சுடச்சுட

    

    நரசிங்கபுரம் லட்சுமி நரசிம்மர் கோயிலில் ஜூலை 1-ல் திருத்தேரோட்டம்

    By DIN  |   Published on : 26th June 2019 12:17 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    narasingapuram

     

    நரசிங்கபுரம் லட்சுமி நரசிம்மர் கோயிலில் ஆனி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு ஜூலை 1-ல் தேரோட்டம் நடைபெறுகிறது. 

    பேரம்பாக்கம் அடுத்துள்ள நரசிங்கபுரத்தில் உள்ள மரகதவல்லி தாயார் சமேத லட்சுமி நரசிம்மர் சுவாமி திருக்கோயிலில் இந்தாண்டு பிரம்மோற்சவம் கடந்த 24-ம் தேதி அங்குரார்பணத்துடன் நடைபெற்றது. அதையடுத்து நேற்று காலை ஆனி பிரம்மோற்சவ கொடியேற்றத்துடன் தொடங்கியது. 
    அதைத்தொடர்ந்து சிம்ம வாகனத்தில் வீதியுலா நடைபெற்றது. 

    இன்று காலை 7.00 மணிக்கு ஹம்ச வாகனத்தில் உற்சவர் வீதி உலாவும், இரவு சூரிய பிரபை வாகனத்திலும், நரசிம்ம பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நாளை காலை கருட சேவை நடைபெறுகிறது. 

    விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் ஜூலை 1-ம் தேதி காலை 6.00 மணிக்கு நடைபெறுகிறது. 
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai