சுடச்சுட

    

    உடன்குடி உச்சினிமாகாளி அம்பாள் கோயிலில் கொடை விழா தொடக்கம்

    By DIN  |   Published on : 24th June 2019 11:03 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    amman

    உடன்குடி வைத்திலிங்கபுரம் உச்சினிமாகாளி அம்பாள் கோயில் கொடை விழா இன்று தொடங்கி 3 நாள்கள் நடைபெறுகிறது.

    இதையொட்டி, கோயிலில் இன்று மாலை 5 மணிக்கு 508 திருவிளக்கு பூஜை, அம்பாளுக்கு மாக்காப்பு அலங்காரத்துடன் தீபாராதனை, இரவு 11 மணிக்கு அம்பாள் கும்பத்தில் பவனி நடைபெறுகிறது. 

    செவ்வாய்க்கிழமையான நாளை காலை 8 மணிக்கு கண்டு கொண்ட விநாயகர் ஆலயத்தில் இருந்து பால்குடம் எடுத்தல், காலை 9 மணிக்கு கும்பாபிஷேகம், பகல் 12 மணிக்கு மகா தீபாராதனை, 1 மணிக்கு கும்பம் பவனி, மாலை 4 மணிக்கு பெண்கள் காணிக்கை செலுத்துதல், நள்ளிரவு 12 மணிக்கு அம்பாளுக்கு சந்தனக் காப்பு அலங்காரத்துடன் மகா தீபாராதனை, அதிகாலை 1 மணிக்கு அலங்கார சப்பரத்தில் அம்பாள் பவனி ஆகியவை நடைபெறுகிறது.

    புதன்கிழமை (ஜூன் 26) காலை 10 மணிக்கு அம்பாளுக்கு பொங்கல் வைத்தல், மஞ்சள் நீராடுதல், மாலை 4 மணிக்கு பிரசாதம் வழங்ககுதல் ஆகியவை நடைபெறும்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai