இந்த வாரம் அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் ராசிகளில் உங்க ராசி இருக்கா? 

இந்த வாரம் அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் ராசிகளில் உங்க ராசி இருக்கா? 

12 ராசிக்காரர்களுக்குமான இந்த வார (மார்ச் 1 - மார்ச் 7) பலன்களை தினமணி ஜோதிடர் கே.சி.எஸ்.ஐயர்...

12 ராசிக்காரர்களுக்குமான இந்த வார (மார்ச் 1 - மார்ச் 7) பலன்களை தினமணி ஜோதிடர் கே.சி.எஸ்.ஐயர் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்து பலனடைவோம். 

மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

பொருளாதார நிலைமை திருப்திகரமாக இருக்கும். தந்தை வழி உறவினர்களிடம் எதிர்பார்த்த ஆதரவைப் பெறமுடியாமல் போகும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் குதூகலமும் நிறைந்திருக்கும். எதிரிகளும் நேசக்கரம் நீட்டுவர்.

உத்தியோகஸ்தர்களின் ஆற்றல் அதிகரிக்கும். மேலதிகாரிகளின் மூலம் சில சஞ்சலங்கள் ஏற்படும். தைரியத்துடன்எதையும் சாதிக்கும் ஆற்றலைப் பெறுவீர்கள். வியாபாரிகள் வீண் ஆசாபாசங்களை வளர்த்துக் கொள்வதைத் தவிர்க்கவும். கடனுக்கு வியாபாரம் செய்வதைத் தவிர்க்கவும். விவசாயிகளுக்கு மகசூல் நன்றாக இருக்கும். உழைப்புக்கேற்ற லாபம் வந்து சேரும். 

அரசியல்வாதிகளுக்கு கட்சியில் வாக்குவாதங்கள் அதிகரிக்கும். போட்டிகளை நீங்கள் சந்திக்க நேரிடும். போராட்டங்களிலும் புதிய வேகத்துடன் ஈடுபடுவீர்கள். கலைத்துறையினர் எண்ணங்கள் அனைத்தும் ஈடேறும். சக கலைஞர்கள் அனுசரித்துச் செல்வர். பெண்மணிகள் குடும்பத்தில் ஒற்றுமையை காண்பார்கள். 

கணவரின் பாராட்டும் உறவினர்களின் அன்பும் உங்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும். மாணவமணிகள் உடல் நலத்தில் அக்கறை காட்டவும். 

பரிகாரம்: அங்காரகனையும் முருகப்பெருமானையும் வழிபட்டு வரவும். 

அனுகூலமான தினங்கள்: 1, 2. 

சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}
ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய)

உங்கள் செயல்கள் அனைத்தும் வெற்றியைத் தேடித்தரும். குடும்பத்தில் அமைதி நிலவும். சுப காரியங்கள் நடக்கும். உடன்பிறந்தோர் வழியில் இருந்த பிணக்குகள் மாறி சுமுகமான உறவு மலரும். குடும்பத்திலும் நிம்மதி நிலவும்.

உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் பளு கூடினாலும் அவைகளை குறித்த நேரத்திற்குள் முடித்து விடுவீர்கள். மேலதிகாரிகளின் ஆதரவும் சுமாராகவே இருக்கும். வியாபாரிகள் இந்த காலகட்டத்தில் அதிக போட்டிகளைச் சந்திக்க நேரிடும். விவசாயிகளுக்கு விளைச்சலும் அவற்றின் விற்பனையும் அமோகமாக இருக்கும். புதிய குத்தகைகள் எடுக்கும் எண்ணம் மேலோங்கும்.

அரசியல்வாதிகள் தங்கள் முயற்சிகளை சிரத்தையுடன் செயல்படுத்துவார்கள். மேலிடத்தின் ஆதரவில் புதிய பதவிகள் கிடைக்கும். கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களை நாடி அடைவார்கள். வருமானத்திற்கு குறைவு இராது. 

பெண்மணிகளுக்கு குடும்ப ஒற்றுமை மேலோங்கும். குழந்தைகளால் சந்தோஷம் கிடைக்கும். மாணவமணிகளுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். வெளிவிளையாட்டுகளிலும் ஈடுபடலாம்.

பரிகாரம்: பார்வதி தேவியை வழிபட்டு சிறப்படையவும்.

அனுகூலமான தினங்கள்: 3, 4. 

சந்திராஷ்டமம்: 1, 2.

{pagination-pagination}

மிதுனம் (மிருகசீரிஷம்3ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)

இடையூறுகளை புத்தி சாதுர்யத்துடன் சமாளிப்பீர்கள். வேலைத் தொந்தரவுகள் அதிகமாகவே இருக்கும். தேவையுள்ள சமயத்தில் நண்பர்களின் உதவிகள் கிடைக்கும். திட்டம் தீட்டியது போலவே வேலைகளை வெற்றிகரமாக முடிப்பீர்கள். 

உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களிடம் ஒத்துழைப்போடு நடந்து கொள்ளவும். வேலைத் தொந்தரவுகளும் குறையும். வியாபாரிகள் நல்ல லாபத்தை அடைவார்கள். சிறு தடைகள் ஏற்பட்டாலும் அதைச் சமாளிக்கும் தைரியத்தைப் பெறுவார்கள். விவசாயிகளுக்கு நல்ல வருமானம் கிடைக்கும். பூச்சி மருந்துக்காகச் சிறிது செலவுகள் செய்ய நேரிடும். 

அரசியல்வாதிகள் தொண்டர்களின் எண்ணங்களைப் பூர்த்தி செய்வார்கள். திட்டமிட்ட வேலைகளில் அலைச்சல் ஏற்பட்டாலும்  சாதகமாகவே முடியும். கலைத்துறையினர் அதிக வாய்ப்புகளைப் பெறுவார்கள். மனதில் ஏதோ ஒரு குறை இருந்து கொண்டிருக்கும்.

பெண்மணிகள் கணவரிடம் ஒற்றுமையோடு இருப்பீர்கள். குடும்பத்தினரிடம் அனுசரித்துச் செல்லவும். மாணவமணிகள் வீண் வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். நண்பர்களிடம் நேசமாகப் பழக முயற்சிக்கவும்.

பரிகாரம்: வெள்ளியன்று மகாலட்சுமியை குங்குமத்தால் அர்ச்சிக்கவும். 

அனுகூலமான தினங்கள்: 1, 5. 

சந்திராஷ்டமம்: 3, 4.

{pagination-pagination}
கடகம் (புனர்பூசம்4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

உங்களின் நீண்கால எண்ணங்கள் நிறைவேறும். உறவினர்களிடம் அன்பும் பாசமும் அதிகரிக்கும். எதிர்பாராத செலவுகள் ஏற்படும். வருமானமும் வந்து கொண்டிருக்கும். கடின உழைப்பிற்குப்பிறகே வெற்றி உங்களை தேடி வரும். ஆரோக்கியம் சிறக்கும்.

உத்தியோகஸ்தர்களிடம் மேலதிகாரிகள் நட்புடன் நடந்து கொள்வார்கள். சிறு தொல்லைகள் கொடுத்து வந்த சக ஊழியர்கள் அடங்கி விடுவார்கள். பணவரவுக்கு குறைவு இருக்காது. வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல்கள் நன்றாக நடக்கும். வியாபாரத்தில் அதிக விழிப்புணர்வு தேவை. விவசாயிகளுக்கு  மகசூலில் குறைவு இருக்காது. கால்நடைகளால் பலன்கள் உண்டாகும்.

அரசியல்வாதிகளின் பதவிக்கு நெருங்கிய சில நண்பர்கள் மூலமாகவே சில இடையூறுகள் ஏற்படலாம். மாற்றுக் கட்சியினரிடம் மனம் திறந்து பேசவேண்டாம். 
கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவீர்கள். பணவரவு இருப்பதால் சில நல்ல காரியங்களைச் செய்வீர்கள். பெண்மணிகள் ஆடம்பரப் பொருள்களை வாங்க விரும்புவர். குடும்பத்தில் சந்தோஷம் நிலவும். 

மாணவமணிகளுக்கு படிப்பில் உற்சாகம் குறையும் என்பதால் மதிப்பெண்களைப் பெறமுடியாமல் போகும்.

பரிகாரம்: குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபடவும். 

அனுகூலமான தினங்கள்: 2, 4. 

சந்திராஷ்டமம்: 5, 6, 7.

{pagination-pagination}
சிம்மம் (மகம், பூரம்,உத்திரம் முதல் பாதம் முடிய)

செல்வாக்கு, சொல்வாக்கு அதிகரிக்கும். பணவரவு படிப்படியாக உயரும். உறவினர்களாலும் நண்பர்களாலும் காரிய அனுகூலம் ஏற்படும். பயணங்கள் மனதிற்கு இனிமையை தரும். நெருங்கியவர்களுடன் இருந்த விரோதங்கள் குறையும்.

உத்தியோகஸ்தர்கள் வேலைகளைச் சிறப்பாக செய்து முடிப்பர். விரும்பத் தகாத நிகழ்ச்சிகளின் மூலம் விரும்பிய இடமாற்றங்கள் கிடைக்கும். வருமானம் திருப்தி தரும். 
வியாபாரிகளுக்கு பழைய பாக்கிகள் வசூலாகும். வாடிக்கையாளர்களின் வருகையால் விற்பனை அதிகரிக்கும். விவசாயிகளுக்கு நல்ல மகசூல் கிடைக்கும். புதிய குத்தகைகளை துணிந்து எடுக்கலாம். 

அரசியல்வாதிகளுக்கு சாதகமாக இருந்தவர்கள் எதிரிகளாக மாறும் நேரமிது. ஆகவே யாரையும் நம்ப வேண்டாம். கலைத்துறையினர் பல தடைகளைத் தாண்டி புதிய ஒப்பந்தங்களைச் செய்வர். வருமானமும் குறைவாகவே காணப்படும். 

பெண்மணிகளுக்கு குடும்பத்தில் மதிப்பு உயரும். கணவரிடம் ஒற்றுமை அதிகரிக்கும். மருத்துவச் செலவுகள் குறையும். மாணவமணிகளுக்கு படிப்பில் தேக்க நிலை உண்டாகும். நெருங்கியவர்களுடன் அன்பு பாசம் மேலோங்கும்.

பரிகாரம்: பெருமாளை வழிபட்டு சிறப்புடன் வாழுங்கள். 

அனுகூலமான தினங்கள்: 2, 5. 

சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}
கன்னி(உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)

பொருளாதார நிலைமை சீராகவே இருந்து வரும். பேச்சில் கண்ணியம் கூடும். எடுத்த காரியங்களைச் சிறப்பாக செய்து முடித்து புகழ் பெறுவீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். உறவினர்கள் மூலம் சிறு தொல்லைகள் ஏற்படும். 

உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளால் சில சிரமங்களை அனுபவிப்பார்கள். சக ஊழியர்களின் ஆதரவினால் அவைகளைச் சமாளிப்பீர்கள். வியாபாரிகள் புதுப்புது யுக்திகளைக் கையாண்டு, வியாபாரத்தைப் பெருக்குவார்கள். விவசாயிகள் லாபங்களைக் காண்பார்கள். குடும்பத்தில் படிப்படியாக குதூகலம் உண்டாகும். எண்ணெய் வித்துகள், கருப்பு தானியங்களால் வருமானம் கூடும்.

அரசியல்வாதிகள் மேலிடத்தின் ஆதரவைப் பெறுவார்கள். ஆனால் அதை முழுமையாக அனுபவிக்க விடாமல் சிறு குறுக்கீடுகள் ஏற்படும். தொண்டர்களை அரவணைத்துச் சென்று காரியங்களை சரிவரச் செய்யவும். கலைத்துறையினரைத் தேடி புதிய வாய்ப்புகள் வரும். 

பெண்மணிகளுக்கு கணவருடனான ஒற்றுமை நன்றாக இருக்கும். 
மாணவமணிகள் படிப்பில் கவனமாக இருக்கவும். ஆசிரியர்கள் பக்க பலமாக இருப்பார்கள்.

பரிகாரம்: பைரவரை வழிபட்டுவர, கஷ்டங்கள் குறையும். 

அனுகூலமான தினங்கள்: 3, 6. 

சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}

துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம் முடிய)

நினைத்த வேலைகள் அனைத்தும் எந்தவித இடையூறுகளுமின்றி எளிதாக முடியும். உறுதியான எண்ணங்களுடன் பெரும் வெற்றி காண்பீர்கள். உறவினர் மற்றும் நண்பர்களால் மனக்கசப்பு ஏற்படும். பொருளாதார நிலை சீராக இருக்கும்.

உத்தியோகஸ்தர்கள் அனைத்து வேலைகளையும் சந்தோஷமாகவும் ஆர்வமாகவும் முடிப்பார்கள். வருமானம் படிப்படியாக வளர்ச்சியடையும். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் எந்தக் குறைவும் ஏற்படாது. விவசாயிகள் சுமாரான மகசூலைக் காண்பார்கள். வருமானமும் சீராக இருக்கும். கால்நடைகளின் பராமரிப்புச் செலவுகளும் கூடும்.

அரசியல்வாதிகளுக்கு உயர்ந்தவர்களின் நட்பு கிடைக்கும். சமூகத்தில் மதிப்பு மரியாதை உயரும். மனதில் தோன்றும் எண்ணங்களை உடனுக்குடன் செயல்படுத்த முயலாதீர்கள். கலைத்துறையினர் முக்கிய முடிவுகள் எடுப்பதைக் குறித்து தற்போது யோசிக்க வேண்டாம். 

பெண்மணிகளுக்கு கணவருடன் ஒற்றுமை அதிகரிக்கும். குழந்தைகளின் மூலம் மகிழ்ச்சி கிட்டும். மாணவமணிகளுக்கு படிப்பில் அனுகூலமான காலமிது. இருப்பினும் ஆசிரியர்களின் ஆதரவு குறைந்திருக்கும்.

பரிகாரம்: செந்திலாண்டவரை வணங்கி வெற்றி பெறுங்கள். 

அனுகூலமான தினங்கள்: 1, 5. 

சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}
விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)

குடும்பத்தில் மகிழ்ச்சி தென்படும். பொருளாதாரத்தில் மகிழ்ச்சிகரமான முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் மங்களகரமான நிகழ்ச்சிகளை நடத்துவீர்கள். பிதுராஜித சொத்துகளில் இருந்த  வில்லங்கங்கள் விலகும்.  

உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின் கெடுபிடிகள் குறையும். சக ஊழியர்கள் நட்புடன் பழகுவார்கள். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல்களில் சிறிது சிரமம் ஏற்படும்.  கூட்டாளிகளால் சிறிது நன்மைகளைப் பெறுவீர்கள். விவசாயிகள் உற்பத்திப் பொருள்களால் நல்ல பயனுண்டு. கால்நடைகள் மூலம் விவசாயத்தைப் பெருக்க இது உகந்த காலம்.

அரசியல்வாதிகளுக்கு பெயரும் புகழும் அதிகரிக்கும். திட்டமிட்ட வேலைகளில் தடைகள் ஏற்பட்டாலும் இறுதியில் வெற்றி கிடைக்கும். கலைத்துறையினர் திறமைக்குத் தகுந்த வரவேற்புகளைப் பெறுவார்கள்.

பெண்மணிகளுக்கு கணவரிடம் அன்பும் பாசமும் அதிகரிக்கும். உறவினர்களின் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சியைக் காண்பீர்கள். மாணவமணிகளுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். பொறுப்புடன் படித்து எதிர்பார்த்த நல்ல மதிப்பெண்கள் பெறுவீர்கள்.

பரிகாரம்: ஆஞ்சநேயர், சனீஸ்வரரை தரிசனம் செய்யவும். 

அனுகூலமான தினங்கள்: 2, 6. 

சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}
தனுசு(மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)

ஏற்ற இறக்கங்கள் நிறைந்த காலமிது. சுப காரியங்கள் செய்து முடிப்பதில் சிறு தொய்வு ஏற்படும். வாகனச் செலவுகள்  ஏற்படும். உடல்வலி, உற்சாகக் குறைவு காணப்படும். புனித பயணங்கள் செய்ய நேரிடும்.
  
உத்தியோகஸ்தர்களுக்கு போட்டியாக சக ஊழியர்களே நடந்து கொள்வார்கள். அவர்களிடம் எச்சரிக்கை தேவை. மேலதிகாரிகளின் நடவடிக்கைகளும் சாதகமாக இராது. 
வியாபாரிகளுக்கு தொழிலில் சுமுக நிலைமை நிலவும். லாபம் கிடைப்பதால் திருப்பதியுடன் இருப்பீர்கள். விவசாயிகளுக்கு கொள் முதலில் லாபம் பெருகும். சுபச்செலவுகளைச் செய்வீர்கள். 

அரசியல்வாதிகள் பொறுப்புடன் உணர்ந்து நடந்து கொள்வார்கள். புதிய முயற்சிகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். கட்சி மேலிடத்தின் ஆதரவு குறைவாக இருப்பதால் எச்சரிக்கை தேவை. கலைத்துறையினர் ஒப்பந்தங்களை சரியான நேரத்தில் முடித்து கொடுத்தாலும் பணவரவு தாமதமாகவே இருக்கும். 

பெண்மணிகளுக்கு கணவரின் அன்பும் பாசமும் அதிகரிக்கும். உறவினர்களிடம் அன்பாகப் பழகுவீர்கள். மாணவமணிகள் படிப்பில் நல்லபடியான முன்னேற்றத்தைக் காண்பீர்கள்.

பரிகாரம்: ஞாயிறன்று சூரியபகவானையும் சிவபெருமானையும் வழிபடவும். 

அனுகூலமான தினங்கள்: 6, 7. 

சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}
மகரம்(உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)

புதிய உற்சாகம் உருவாகும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். உற்றார் உறவினர்கள் ஆதரவுக்கரம் நீட்டுவார்கள். எண்ணங்கள் அனைத்தும் செயல்வடிவம் பெறும். தேவைக்கேற்ப செலவுகள் செய்து சேமிப்பில் கவனம் செலுத்துவீர்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு அனைத்து வேலைகளும் சந்தோஷமாக முடியும். வருமானமும் திருப்திகரமாக இருக்கும். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல்களில் இருந்த சிரமங்கள் குறையும். வியாபாரத்தை விரிவு படுத்தும் எண்ணத்தை தள்ளிப் போடவும். விவசாயிகள் பிற்கால திட்டங்களுக்கு செலவு செய்வீர்கள். கொள்முதலில் லாபம் உண்டாகும். 

அரசியல்வாதிகள் புதிய முயற்சிகளைத் தள்ளிப்போடவும். கோரிக்கைகளைத் தலைமையிடம் தெரிவித்து அமைதி காக்கவும். கலைத்துறையினர் வேலைகளை நேர்த்தியாக முடிப்பீர்கள். பெண்மணிகளுக்கு கணவருடனான ஒற்றுமை சுமாராகவே இருக்கும். பிடிவாத குணத்தைத் தவிர்ப்பது நல்லது. 

மாணவமணிகள்  தற்போது செய்யும் சிறு முயற்சிகளும் அதிக மதிப்பெண்களைப் பெற்றுத் தரும். சிறிய உடற்பயிற்சிகளை மேற்கொண்டு உற்சாகத்தைப் பெறுங்கள். 

பரிகாரம்: குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபடவும். 

அனுகூலமான தினங்கள்: 5, 6.

சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}
கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)

மகிழ்ச்சியளிக்கும் செய்திகள் தேடிவரும். உற்சாகமாக இருப்பீர்கள். திட்டமிட்ட வேலைகளில் வெற்றி கிடைக்கும். தொழிலில் எதிர்பார்த்த வளர்ச்சி காண்பீர்கள். வாக்குறுதி மற்றும் முன்ஜாமீன் போடுவதைத் தவிர்க்கவும்.

உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலக வேலைகள் அனைத்தும் சுமுகமாக முடியும். மனத் திருப்தி அடைவீர்கள். வியாபாரிகளுக்கு பழைய பாக்கிகள் வசூலாகும். வாடிக்கையாளர்களின் வருகையால் விற்பனை அதிகரிக்கும். விவசாயிகளுக்கு நல்ல மகசூல் கிடைக்கும். புதிய குத்தகைகளைத் துணிந்து எடுக்கலாம். பழைய பாக்கிகள் வசூலாகும்.

அரசியல்வாதிகள் உட்கட்சிப் பூசலினால் கட்சித் தலைமையிடம் கவனமாக இருக்கவும். நண்பர்கள் போல் பழகும் எதிரிகளை கண்டறிந்து உஷாராக இருக்கவும். கலைத்துறையினருக்கு எதிர்பார்த்த வாய்ப்புகள் கைநழுவிப் போகும். சக கலைஞர்களை அனுசரித்துச் செல்லவும்.

பெண்மணிகளுக்கு குடும்பத்தில் மதிப்பு உயரும். கணவரிடம் ஒற்றுமை அதிகரிக்கும். மாணவமணிகளுக்கு படிப்பில் சிறிய தேக்க நிலை உண்டாகும். விளையாட்டில் கவனத்தைக் குறைக்கவும்.

பரிகாரம்: பெருமாள்} தாயாரை வழிபட்டு வரவும். 

அனுகூலமான தினங்கள்: 4,  7. 

சந்திராஷ்டமம்: இல்லை. 

{pagination-pagination}
மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

தந்தை வழி உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகளைப் பெறுவீர்கள். ஆற்றல் அதிகரிக்கும். உடன்பிறந்தோர் அன்புக்கரம் நீட்டுவார்கள். தைரியத்துடன் எதையும் சாதிக்கும் வலிமையை பெறுவீர்கள். உடல்நலம் சற்று பாதிக்கப்படும்.

உத்தியோகஸ்தர்கள் அலுவலக வேலைகளில் கவனம் செலுத்தவும். சக ஊழியர்களை அனுசரித்துச் செல்லவும்.  வியாபாரிகள் தீர ஆலோசித்து முதலீடுகள் செய்து பயன் பெறுவார்கள். கூட்டாளிகளின் எண்ணங்களைப் புரிந்து அதன்படி நடந்து  கொள்வீர்கள். விவசாயிகளுக்கு லாபங்கள் அதிகரிக்கும். எண்ணெய் வித்துகள், கருப்பு தானியங்களினால் வருமானம் வரும். 

அரசியல்வாதிகள் மேலிடத்தின் ஆதரவைப் பெறுவார்கள். தொண்டர்கள் சற்று பாராமுகமாகவே நடந்து கொள்வார்கள். கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களைச் செய்வார்கள். சுலபமாக முடித்து பாராட்டுகளையும் பெறுவீர்கள். 

பெண்மணிகள் மகிழ்ச்சியுடன் காணப்படுவார்கள். உறவினர்கள், குழந்தைகளுடன் கால நேரங்களை சந்தோஷமாக செலவிடுவார்கள். மாணவமணிகள் விளையாடுவதைக் குறைத்துக்கொண்டு, கடுமையாக உழைத்துப் படிக்கவும்.

பரிகாரம்: அம்மனை தரிசனம் செய்து நலன் பெறுங்கள். 

அனுகூலமான தினங்கள்: 2, 6.
 சந்திராஷ்டமம்: இல்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com