சுடச்சுட

    

    அத்திவரதர் பெருவிழா குறித்து கோயில் இணையதளத்தில் தகவல் இல்லாததால் மக்கள் ஏமாற்றம்

    By DIN  |   Published on : 25th June 2019 12:55 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    AttiVaradar

     

    வரதராஜப் பெருமாள் கோயிலின் இணையதளப் பக்கத்தில் அத்திவரதர் பெருவிழா குறித்து தகவல் பதிவேற்றப்படவில்லை.

    40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்திவரதர் பெருவிழா வரும் ஜூலை 1-ம் தேதி முதல் 48 நாள்களுக்கு வெகு விமரிசையாக நடைபெறவுள்ளது. அத்திவரதர் பெருவிழா குறித்து உள்ளூர், அண்டை மாவட்ட மக்கள் ஊடகங்கள் மூலம் தகவல்களை அறிந்து கொள்கின்றனர். 

    வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் வாழ்வோர் வரதராஜப் பெருமாள் கோயிலின் இணையதளப் பக்கத்தில் இவ்விழா குறித்து தகவல் தேடி வருகின்றனர். விழாவுக்கு இன்னும் 6 நாள்களே உள்ள நிலையில் இதுவரை இந்த இணையதள பக்கத்தில் விழா தொடர்பான தகவல்கள் பதிவேற்றம் செய்யப்படவில்லை. இதனால் அவர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai