Enable Javscript for better performance
பொன்னவனால் (குரு) ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் இவர்கள்!- Dinamani

சுடச்சுட

  

  பொன்னவனால் (குரு) ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் இவர்கள்!

  By - ஜோதிட சிரோன்மணி தேவி  |   Published on : 25th June 2019 02:59 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  guru_bhagavan

   
  பொன்னும் புதனும் உதயத்தில்
  பொருந்தில் வலிய ரேயாவர்
  மன்னு சனியும் கரும்பாம்பும் 
  வலியர் அத்த மனமாகில்
  மின்னும் கதிரும் குசன்உச்சம்
  மேவில் வலியர் விளம்புங்கால் 
  துன்னும் மதிசுக் கிரன் நீர்க்கீழ்ச்
  சூழ்ந்ததால் வலியர் ஆவரே 

           - ஜாதக அலங்காரம் 

  இந்த பாடலில் திக்பலம் பற்றி சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி கிரகங்கள் எந்தெந்த திசையில் இருந்தால் பலம் பெறுவார்கள் என்று கூறப்படுகிறது. பொன்னவன் என்ற குருவானவர் லக்கினம் என்ற கிழக்கு திசையில் வீற்றிருந்து தன் பலத்தை ஜாதகருக்கு கூட்டுவார். இந்த பாடலில் திக்பலம் பற்றி சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது கிரகங்கள் எந்தெந்த திசையில் இருந்தால் பலம் பெறுவார்கள் என்று கூறப்படுகிறது. பொன்னவன் என்ற குருவானவர் கிழக்கு திசையில் வீற்றிருந்து (லக்கினத்தில்) தன் பலத்தை ஜாதகருக்கு கூட்டுவார் என்பது வேத ஜோதிடத்தின் விதி. திக் பலம் பெற்ற கிரகம் ஆட்சி வலுவுக்கு ஒப்பான பலன்களைத் தரவல்லது.

  என் ஆராய்ச்சியின்படி ஒருவருடைய ஜாதகத்தில் லக்கின புள்ளியில் அல்லது ஒன்றில் குரு உள்ளவர்கள் குருவின் அனுக்கிரகம் மற்றும் கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் என்பது உண்மை. இது ஒரு விசேஷ யோகம். குரு நின்ற இடம் பாழ் என்பர் ஆனால் அது சூட்சம விதிப்படி ஜாதகருக்கு உடல் பலத்தைக் கொடுப்பார் மற்ற விதத்திலும் லக்கின குரு உதவமாட்டார். அவர் பார்க்கும் பார்வை 5, 7, 9 பாவங்களைப் பலப்படுத்தி சகல நன்மைகளும் அதற்கு ஏற்ப மனைவி மக்கள் தகப்பனுக்கு ஏற்படும் என்பது ஜோதிடத்தில் உள்ள சூட்சம விதி. 

  வாழ்க்கைக்கு முக்கிய தேவையான பூர்வ புண்ணிய பாவமான 5ம் பாவத்தின் மூலமான குழந்தை செல்வதைக் கொடுப்பார், நல்லொழுக்கத்தை வழிகாட்டுவார். களத்திர பாவமான 7ம்  பாவத்தின் திருமண உறவை ஆசிர்வதிக்கப்படுவர். ஒன்பதாவது பாவமான நம்பிக்கை, சட்ட நுணுக்கங்கள், குருபத்தி மற்றும் தந்தையின் பாவத்தைப் பலப்படுத்தி தந்தைக்குத் தலைவணங்கும் தலைமகனாக இருப்பான்.

  எடுத்துக்காட்டாக ஜாதகரின் தந்தை கேட்டால் தெரியும் என் மகன் பிறந்த பிறகு தான் நான் சொத்து சுகம் சேர்த்தேன் என்பார். ஜாதகரின் குரு ஒன்பதாம் பாவமான தந்தையின் நிலையை உயர்த்தும். உயர்வு பெற்ற தொழில் அதிபர்கள் ஜாதகத்தில் பலம் இல்லாமல் இருப்பார்கள் ஆனால் குரு பலம் பெற்றவர்கள் தன்னோடு வைத்துக்கொள்ளும்பொழுது ஜாதகரின் தொழில் பலம் உயரும் என்பது உண்மை. இவற்றை நான் பல ஜாதகங்களில் ஆராய்ந்தும் பார்த்திருக்கிறேன். இன்னொரு முக்கியமான விஷயம் லக்கினத்தில் உள்ள குரு முழு யோகராக ஜாதகருக்கு அமைந்துவிட்டால் யோகப்பலனை அதிகப்படுத்துவர். யோகராக இல்லாவிட்டால் அதன் பலம் அளவு குறைக்கப்படும்.  

