அட்சய திருதியை தினத்தன்று தான். பரசுராமன் இந்த திதியில் தான் பிறந்தார்.  இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். 

அதிதேவதை மற்றும் கிரகம்: பார்வதிதேவி(பராசக்தி)., செவ்வாய்
வணங்கும் தெய்வங்கள்: சிவன் மற்றும் கௌரி மாதா (வளர்பிறை) அக்னி (தேய்பிறை)

சதுர்த்தி திதி

சதுர்த்தி என்றால் நான்காம் நாள் வரும் திதி. சதுரம் நான்கு பக்கங்கள் கொண்டது என்பர். நான்காம் நாள் எமன் மற்றும் வினாயகருக்குரிய நாள். பிள்ளையார் இந்த திதியில் பிறந்தவர். இந்த திதியில் பிறந்தவர்கள் ரகசியம் நிறைந்தவர்களாக மற்றும் பேராசை கொண்டவர்களாக, தைரியமிக்கவர்கள், தந்திரவாதிகள், அளவற்ற காரியங்களை சிந்திப்பவன், நட்புறவாக, வெளி ஊர் பிரயாணம் செய்துகொண்டு இருப்பார்கள்.

இத்திதி தினங்களில் கடன்களை அடைக்க, நெடு நாள் பகையைச் சமரசம் செய்துகொள்ள, வேதங்களை கற்க, தடை தகர்த்தல், போர் காரியங்கள் செய்ய, எதிரிகளை  வெல்ல, விஷ சாஸ்திரம், நெருப்பு சம்பந்தமான காரியங்களை செய்ய உகந்த திதி. 

வளர்பிறை சதுர்த்தி நாளில் வரும் ''நாக சதுர்த்தி' அன்று வழிபாடு செய்தல் நாக தோஷ பாதிப்புகளில் இருந்து காத்துக்கொள்ள முடியும் என்று ''போகர்12000'' நூலில்  கூறப்பட்டுள்ளது.

விநாயகரை வழிபட வினைகள் நீங்கும். ஜாதகத்தில் கேது தோஷம் உள்ளவர்கள், சங்கடஹர சதுர்த்தி விநாயகரை வழிபடுவதன் மூலம் கேதுவால் ஏற்படும் தோஷம்  விலகும்.

அதிதேவதை மற்றும் கிரகம்: விநாயகர் மற்றும் புதன் 
தெய்வம்: கணேசன் 

மற்ற திதிகளை பற்றி வரும் பகுதிகளில் பார்ப்போம்.

- ஜோதிட சிரோன்மணி பார்வதி தேவி

ஸ்ரீ லட்சுமி நரசிம்ம ஜோதிட நிலையம் 
whats App: 8939115647

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com