சுடச்சுட

  

  கேதார்நாத்: 45 நாட்களில் 7 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் புனித யாத்திரை

  By DIN  |   Published on : 24th June 2019 12:31 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  Kedarnath-modi-19a

   

  டேராடூன்: உத்தரகண்ட்டில் உள்ள கேதார்நாத் கோயில் கடந்த 45 நாட்களில் 7 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் புனித யாத்திரை மேற்கொண்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. 

  சிவபெருமானின் 12 ஜோதிர் லிங்கங்களில் ஒன்றாகக் கருதப்படும் கேதார்நாத் கோயிலுக்கு நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் யாத்திரையாக வந்து வருகை புரிந்து தரிசித்துச் செல்வது வழக்கம். 

  இந்நிலையில், இந்தாண்டு சார்தாம் ஆலயங்களில் ஒன்றான கேதார்நாத் கோயில் ஆறு மாதங்களுக்கு பின்பு வழிபாட்டுக்காக கடந்த மே 9-ம் தேதி திறக்கப்பட்டது. கோயில் நடை திறக்கப்பட்டு 45 நாட்களுக்குள் சுமார் 7.35 லட்சம் பக்தர்கள் புனித யாத்திரை மேற்கொண்டுள்ளனர். 

  சமீபத்தில் பிரதமர் மோடி கேதார்நாத் வந்து தரிசனம் செய்து சென்றுள்ளார். அதனை தொடர்ந்து கேதார்நாத் கோயிலுக்குப் பலரும் ஆர்வத்துடன் வரத் துவங்கி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

  இந்த ஆண்டு கேதார்நாத் யாத்திரை முடிய இன்னும் 5 மாத காலம் உள்ளதால் இந்தாண்டு இறுதிக்குள் 15 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்ய வருவார்கள் என்று பத்ரி-கேதார் கோயில் குழுத் தலைமை நிர்வாக அதிகாரி பி.டி.சிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai