சுடச்சுட

    

    திருமலை ஏழுமலையான் கோயில் உண்டியல் கோயில் காணிக்கை செவ்வாய்க்கிழமை ரூ. 3.71 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்தது.
     ஏழுமலையானைத் தரிசிக்க வரும் பக்தர்கள் காணிக்கைகளை கோயிலுக்குள் உண்டியலில் செலுத்தி வருகின்றனர். அந்த உண்டியல் காணிக்கைகளை தேவஸ்தானம் தினந்தோறும் கணக்கிட்டு, வங்கிகளில் வரவு வைத்து வருகிறது. அதன்படி, செவ்வாய்க்கிழமை பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கைகளைக் கணக்கிட்டதில், தேவஸ்தானத்துக்கு ரூ. 3.71 கோடி வருவாய் கிடைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ரூ. 27 லட்சம் நன்கொடை
    திருமலை ஏழுமலையான் பெயரில் தேவஸ்தானம் ஏற்படுத்தி உள்ள பல்வேறு அறக்கட்டளைகளுக்கு பக்தர்கள் நன்கொடை அளித்து வருகின்றனர். செவ்வாய்க்கிழமை அன்னதான அறக்கட்டளைக்கு ரூ. 4 லட்சம், சர்வஸ்ரேயா அறக்கட்டளைக்கு ரூ. 2 லட்சம், சீனிவாச சங்கரநேத்ராலயா அறக்கட்டளைக்கு ரூ. 1 லட்சம், ஸ்ரீபாலாஜி ஆரோக்கிய வரப்பிரசாதினி அறக்கட்டளைக்கு ரூ. 20 லட்சம் என மொத்தம் ரூ. 27 லட்சம் நன்கொடையாக வழங்கப்பட்டது. 

    80,064 பக்தர்கள் தரிசனம்
     ஏழுமலையானை செவ்வாய்க்கிழமை முழுவதும் 80,064 பக்தர்கள் தரிசனம் செய்தனர். இவர்களில் 35,902 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். புதன்கிழமை காலை 5 மணி நிலவரப்படி, 26 காத்திருப்பு அறைகளில் பக்தர்கள் ஏழுமலையான் தரிசனத்துக்காக காத்திருக்கின்றனர். அவர்கள் 16 மணி நேரத்துக்குப் பின் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். நடைபாதை, நேர ஒதுக்கீடு, விரைவு தரிசனம் மற்றும் தேவஸ்தானம் வழங்கும் முதன்மை தரிசனங்களில் பக்தர்கள் 3 மணி நேரத்துக்குள் ஏழுமலையானைத் தரிசித்துத் திரும்பினர். 
     செவ்வாய்க்கிழமை முழுவதும் திருப்பதியில் உள்ள கோவிந்தராஜ சுவாமி கோயிலில் 15,497 பக்தர்களும், சீனிவாசமங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி கோயிலில் 5,095 பக்தர்களும், திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் 16,455 பக்தர்களும், அப்பளாயகுண்டாவில் உள்ள பிரசன்ன வெங்கடேஸ்வர சுவாமி கோயிலில் 848 பக்தர்களும், கபிலேஸ்வர சுவாமி கோயிலில் 2,457 பக்தர்களும் தரிசனம் செய்துள்ளதாக தேவஸ்தான மக்கள் தொடர்புத் துறை அதிகாரி ரவி தெரிவித்தார்.

    சோதனைச் சாவடியில் ரூ. 2.04 லட்சம் கட்டண வசூல்
    அலிபிரி சோதனைச் சாவடிக்கு வரும் வாகனங்களின் எண்ணிக்கை மற்றும் அவற்றின் மூலம் கிடைக்கும் வருமானம் உள்ளிட்ட விவரங்களை தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது. அதன்படி, திங்கள்கிழமை நள்ளிரவு 12 மணி முதல் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 11.59 மணி வரை 81,394 பயணிகள் சோதனை சாவடியைக் கடந்துள்ளனர். 9,995 வாகனங்கள் சோதனைச் சாவடியை கடந்து சென்றுள்ளன. அவற்றின் மூலம் ரூ. 2.04 லட்சம் வருமானம் கிடைத்துள்ளது. விதிகளை மீறிய வாகனங்களுக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகை ரூ. 15,570 வசூலானதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.

    புகார் தெரிவிக்க...
    திருமலையில் தேவஸ்தானத்திடம் புகார் அளிக்க விரும்பும் பக்தர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய கட்டணமில்லா தொலைபேசி எண் 18004254141, 9399399399.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai