பஞ்சவடி பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு நாளை மகா கும்பாபிஷேகம்

பஞ்சவடி பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு நாளை மகா கும்பாபிஷேகம்

புதுவையை அடுத்த பஞ்சவடியில் உள்ள 36 அடி பஞ்சமுக ஆஞ்சநேயர் கோயிலில்

புதுவையை அடுத்த பஞ்சவடியில் உள்ள 36 அடி பஞ்சமுக ஆஞ்சநேயர் கோயிலில் நாளை(23.6.19) காலை 9.00 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

பஞ்சமுக ஆஞ்சநேயர் கோயில் கும்பாபிஷேகம் கடந்த 20007-ம் ஆண்டு நடைபெற்றது. ஆஞ்சநேயர் திருவுருவச்சிலையின் அடிப்பாகத்தில் பஞ்சமுக ஆஞ்சநேயர் மூலமந்திரத்தை 36 லட்சம் தடவை ஜபம் செய்து 3,60,000 தடவை ஹோமம் செய்து உரு ஏற்றப்பட்டு எந்திரம் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறது. வேறு எந்த கோயிலிலும் இல்லாத சிறப்பம்சமாக இது விளங்குகிறது. 

மத்திய திருப்பதி என்று அழைக்கப்படும் இத்தலத்தில் திருமலை திருப்பதியில் உள்ள மலையிலிருந்து எடுத்த கல்லினால் செய்யப்பட்டு திருப்பதி தேவஸ்தானத்தினால் வழங்கப்பட்ட ஸ்ரீவாரி வெங்கடாசலபதியின் திருவுருவச்சிலை திருப்பதியில் இருப்பதைப்போலவே நின்ற கோலத்தில் ராமர் சன்னதி எதிரில் மேற்கு நோக்கி பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. திருப்பதி செல்லமுடியாதவர்கள் இங்குள்ள பெருமாளை வழிபட்டு பலன் பெறலாம். 

அதன்படி ஜூன் 23(நாளை) நடைபெறும் ஐந்து நிலை ராஜகோபுரம், ஸ்ரீவிநாயகர், ராமன் மற்றும் 36 அடி உயர ஆஞ்சநேயர் சன்னதி விமானங்களுடன் புதியதாக நிர்மாணம் செய்யப்பட்டுள்ள ஸ்ரீவாரி வெங்கடாசலபதி சன்னதி விமானத்துக்கும் மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. 

இந்த கும்பாபிஷேகத்தில் நாமும் கலந்துகொண்டு பஞ்சமுக ஆஞ்சநேயரின் பரிபூரண அருளைப் பெறுவோம். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com