  லக்கின குரு எப்பொழுது நல்ல பலன் கொடுப்பார்

  தேவ குருவின் தன்மையான பெண் மற்றும் பொன் ஆசை இல்லாமல், சட்ட நியதிகளின்படி வழிநடப்பார். வாக்கு மாறாதவர், கெட்ட பழக்க வழக்கங்களில் செல்லாமல்,  பொய் பேசாதவராகவும் குரு ஜாதகருக்கு நல்ல முறையில் வேலை செய்யும். ஜாதகருக்கு லக்கினத்தில் குரு உள்ளவர்கள் கெட்ட வழியில் செல்வ ஈட்டுபவர்கள். நேர்மை இல்லாதவர்கள், திருட்டுத்தனம் இருந்தால் ஜாதகர் நிலைமை கீழ் நிலையில் தள்ளப்படுவார்கள். எந்த வலுகுன்றிய கிரகம் குருவின் பார்வையில் பலம் பெறும்பொழுது அந்த ஜாதகர் கெடுதலில் இருந்து தப்பித்துக் கொள்வார்கள்.

  லக்கின குருவின் குணநலன்கள் 

  • லக்கினத்தில் குரு இருப்பவர்கள் நேர்மையானவர்கள் சில இடங்களில் தவறு செய்தாலும் அதைத் திருத்திக் கொள்பவர்கள்.
    
  • பரந்த மனப்பான்மை கொண்டவர்கள். கடவுள் மேல் அதீத நம்பிக்கை கொண்டவர்கள். 
    
  • நல்ல உடலமைப்பு மற்றும் சிலர் அஷ்டவர்க்கத்தில் அதிக வலுப் பெற்றவராக நோய் எதிர்ப்புச் சக்தி அதிகம் உள்ளவராக இருப்பார்கள். குருவின் சதவீதம் அதிகமாக உள்ளவர்கள் குண்டான உடலமைப்பு மற்றும் கொழுப்பு அளவும் அதிகமாக இருக்கும்.
    
  • அறிவாளிகள், இவர்கள் பேசுவதில் ஒரு அறிவு தன்மை புலப்படும். நல்ல மத போதிக்கும் குருவாக, ஆன்மீகவாதியாக, மற்றவருக்கு வழி காட்டும் ஆசானாக இருப்பார்.  
    
  • சட்டம் நீதி என்று ஒருவழி முறையைப் பின்பற்றுபவர்கள். சட்ட நுணுக்கங்கள் மற்றும் கணக்கில் புலியாக இருப்பார்கள். தனக்கென்று எதுவும் வைத்திருக்க மாட்டார்கள், மற்றவருக்குக் கேட்காமல் உதவும் மனப்பான்மை கொண்டவர்கள்.
    
  • ஆசைப்படாதவனாக, படிப்படியாக தன் ஆசையைத் துறப்பவனாக இருப்பான்.
    
  • இவர்களை எதிரிகளாக யாரையும் நினைக்கமாட்டார்கள். ஒருவேளை அப்படி இருந்தால் கடைசி வரை திரும்பியும் பார்க்க மாட்டார்கள். உயிரே போனாலும் யாரிடமும் யாசகம் கேட்கமாட்டார். 
    
  • பெரிய மனிதர்களுடன் நட்பு இருந்து கொண்டு இருக்கும். சமுதாய நோக்கு கொண்டவர்கள். மற்றவர்களிடம் ஏமாறும் தன்மை இருக்கும்.

   குருவோடு சில பாவிகள் சேர்ந்து பார்த்திருந்தால் ஜாதகரின் நன்மை தீமைகள் மாறுபடும்.

   குருவே சரணம்.

  - ஜோதிட சிரோன்மணி தேவி

  ஸ்ரீ லட்சுமி நரசிம்ம ஜோதிட நிலையம் 

  whats App: 8939115647

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai