சுடச்சுட

  
  astrology

   

  12 ராசிக்காரர்களுக்குமான இந்த வார (மார்ச் 8 - மார்ச் 14) பலன்களை தினமணி ஜோதிடர் கே.சி.எஸ்.ஐயர் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்து பலனடைவோம். 

  மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

  தேவையற்ற விஷயங்களைக் கண்டு கொள்ளாமல் "கொக்குக்கு மதி ஒன்றே‘ என்ற ரீதியில் செயல்படுவீர்கள். சமயோஜித புத்தியுடன் செயல்பட்டு நற்பெயர் பெறுவீர்கள். பொருளாதாரத்தில் முன்னேற்றம் காண்பீர்கள். உடல்நலனில் அக்கறை தேவை.

  உத்தியோகஸ்தர்கள் விட்டுக்கொடுத்து நடந்துகொள்வார்கள். மேலதிகாரிகள் உங்களைச் சந்தேகக் கண் கொண்டு பார்ப்பார்கள். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல் விஷயங்கள் சாதகமாக முடியும். இருப்பினும் கவனம் தேவை. விவசாயிகள் விளைச்சலில் எதிர்பார்த்த லாபத்தை அள்ளுவார்கள். விவசாயப் பணியாளர்களுக்கு உதவிகள் செய்வீர்கள். 

  அரசியல்வாதிகள் அனுகூலமான திருப்பங்களை எதிர்பார்க்க முடியாது. உற்சாகமின்மை, மேலிட அவமதிப்பு போன்றவைகளைச்சந்திப்பீர்கள். கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் குறையும். சக கலைஞர்கள் உதவமாட்டார்கள். பெண்மணிகள் குடும்ப ஒற்றுமையை காப்பதில் சற்றுச் சிரமப்படுவார்கள். எனினும் குழந்தைகளால் எந்தப் பிரச்னையும் கிடையாது. 

  மாணவமணிகள் விளையாட்டில் கவனத்துடன் ஈடுபடவும். பெற்றோர், ஆசிரியரை அனுசரிக்கவும்.

  பரிகாரம்: பழனி ஆண்டவரை தரிசித்து வணங்கி வரவும். 

  அனுகூலமான தினங்கள்: 8, 9. 

  சந்திராஷ்டமம்: இல்லை.

  {pagination-pagination}
  ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய)

  பொருளாதாரத்தில் இருந்து வந்த சிரமங்கள் குறையும். உற்றார் உறவினர்கள் அனுகூலமாக இருப்பார்கள். தந்தையின் உடல்நலத்தில் கவனம் செலுத்தவும். விடாமுயற்சியால் வெற்றிவாகை சூடுவீர்கள்.

  உத்தியோகஸ்தர்கள் அனைத்துப் பணிகளையும் குறித்த நேரத்திற்குள் முடித்து மேலதிகாரிகளின் பராராட்டுகளைப் பெறுவீர்கள். வியாபாரிகள் புதிய சந்தைகளை நாடிச் சென்று வியாபாரத்தைப் பெருக்கவும். பொருள்களை குறைந்த விலைக்கு விற்று நல்ல லாபம் பெறலாம். விவசாயிகளுக்கு விளைச்சல் நன்றாகவே இருக்கும். பாசன வசதிகளை மேம்படுத்தும் முயற்சிகளில் ஈடுபடுவீர்கள்.  

  அரசியல்வாதிகள் வீண் வாக்கு வாதங்கலில் ஈடுபட வேண்டாம். கொடுத்த பொறுப்புகளை கவனமாகச் செய்து முடியுங்கள். கலைத்துறையினருக்கு கடின முயற்சிகளுக்குப்பிறகே புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். ரசிகர்களின் ஆதரவு தொடர்ந்து இருக்கும். 

  பெண்மணிகளுக்கு கணவரிடம் கருத்து வேறுபாடுகள் தோன்றும். விட்டுக்கொடுத்துச் செல்லவும். மாணவமணிகள் பாடங்களை ஒருமுறைக்கு இருமுறை படித்து மனப்பாடம் செய்யவும்.  

  பரிகாரம்: திங்கள்கிழமையில் பார்வதி பரமேஸ்வரரை வழிபடவும். 

  அனுகூலமான தினங்கள்: 8, 10. 

  சந்திராஷ்டமம்: இல்லை.

  {pagination-pagination}

  மிதுனம் (மிருகசீரிஷம்3ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)

  எல்லா செயல்களும் திட்டமிட்டதுபோன்று நடக்கும். குடும்ப நலம் சீராகும். உடன்பிறந்தோரால் நல்லது கெட்டது இரண்டும் கலந்தே நடக்கும். அவர்களிடம் எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்வது நல்லது.

  உத்தியோகஸ்தர்கள் பதற்றப்படாமல் அலுவலக வேலைகளைச் செய்யவும். சக ஊழியர்கள் சற்று பாராமுகமாகவே இருப்பார்கள். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல்கள் சுமாராகவே இருக்கும். புதிய முதலீடுகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். 

  விவசாயிகளுக்கு மகசூல் குறைவாகவே இருக்கும். மாற்று பயிர்களை உற்பத்திச் செய்யலாம். கால்நடைகளால் சில செலவுகளையும்சந்திக்க நேரிடும்.
   
  அரசியல்வாதிகளுக்கு கட்சிப் பணிகளில் நாட்டம் குறையும். தொண்டர்களின் ஆதரவும் குறைந்தே காணப்படும். கலைத்துறையினருக்கு முயற்சிகளுக்குப்பிறகே புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். ரசிகர்களின் ஆதரவு குறைந்திருக்கும். பெண்மணிகள் குடும்பத்தில் சந்தோஷத்தைக் காண்பார்கள். கணவரிடம் ஒற்றுமையோடு இருப்பர். 

  மாணவமணிகள் படிப்பில் கவனம் செலுத்தவும். வெளிவிஷயங்களில் ஆர்வத்தைக் குறைக்கவும்.

  பரிகாரம்: பார்வதி தேவியை வழிபட்டு சிறப்படையவும். 

  அனுகூலமான தினங்கள்: 9, 10. 

  சந்திராஷ்டமம்: இல்லை.

  {pagination-pagination}
  கடகம்  (புனர்பூசம்4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

  உயர்வான காலமிது. பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். தைரியமாக காரியங்களில் ஈடுபடுவீர்கள். குடும்பத்திலும் சமுதாயத்திலும் செல்வாக்கு சீராகவே காணப்படும். எதிரிகளின் பலம் குறையும். பணவரவு நன்றாக இருக்கும்.

  உத்தியோகஸ்தர்கள் இடைவிடாமல் உழைக்க வேண்டி வரும். உங்கள் வேலைகள் சரியான இலக்குகளை சென்றடையும். வியாபாரிகளுக்கு கொள்முதல் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். நண்பர்களின் ஆதரவு இருப்பதால் புதிய முதலீடுகளில் தைரியமாக ஈடுபடலாம். விவசாயிகள் அதிக நீர்வரத்தைப் பயன்படுத்தி பாசன வசதிகளை மேம்படுத்திக் கொள்வார்கள். 

  அரசியல்வாதிகளிடம் கட்சி மேலிடம் அனுகூலமாக நடந்துகொள்ளும். புதிய பணிகளை நேர்த்தியாகச் செய்து பாராட்டுகளைப் பெறுவார்கள். கலைத்துறையினர் அனைத்து வேலைகளையும் சிறப்பாகச் செய்வீர்கள். 

  பெண்மணிகள் பொருளாதார அபிவிருத்தியால் ஆடை ஆபரணங்களை வாங்கி மகிழ்வர். உஷ்ணாதிக்க நோய்கள் ஏற்படவும் வாய்ப்புண்டு. மாணவமணிகள் எதிர்பார்த்த மதிப்பெண்களைப் பெறுவார்கள்.  

  பரிகாரம்: நந்தீஸ்வரருக்கு அருகம்புல் மாலை அணிவித்து நலம் பெறவும்.

  அனுகூலமான தினங்கள்: 10, 11. 

  சந்திராஷ்டமம்: இல்லை.

  {pagination-pagination}
  சிம்மம்(மகம், பூரம்,உத்திரம் முதல் பாதம் முடிய)

  இன்பகரமான காலமிது. எண்ணங்கள் ஈடேறும். தெய்வ வழிபாடுகளில் மனம் ஈடுபடும். பணவசதி சரளமாக இருக்கும். சுபச் செலவுகள் செய்ய வேண்டி வரும். மனதில் தன்னம்பிக்கை நிறைந்திருக்கும். உறவினர்கள் அனுசரணையாக இருப்பார்கள்.

  உத்தியோகஸ்தர்களுக்கு நிம்மதி ஏற்படும். மேலதிகாரிகள் உங்கள் நலனில் அக்கறை செலுத்துவார்கள். அலுவலக ரீதியாக வெளியூர் செல்லும் வாய்ப்பு ஏற்படும். வியாபாரிகள் புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றி பெறுவார்கள். கூட்டாளிகள் உங்கள் பேச்சைக் கேட்டு நடப்பர். 

  விவசாயிகள் அதிக மகசூலைக் காண்பார்கள். கால்நடைகளால் செலவுகள் ஏற்படும்.

  அரசியல்வாதிகள் எடுத்த காரியங்களை வெற்றிகரமாக முடிப்பார்கள். மேலிட ஆதரவினால் புதிய பொறுப்புகளைப் பெறுவர். கலைத்துறையினர் உற்சாகத்துடன் பணிபுரிவார்கள். சில சிரமங்களுக்குப்பிறகே புதிய ஒப்பந்தங்கள் பெறுவர். 

  பெண்மணிகள் தங்கள் இல்லத்தில் நிலவும் நிம்மதியான சூழலினால் திருப்தியடைவார்கள். மாணவமணிகள் படிப்பில் அதிக மதிப்பெண்களைப் பெறுவார்கள். கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொள்வார்கள்.

  பரிகாரம்: செவ்வாயன்று முருகப்பெருமானை வழிபடவும். 

  அனுகூலமான தினங்கள்: 10, 11.

  சந்திராஷ்டமம்: 8, 9.

  {pagination-pagination}
  கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)

  கலகலப்பாக உலா வருவீர்கள். உங்கள் அந்தஸ்தும் உயரும். எதிர்வரும் இடையூறுகளைத் தகர்ப்பீர்கள். உற்றார் உறவினர்கள் ஆதரவாக இருக்க மாட்டார்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்கவும்.

  உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளிடம் ஒத்துழைப்புடன் நடந்து கொள்வர். அவர்களின் பாராட்டுகளைப் பெற்று கோரிக்கைகளை நிறைவேற்றிக்கொள்வர். வியாபாரிகளுக்கு இது லாபகரமான காலம். கொடுக்கல் வாங்கல்கள் சீராகவே இருக்கும். 

  விவசாயிகள் சந்தையில் போட்டிக்குத் தகுந்தவாறு விற்பனை செய்வீர்கள். திருப்திகரமான வருமானம் பெறுவீர்கள்.

  அரசியல்வாதிகள் தங்கள் முயற்சிக்கேற்ற பொறுப்புகளைப் பெறுவார்கள்.  உடல் சோர்வைப் பொருட்படுத்தாமல் கட்சிப் பணியாற்றுவீர்கள். கலைத்துறையினர் மனதிற்கினிய புதிய ஒப்பந்தங்கள் செய்வார்கள். ரசிகர்களை உற்சாகப் படுத்துவர்.

  பெண்மணிகள் கணவரிடம் ஒற்றுமையோடு இருப்பீர்கள். குடும்பத்தினரை அனுசரித்துச் செல்லவும். மாணவமணிகள் அதிகமாக உழைத்து நல்ல மதிப்பெண்களைப் பெறுவார்கள்.

  பரிகாரம்: செவ்வாய்க்கிழமையில் முருகப்பெருமானையும் துர்க்காதேவியையும் வழிபடவும். 

  அனுகூலமான தினங்கள்: 12, 13. 

  சந்திராஷ்டமம்: 10, 11.

  {pagination-pagination}
  துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம் முடிய)

  நடக்காது என்ற நினைத்திருந்த காரியங்கள் திடீரென்று நடந்து உங்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தும். உடல்நலத்தில் அக்கறை செலுத்தவும். பிறருக்கு வாக்கு கொடுப்பதையோ ஜாமீன் போடுவதையோ தவிர்க்கவும். தந்தை வழி உறவுகளில் சிறு மனக்கசப்பு  உண்டாகும்.

  உத்தியோகஸ்தர்களுக்கு வேலைச்சுமை குறையும். ஊதிய உயர்வு பெறுவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.

  வியாபாரிகளுக்கு முயற்சிகளுக்கேற்ப லாபம் கிடைக்கும். புதிய கடன்களை வாங்குவது, புதிய முதலீடுகளில் இறங்குவதைத் தவிர்க்கவும்.

  விவசாயிகளுக்கு கடின முயற்சியில் கொள்முதல் லாபம் கிடைக்கும்.  தோட்டப்பயிர்களால் லாபம் உண்டு.

  அரசியல்வாதிகள் அனுகூலமான திருப்பங்களைக் காண்பார்கள். மேலிடத்தின் பாராட்டைப் பெறுவார்கள். கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களைச் செய்ய சில தடைகள் ஏற்படலாம். அந்தஸ்துக்கு குறைவான விஷயங்களில் ஒதுங்கிச் செல்லவும். 

  பெண்மணிகளுக்கு கணவரிடம் ஒற்றுமை  அதிகரிக்கும். ஆன்மிகத்தில் ஆர்வம் கூடும். மாணவமணிகள் ஒருமித்த சிந்தனையுடன் படித்து மதிப்பெண்கள் பெறுவதற்கு முயற்சிக்கவும்.

  பரிகாரம்:  புதன்கிழமையில் ஸ்ரீராமரை  வழிபடவும். 

  அனுகூலமான தினங்கள்: 8, 11. 

  சந்திராஷ்டமம்: 12, 13, 14.

  {pagination-pagination}
  விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)

  புத்திசாலித்தனத்துடன் செயல்படுவீர்கள். ஆற்றலும் தைரியமும் கூடும். பொருளாதாரம் சீராகவே இருக்கும். உடன்பிறந்தோர் வகையில் சிறப்புகள் கூடும். வழக்குகளில் சாதகமான தீர்ப்பு வரும்.  

  உத்தியோகஸ்தர்கள் வேலைகளை கச்சிதமாக முடிக்க முயற்சி செய்யவும். சக ஊழியர்களின் ஆதரவு இருப்பதால் எடுத்த காரியங்களில் பிரச்னை எதுவும் இராது. 
  வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல்களில் லாபம் கிடைக்கும். நண்பர்களின் உதவியால் எண்ணங்கள் செயல் வடிவம் பெறும். விவசாயிகள் செய்ய நினைத்த வேலைகளைச் செய்து முடிப்பார்கள். பழைய குத்தகை பாக்கிகளை திருப்பிச் செலுத்துவீர்கள்.

  அரசியல்வாதிகளுக்கு போட்டிகள் அதிகரிக்கும். உங்கள் பணிகளில் புதிய வேகத்துடன் ஈடுபடுவீர்கள். அரசு அதிகாரிகள் சாதகமாக இருப்பார்கள். கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்கள் செய்வீர்கள். சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிட்டும்.

  பெண்மணிகள் குடும்பத்தில் ஒற்றுமையை காண்பார்கள். வேலைக்குச் செல்லும் பெண்களின் கோரிக்கைகள் நிறைவேறும். மாணவமணிகள் படிப்பில் அதிக கவனம் செலுத்தவும்.

  பரிகாரம்: சூரிய நமஸ்காரம் செய்து ஆத்ம ஒளி பெறுங்கள்.

  அனுகூலமான தினங்கள்: 9, 13. 

  சந்திராஷ்டமம்: இல்லை.

  {pagination-pagination}
  தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)

  மகிழ்ச்சி தரக்கூடிய செய்திகளைக் கேட்பீர்கள்.  இடையூறுகளை மிகவும் சாதுர்யத்துடன்  சமாளிப்பீர்கள். உடலில் சிறு உபாதை தோன்றிபின் சரியாகும். ஆன்மிகச் சிந்தனைகளால் புதிய பலம் கிடைக்கும்.

  உத்தியோகஸ்தர்கள் அலுவலக வேலைகளில் முன்கூட்டியே செயல்படவும். மேலதிகாரிகளிடம் ஒத்துழைப்போடு நடந்து கொள்ளவும். வியாபாரிகள் வீண் ஆசாபாசங்களை வளர்த்துக் கொள்ள வேண்டாம். திட்டமிட்ட வேலைகளை ஒத்திப்போடவும். விவசாயிகளுக்கு கொள் முதல் அதிகமாக இருந்தாலும் லாபம் குறைவாகவே இருக்கும்.

  அரசியல்வாதிகள் சற்று எதிரிகளின் தொல்லைகளுக்கு ஆளாவார்கள். கட்சி மேலிடம் உங்களின் பேச்சைக் கண்காணிக்கும். கலைத்துறையினரின் கோரிக்கைகள் நிறைவேறும். தொழிலில் முன்னேற்றம் அடைவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள்.

  பெண்மணிகள் தம் கணவருடன் நேசமாகப் பழகி பிரச்னைகளைத் தீர்த்துக் கொள்வர். பணவரவு அதிகரிக்கும். உறவினர்களை அரவணைத்துச் செல்லவும். மாணவமணிகள் படிப்பில் கவனம் செலுத்தி நல்ல மதிப்பெண்களைப் பெறுவார்கள்.  

  பரிகாரம்: சனிக்கிழமைகளில் சனீஸ்வரரை வழிபடவும். 

  அனுகூலமான தினங்கள்: 10, 14. 

  சந்திராஷ்டமம்: இல்லை.

  {pagination-pagination}

  மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)

  சமூகத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். தொழிலில் எதிர்பார்த்த முன்னேற்றத்தை அடைவீர்கள். விடாமுயற்சியால் வெற்றி வாகை சூடுவீர்கள். நெருங்கியவர்களுடன் விரோதம் உண்டாகும். பேசும் நேரத்தில் வார்த்தைகளில் கவனம் தேவை.

  உத்தியோகஸ்தர்கள் அனைத்து வேலைகளையும் குறித்த நேரத்தில் முடித்து மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல்களில் சுமுக நிலைமை தென்படும். அதிக லாபத்தை எதிர்பார்த்து வீண் கடன் தொல்லைகளுக்கு ஆளாக வேண்டாம். விவசாயிகளுக்கு லாபம் குறையும். கூடுதல் வருமானம்பெற மாற்றுப் பயிர் செய்யவும். 

  அரசியல்வாதிகள் மக்கள் நலப்பணிகளில் கவனத்துடன் ஈடுபடுவார்கள். உங்கள் அந்தஸ்து அதிகரிக்கும். கடன் வாங்கி பணிகள் செய்வதைத் தவிர்க்கவும். 

  கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்களில் நல்ல வருமானம் கிடைக்கும்.

  பெண்மணிகள் வீண் வாக்குவாதங்களைத் தவிர்க்கவும். எதையும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்துச் செய்யவும். 

  மாணவமணிகள் படிப்பில் கவனம் செலுத்தவும். விளையாட்டில் எதிர்பார்த்த வெற்றிகளைப் பெறுவீர்கள்.

  பரிகாரம்: திங்கள்கிழமையில் விநாயகருக்கு அருகம்புல் மாலை அணிவித்து வழிபடவும். அனுகூலமான தினங்கள்: 9, 12. சந்திராஷ்டமம்: இல்லை.

  {pagination-pagination}
  கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)

  உங்கள் ஆற்றல் வெளிப்படும். எதிலும் நிதானமாக ஈடுபடவும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். முயற்சிகளில் தடங்கலுக்குப் பிறகே வெற்றி கிடைக்கும். ஸ்பெகுலேஷன் துறைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும்.

  உத்தியோகஸ்தர்களுக்கு ஊதிய உயர்வும் பதவி உயர்வும் கிடைக்கும். திட்டமிட்ட வேலைகளைச் செய்து முடிப்பதில் தாமதம் ஏற்படும். வியாபாரிகள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். கூட்டுத்தொழிலில் இருப்பவர்கள் சற்று உஷாராக இருப்பது நல்லது. விவசாயிகள் எதிலும் எச்சரிக்கையுடன் ஆராய்ந்து செயல்பட்டால் நஷ்டங்களைத் தவிர்க்கலாம்.

  அரசியல்வாதிகளின் அந்தஸ்தில் சற்று குறைபாடுகள் உண்டாகும். தொண்டர்களின் பாராமுகத்தால் கோபமடையாமல் செயலாற்றவும். கட்சி மேலிடத்திடம் எச்சரிக்கையாக இருக்கவும். 

  கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களைச் செய்வார்கள். தங்கள் திறமைகளை வெளிப்படுத்துவார்கள். பெண்மணிகள் கணவன் மற்றும் குடும்பத்தாருடன் நல்லுறவைக் காண்பார்கள். மாணவமணிகள் வீண் பிரச்னைகளில் சிக்கிக் கொள்வார்கள். விளையாடும்போதும் கவனமாக இருக்கவும்.

  பரிகாரம்: புதன்கிழமைகளில் பெருமாளை தரிசித்து வரவும். 

  அனுகூலமான தினங்கள்:  11, 12. 

  சந்திராஷ்டமம்: இல்லை.

  {pagination-pagination}
  மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

  பெற்றோர் நலனில் அக்கறை செலுத்துவீர்கள். ஆற்றல் வெளிப்படும். செய்துவரும் தொழிலில் சீரான வளர்ச்சியைக் காண்பீர்கள். உடன்பிறந்தோரிடம் சில காரியங்களை நிறைவேற்றிக் கொள்வீர்கள். 

  உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின் மூலம் சில சஞ்சலங்கள் உண்டாகும். எனினும் அதிலிருந்து விரைவாக விடுபடுவீர்கள். அலுவலக வேலைகளில் பொறுமையுடனும் நிதானத்துடனும் நடந்து கொள்வீர்கள். வியாபாரிகள் புதிய கடைகள் திறப்பார்கள். தொழிலில் திருப்பங்கள் ஏற்படும். வழக்குகள் சாதகமாக முடியும். 
  விவசாயிகளுக்கு கொள்முதலில் லாபம் அதிகரிக்கும். புதிய குத்தகைகள் தேடிவரும். தேவையற்ற வரப்பு விவகாரங்களில் தலையிட வேண்டாம்.

  அரசியல்வாதிகள் புதிய முயற்சிகளில் ஈடுபடுவதைத் தள்ளி வைக்கவும். கலைத்துறையினர்  முக்கிய முடிவுகளை இந்த காலகட்டத்தில் எடுக்க வேண்டாம். 
  பெண்மணிகளுக்கு கணவருடனான ஒற்றுமை அதிகரிக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடத்துவீர்கள். மாணவமணிகள் தினமும் நன்றாகப் படித்து எதிர்பார்த்த மதிப்பெண்களை அள்ளுவார்கள்.

  பரிகாரம்: சிவபெருமானை துதித்து பலன்களைப் பெருக்கிக் கொள்ளவும். 

  அனுகூலமான தினங்கள்: 13, 14. 

  சந்திராஷ்டமம்: இல்லை.


   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai