ஜூலை மாதம் திருப்பதி செல்பவர்கள் இதைப் படித்துவிட்டுச் செல்லுங்கள்!

ஜூலை மாதம் திருமலை திருப்பதி செல்பவர்கள் இந்த முக்கிய தகவலைத் தெரிந்துகொள்வது அவசியமாகும்.
ஜூலை மாதம் திருப்பதி செல்பவர்கள் இதைப் படித்துவிட்டுச் செல்லுங்கள்!


ஜூலை மாதம் திருமலை திருப்பதிக்குச் சென்று ஏழுமலையானைத் தரிசிக்க விரும்புபவர்கள் இந்த முக்கிய தகவலைத் தெரிந்துகொள்வது அவசியமாகும். 

ஒவ்வொரு ஆண்டும் சந்திர கிரகணத்தை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோயில் மூடப்படுவது வழக்கம். அதன்படி, வரும் ஜூலை 16-ம் தேதி 10 மணி நேரம் மூடப்படும் என்று திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. 

ஜூலை 17-ம் தேதி நள்ளிரவு 1.31 மணி முதல் அதிகாலை 4.29 மணி வரை சந்திரகிரகணம் நிகழ உள்ளது. கிரகண காலத்துக்கு 6 மணி நேரத்திற்கு முன் ஏழுமலையான் கோயில் மூடப்படுவது வழக்கம். அதன்படி வரும் ஜூலை 16-ம் தேதி இரவு 7 மணி முதல் 17-ம் தேதி அதிகாலை 5 மணி வரை 10 மணி நேரத்துக்கு இக்கோயில் மூடப்படும்.

அதன் பிறகு, அதிகாலை 5 மணிக்கு மேல் கோயில் திறக்கப்பட்டு புண்ணியா வாசனம், சுத்தி உள்ளிட்டவை நடத்தப்பட்டு சுப்ரபாத சேவை நடைபெறும். எனவே, ஜூலை 16 மற்றும் 17-ம் தேதிகளில் அனைத்து ஆர்ஜித சேவைகளும் ரத்து செய்யப்படும். இந்த நாள்களில் காத்திருப்பு மண்டபங்களில் பக்தர்கள் காத்திருக்க அனுமதி வழங்கப்படாது.

கிரகணத்தை ஒட்டி அன்னதானக் கூடமும் மூடப்படும் என்பதால் அப்போது அங்கு உணவு விநியோகம் செய்யப்படாது. தேவஸ்தானம் நிர்வகிக்கும் அனைத்து கோயில்களுக்கும் இது பொருந்தும். இதைப் பக்தர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com