Enable Javscript for better performance
உங்கள் ராசிப்படி இந்த வாரம் எப்படி அமையப் போகிறது?- Dinamani

சுடச்சுட

  
  astrologiya

   

  12 ராசிக்காரர்களுக்குமான இந்த வார (ஜூன் 21 - ஜூன் 27) பலன்களை தினமணி ஜோதிடர் கே.சி.எஸ்.ஐயர் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்து பலனடைவோம். 

  மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

  பணப்புழக்கம் சுமாராகவே இருக்கும். புதிய கடன்களை வாங்கும்போது நல்ல காரியத்திற்காகப் பயன்படுத்தவும். குடும்ப அந்தஸ்து  உயரும். நெருங்கியவர்களுடன் விரோதம் ஏற்படும்.  உடல் நலனில் அக்கறை செலுத்தவும். 

  உத்தியோகஸ்தர்கள் அலுவலகப் பணிகளில் கவனத்துடன் ஈடுபடவும். சக ஊழியர்களை நம்பி வேலைகளைக் கொடுத்து பிரச்னைகளில் மாட்டிக்கொள்ளாதீர்கள்.  

  வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல்கள் சாதகமாக முடியும். கவனத்துடன் செயல்படவும். விவசாயிகளுக்கு விளைச்சல் அதிகமாகி வருமானம் பெருகும். புதிய குத்தகைகளால் லாபம் உண்டாகும்.

  அரசியல்வாதிகளுக்கு கட்சியில் மதிப்பு, மரியாதை உயரும். கடந்த காலங்களில் ஒதுக்கி வைத்திருந்த திட்டங்களைச் செயல்படுத்த முனைவீர்கள். கலைத்துறையினருக்கு இது முன்னேற்றகரமான காலமாகும். இதுவரை இருந்து வந்த பின்தங்கிய நிலையிலிருந்து விடுபடுவீர்கள். 

  பெண்மணிகள் கணவரிடம் விட்டுக்கொடுத்து நடந்து கொள்ளவும். இல்லத்தில் சுப நிகழ்ச்சிகளை நடத்த கடும் முயற்சி தேவை. மாணவமணிகளுக்கு பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். படிப்பில் அதிக அக்கறை காட்டவும்.

  பரிகாரம்: காகத்திற்கு அன்னமிட்டும் கணேசருக்கு அருகம்புல் கொடுத்தும் வழிபடவும். 

  அனுகூலமான தினங்கள்: 21, 22. 

  சந்திராஷ்டமம்: இல்லை.

  {pagination-pagination}
  ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய)

  எல்லா செயல்களும் வெற்றி பெறும். பணப்புழக்கம் நன்றாக இருக்கும். நல்லவர்களின் நட்பு கிடைக்கும். சமூகத்தில் மதிப்பு உயரும். உடல் ஆரோக்கியம் பலப்படும். மருத்துவச் செலவுகள் குறையும். மனதில் சிறு குழப்பங்கள், சஞ்சலங்கள் உண்டாகும்.

  உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகள் பாராட்டும் வகையில் நடந்து கொள்வர். சக ஊழியர்களிடம் ரகசியங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டாம். வியாபாரிகளுக்கு பழைய கடன்கள் வசூலாகும். வாடிக்கையாளர்களின் வருகையால் விற்பனை அதிகரிக்கும். விவசாயிகள் தம் கீழ் பணிபுரியும் விவசாய வேலையாட்களால் சிறு சங்கடங்களைச் சந்திக்க நேரிடும். 

  அரசியல்வாதிகள் சிரமமின்றி வெற்றிகளைப் பெறுவார்கள். தொண்டர்களின் ஆதரவும் கட்சி மேலிடத்தின் ஆதரவும் இருக்கும். கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்கள் செய்வார்கள். 

  பெண்மணிகளுக்கு கணவருடன் ஒற்றுமை அதிகரிக்கும். உறவினர்களிடம் மனம் திறந்து எண்ணங்களை வெளிப்படுத்த வேண்டாம். மாணவமணிகளுக்கு உழைப்புக்கு ஏற்ற மதிப்பெண்கள் கிடைக்கும். விளையாட்டுத் துறைகளிலும் ஈடுபட்டு வெற்றி அடைவீர்கள்.

  பரிகாரம்:  ஞாயிறன்று சிவபெருமானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபடவும். அனுகூலமான தினங்கள்: 21, 23. சந்திராஷ்டமம்:  இல்லை.

  {pagination-pagination}
  மிதுனம் (மிருகசீரிஷம்3-ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)

  பொருளாதார நிலைமை நன்றாக இருக்கும். நினைத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும். மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம்  பாதிக்கப்பட்டு மருத்துவச் செலவுகள் செய்ய நேரிடலாம்.

  உத்தியோகஸ்தர்கள் பணிகளில் மாற்றங்களைக் காண்பார்கள். மேலதிகாரிகள் பக்கபலமாக இருப்பார்கள். வருமானமும் படிப்படியாக உயரும். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல்கள் சுமுகமாக முடியும். நண்பர்களை நம்பி எதையும் செய்ய வேண்டாம். விவசாயிகள் அதிக மகசூலைப் பெறுவார்கள். புதிய வாழ்க்கை வசதிகளைப் பெருக்கிக் கொள்வார்கள். 

  அரசியல்வாதிகள் கட்சி மேலிடத்திடம் பொறுமையோடு நடந்துகொள்ளவும். தகவல் அனுப்பும்போது கவனத்துடன் இருக்கவும். கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களைச் செய்வீர்கள். உங்கள் தனித்தன்மை வெளிப்படும்.

  பெண்மணிகள் கணவரை அனுசரித்துச் செல்லவும். சில்லறைச் செலவுகள் அதிகரிக்கும். மாணவமணிகள் கல்வியில் முன்னேற அதிகமாக உழைக்கவும். பெற்றோரிடம் கிடைக்கும் ஆதரவும் உங்களை முன்னேற்றப் பாதையில் இட்டுச் செல்லும்.

  பரிகாரம்: வியாழனன்று தட்சிணாமூர்த்திக்கு தீபமேற்றி வழிபடவும். 

  அனுகூலமான தினங்கள்: 22, 23.

  சந்திராஷ்டமம்:  21.

  {pagination-pagination}
  கடகம் (புனர்பூசம்4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

  உங்களின் எல்லா செயல்களும் வெற்றி பெறும். பணப்புழக்கம் நன்றாக இருக்கும். நல்லவர்களின் நட்பு கிடைக்கும். சமூகத்தில் மதிப்பு மரியாதை உயரும். உடல் ஆரோக்கியம் பலப்படும். மருத்துவச் செலவுகள் குறையும்.

  உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகள் பாராட்டும் வகையில் நடந்து கொள்வர். சக ஊழியர்களிடம் ரகசியங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டாம். வியாபாரிகளுக்கு பழைய கடன்கள் வசூலாகும். வாடிக்கையாளர்களின் வருகையால் விற்பனை அதிகரிக்கும். விவசாயிகள் தம் கீழ் பணிபுரியும் விவசாயக் கூலிகளால் சிறு சடங்குகளைச் சந்தித்தாலும் மகசூலில் குறைவு இராது. 

  அரசியல்வாதிகள், சிரமமின்றி வெற்றிகளைப் பெறுவார்கள். தொண்டர்களின் ஆதரவும் கட்சி மேலிடத்தின் ஆதரவும் இருப்பதால் எண்ணங்கள் ஈடேறும். கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களைச் செய்வார்கள். 

  பெண்மணிகளுக்கு கணவருடன் ஒற்றுமை அதிகரிக்கும். உறவினர்களிடம் மனம் திறந்து எண்ணங்களை வெளிப்படுத்த வேண்டாம். மாணவமணிகளுக்கு உழைப்புக்கு ஏற்ற மதிப்பெண்கள் கிடைக்கும். 

  பரிகாரம்: தேய்பிறை அஷ்டமியில் பைரவரை வழிபடவும். 

  அனுகூலமான தினங்கள்: 21, 25. 

  சந்திராஷ்டமம்:  22, 23, 24.

  {pagination-pagination}
  சிம்மம் (மகம், பூரம்,உத்திரம் முதல் பாதம் முடிய)

  எதிர்வரும் இடையூறுகளைத் தகர்ப்பீர்கள். பிரச்னைகளில் தெளிவுகள் தென்படும். பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நிகழும். எடுத்த காரியங்கள் அனைத்தும் எதிர்பார்த்தபடியே முடியும். 

  உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் நிலவி வந்த பிரச்னைகள் குறையும். மேலதிகாரிகள் பாராட்டும் வகையில் நடந்து கொள்வீர்கள். வியாபாரிகளுக்கு இருந்து வந்த அலைச்சல் டென்ஷன் ஆகியவை குறையும். கூட்டுத்தொழில் சிறக்கும். விவசாயிகளுக்கு விளைச்சல் நன்றாக இருக்கும். புதிய குத்தகைகள் பெறுவீர்கள். கால்நடைகளால் வருமானம் இருக்கும். 

  அரசியல்வாதிகளின் அந்தஸ்து  உயரும். புதிய பொறுப்புகள் தேடிவரும். மேலிடத்தின் பார்வை உங்கள் மீது விழும். கலைத்துறையினர் கடுமையாக உழைத்தால்தான் நற்பலன் அடைய முடியும். 

  பெண்மணிகளுக்கு குடும்பத்தில் ஒற்றுமை மேலோங்கும். குழந்தைகளால் சந்தோஷம் ஏற்படும். கணவரின் உடல் நலத்தில் அக்கறை தேவை. மாணவமணிகள் இப்பொழுது செய்யும் சிரிய முயற்சிகளும் அதிக மதிப்பெண்களைப் பெற்று தரும்.

  பரிகாரம்: பிள்ளையாருக்கு அருகம்புல் மாலை சாற்றி வழிபடவும். 

  அனுகூலமான தினங்கள்: 22, 24. 

  சந்திராஷ்டமம்:  25, 26.

  {pagination-pagination}
  கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)

  கவலைகள் மறைந்து இன்பங்கள் பெருகும். மதிப்பு மரியாதை வளரும். எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி அடைவீர்கள். ஆற்றல் அதிகரிக்கும். வருமானத்திற்கு குறைவில்லை. வழக்குகளில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும்.

  உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில்  ஒற்றுமையை காண்பார்கள். மேலதிகாரிகள் கொடுத்து வந்த கஷ்டங்களில் இருந்து விடுபடுவார்கள். வியாபாரிகளுக்கு வியாபாரத்தில் இருந்து வந்த தடைகள் விலகும். கொடுக்கல் வாங்கல்களில் லாபம் காண்பார்கள். விவசாயிகள் வாய்க்கால் வரப்பு பிரச்னைகளைத் தவிர்க்கவும். கால்நடை பராமரிப்புச் செலவு கூடும். 

  அரசியல்வாதிகளுக்கு எதிரிகளின் தொல்லை குறையும். உங்களுக்கு எதிராகப் போட்டிருந்த வழக்குகளில் நல்ல திருப்பங்கள் ஏற்படும். கலைத்துறையினரைத் தேடி வாய்ப்புகள் வரும். ரசிகர்களின் ஆதரவும் அமோகமாக இருக்கும். பெண்மணிகளுக்கு கணவருடனான உறவு சீர்படும். குழந்தைகள் மூலம் மகிழ்ச்சி கிட்டும். மாணவமணிகள் தேவையில்லாத வீண் பிரச்னைகளில் சிக்கிக் கொள்ள நேரிடலாம். அதனால் எச்சரிக்கை தேவை.

  பரிகாரம்: ஞாயிறன்று சரபேஸ்வரரை ராகு காலத்தில் வழிபடவும். 

  அனுகூலமான தினங்கள்: 21, 25.

  சந்திராஷ்டமம்:  27.

  {pagination-pagination}
  துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம் முடிய)

  திட்டமிட்ட காரியங்களில் வெற்றியடைவீர்கள். சுபச் செலவுகளைச் செய்து மகிழ்வீர்கள். பணவரவுக்கும் குறைவு இராது. எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். பெற்றோர் வழியில் இருந்த குழப்பங்கள் நீங்கும். நம்பிக்கையுடன் ஆன்மிகத்தில் ஈடுபடுவீர்கள்.

  உத்தியோகஸ்தர்கள் விரும்பிய இடமாற்றத்தைப் பெறுவார்கள். பதவி உயர்வும் பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் தென்படும். வியாபாரிகளுக்கு கடன் சுமைகள் குறையும். கூட்டாளிகள் உங்கள் பேச்சைக் கேட்டு நடப்பார்கள். புதிய சந்தைகளை நாடிச் செல்லலாம். விவசாயிகளுக்கு மகசூல் நன்றாக இருக்கும். ஊடுபயிரை பயிரிட்டுச் சாகுபடிச் செய்யலாம். 

  அரசியல்வாதிகளுக்கு பெயரும் புகழும் அதிகரிக்கும். திட்டமிட்ட வேலைகளில் தடைகள் ஏற்பட்டாலும் இறுதியில் வெற்றி உண்டு. கலைத்துறையினர் பல தடைகளைத் தாண்டி புதிய ஒப்பந்தங்கள் செய்வார்கள். வருமானம் குறைவாகவே இருக்கும். 

  பெண்மணிகளுக்கு கணவருடன் ஒற்றுமை அதிகரிக்கும். குழந்தைகள் மூலம் மகிழ்ச்சி கிட்டும். மாணவமணிகள் படிப்பில் அதிக கவனம் செலுத்தவும். 

  பரிகாரம்: செவ்வாயன்று முருகப்பெருமானை ஆலயத்தில் தரிசனம் செய்யவும். அனுகூலமான தினங்கள்: 23, 24. சந்திராஷ்டமம்:  இல்லை.

  {pagination-pagination}

  விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)

  வரவுக்கேற்ற செலவுகளும் ஏற்படும். முக்கிய முடிவுகளை தற்போது எடுக்க வேண்டாம். உறவினர்களின் அலட்சியப் போக்கைப் பெரிது படுத்த வேண்டாம். பூர்வீகச் சொத்து சம்பந்தமான பிரச்னைகளில் சிக்கல்கள் உருவாகும்.

  உத்தியோகஸ்தர்கள் சீராகப் பணியாற்றத் தொடங்குவார்கள். சக ஊழியர்களை நம்ப வேண்டாம். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல்கள் சிறப்பாக இருக்கும். வியாபாரம் வளரும். விவசாயிகள் போட்டி பொறாமைகளைச் சந்திக்க நேரிடும். கடுமையாக உழைத்தால்தான் எதிர்பார்த்த லாபம் பெறலாம்.

  அரசியல்வாதிகளுக்கு எதிர்பாராத அலைச்சல்கள் ஏற்படும். மேலிடத்தின் ஆதரவும் குறையும். வழக்கு விவகாரங்களில் சற்று தள்ளியே இருக்கவும். கலைத்துறையினருக்கு அனுகூலமான திருப்பங்கள் ஏற்படும். முயற்சியும் உழைப்பும் நன்மை பயக்கும். 

  பெண்மணிகளுக்கு மருத்துவச் செலவு ஏற்படும். கணவரிடம் வீண் வாக்குவாதங்களில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். மாணவமணிகள் உழைப்புக்கேற்ற மதிப்பெண்களை பெறுவார்கள். விளையாட்டுகளில் வெற்றி பெறுவர்.

  பரிகாரம்: ஞாயிறன்று சூரியநமஸ்காரம் செய்து ஆத்மபலத்தைக் கூட்டிக் கொள்ளவும். 

  அனுகூலமான தினங்கள்: 21, 26.

  சந்திராஷ்டமம்:  இல்லை.

  தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)

  தன்னம்பிக்கையோடு காரியங்களில் ஈடுபடுவீர்கள். முக்கியஸ்தர்களின் உதவிகள் கிடைக்கும். குடும்பத்தினரிடம் அன்பு, பாசம் அதிகரிக்கும். தேவைக்கேற்ப வருமானம் வந்துகொண்டிருந்தாலும் சில அநாவசியச் செலவுகளும் இருக்கும்.

  உத்தியோகஸ்தர்களுக்கு அனைத்து வேலைகளையும் திறம்படச் செய்து முடிக்கும் ஆற்றல் உண்டாகும். சக ஊழியர்களிடம் ரகசியங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டாம். வியாபாரிகளைத் தேடி பல வகைகளிலும் லாபம் வரும். வியாபாரத்தில் வளர்ச்சி தென்படும். விவசாயிகளுக்கு தோட்டம் தோப்பு உள்ளிட்ட விவசாயப் பணிகள் சுமுகமாக முடியும்.

  அரசியல்வாதிகள் எதிலும் கடின உழைப்பை மேற்கொள்ள வேண்டியிருக்கும். எதிரிகள் தானாகவே நேசமாக மாறுவர். கலைத்துறையினர் செய்யும் விடாமுயற்சிகள் பெரும் வெற்றிகளைக் கொடுக்கும். 

  பெண்மணிகள் குடும்பத்தில் மகிழ்ச்சியைக் காண்பார்கள். பணவரவில் ஏற்றபட்ட தடைகள் விலகும். மாணவமணிகள் படிப்பில் அதிக மதிப்பெண்களைப் பெறுவார்கள். உள்ளரங்கு விளையாட்டுகளில் வெற்றி பெற வாய்ப்புகள் உண்டாகும்.

  பரிகாரம்:  புதன்கிழமையன்று ஸ்ரீ ராமரை வழிபடவும். 

  அனுகூலமான தினங்கள்: 24, 27. 

  சந்திராஷ்டமம்:  இல்லை.

  {pagination-pagination}

  மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)

  குடும்பத்தில் அமைதி நிலவும். உறவினர்களிடமும் அன்பும் பாசமும் அதிகரிக்கும். உங்கள் திறமைகள் பளிச்சிடும். பொருளாதார நிலைமை சீராக இருக்கும். அவ்வப்போது சிறு பண விரயங்களும் உண்டாகும். 

  உத்தியோகஸ்தர்களுக்கு உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்கும். மேலதிகாரிகளும் உங்களைப் புரிந்து கொள்வார்கள். பயணங்களால் பணவரவு கிடைக்கும். வியாபாரிகளுக்கு வாடிக்கையாளர்களின் வருகை நல்ல முறையில் இருக்கும். ஓய்வில்லாமல் உழைத்து லாபம் பெற்று மகிழ்வீர்கள். 

  விவசாயிகள் தானியப் பொருள்கள் உற்பத்தியில் நல்ல லாபம் காண்பீர்கள். புதிய நிலங்களை வாங்கும் எண்ணத்தை தள்ளி வைக்கவும். 

  அரசியல்வாதிகளின் அந்தஸ்தில் குறைபாடுகள் உண்டாகும். தொண்டர்களின் பாராமுகத்தைக் கண்டு கோபப்படாமல் செயலாற்றவும். கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.பெண்மணிகள் பொருளாதார வளத்தால் திருப்தியடைவர். மனதிற்கினிய செய்திகளைக் கேட்பீர்கள். மாணவமணிகள் படிப்பில் அதிக மதிப்பெண்களைப் பெறுவார்கள்.

  பரிகாரம்: செவ்வாயன்று முருகப்பெருமானை வழிபடவும். 

  அனுகூலமான தினங்கள்: 23, 27.

  சந்திராஷ்டமம்:  இல்லை.

  {pagination-pagination}

  கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)

  உங்கள் பேச்சு மற்றும் செயல்களில் மிடுக்கு தெரியும். செயல்கள் வெற்றிகரமாக முடியும். பயணங்கள் பலன் தரும். குடும்பத்தில் அன்பு அதிகரிக்கும். இளைய உடன்பிறப்புகளால் நன்மைகள் உண்டாகும். காரியங்களில் விழிப்போடு இருக்கவும்.

  உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு குறைந்து காணப்படும். மேலதிகாரிகள் பரிவுடன் நடந்துகொள்வார்கள். வியாபாரிகள் கொடுக்கல் வாங்கல்களில் சிறப்புகளைக் காண்பார்கள். எதிர்வரும் இடையூறுகளைச் சாதுர்யமாக சமாளிப்பார்கள். விவசாயிகள் தங்கள் வேலைகளைச் சிறப்பாகச் செய்து முடிப்பார்கள். தானிய விற்பனையும் நன்றாக இருக்கும்.

  அரசியல்வாதிகளுக்கு செல்வாக்கு அதிகரிக்கும். கட்சி மேலிடத்தின் பாராட்டு கிடைக்கும். உயர் பதவிகளைப் பெறுவீர்கள். கலைத்துறையினர் பழைய ஒப்பந்தங்களை நன்றாக முடித்துக் கொடுத்து புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். 

  பெண்மணிகளுக்கு கணவரிடம் அன்பும் பாசமும் அதிகரிக்கும். மனதிற்கினிய செய்திகளைக் கேட்பீர்கள். 
  மாணவமணிகள் கல்வியில் அக்கறை காட்டவும். பாடங்களைப் போதிய பயிற்சியுடன் படித்து முடிக்கவும்.

  பரிகாரம்: ஸ்ரீரங்கம் ரங்கநாதரையும் சனிபகவானையும் வழிபடவும். 

  அனுகூலமான தினங்கள்: 22, 26. 

  சந்திராஷ்டமம்:  இல்லை.

  {pagination-pagination}
  மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

  உற்சாகமான மனநிலையில் இருப்பீர்கள். தெய்வ அனுகூலம் சிறப்பாக இருக்கும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் தென்படும். ஆடை ஆபரணச் சேர்க்கைகள் உண்டாகும். தொலைதூரத்திலிருந்து  சுபச் செய்திகள் வந்து சேரும். 

  உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். பதவி உயர்வையும் பெறுவீர்கள். புதிய உத்தியோக முயற்சிகளும் வெற்றி பெறும். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல்கள் சீராக இருக்கும். புதிய முதலீடுகளுக்கான முயற்சிகள் வெற்றியைக் கொடுக்கும்.

  விவசாயிகளுக்கு மகசூல் குறையும். நிலம் மற்றும் சொத்துத் தகராறு ஏற்பட வாய்ப்புள்ளதால் விட்டுக்கொடுத்து நடந்து கொள்ளவும். 

  அரசியல்வாதிகள் மக்களுக்கான போராட்டங்களில் மட்டுமே கலந்துகொள்ளவும். திட்டமிட்ட வேலைகளை  நன்கு நிறைவேற தொண்டர்களின் ஆதரவைப் பெறவும். 

  கலைத்துறையினருக்கு அதிக முயற்சிகளுக்குப்பிறகு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.

  பெண்மணிகள் கணவரிடம் ஒற்றுமையுடன் இருப்பர். உறவினர்கள் நண்பர்களிடம் கவனமாக இருக்கவும். மாணவமணிகள் படிப்பில் கவனம் செலுத்தவும். வெளிவிளையாட்டுகளில் ஆர்வத்தைக் குறைத்துக் கொள்ளவும்.

  பரிகாரம்: அருகில் உள்ள ஆலயங்களில் தீபம் ஏற்றி வைத்து வழிபட்டு வரவும். 

  அனுகூலமான தினங்கள்: 26, 27. 

  சந்திராஷ்டமம்:  இல்லை.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai