திருப்பதி: பக்தர்களின் குறைதீர்க்க புதிய நிகழ்ச்சி

பக்தர்களின் குறைகளைத் தீர்க்கும் நோக்கில், திருப்பதி தேவஸ்தானம் "டயல் யுவர் ஜே.ஈ.ஓ' என்ற புதிய நிகழ்ச்சியை வரும் 15-ஆம் தேதி தொடங்க உள்ளது.


பக்தர்களின் குறைகளைத் தீர்க்கும் நோக்கில், திருப்பதி தேவஸ்தானம் டயல் யுவர் ஜே.ஈ.ஓ என்ற புதிய நிகழ்ச்சியை வரும் 15-ஆம் தேதி தொடங்க உள்ளது.
ஏழுமலையான் கோயிலைத் தவிர, தேவஸ்தானம் நிர்வகிக்கும் கோயில்களில் பக்தர்கள் சந்திக்கும் பிரச்னைகள் குறித்து கேட்டறிய இந்த நிகழ்ச்சியை மாதந்தோறும் 3-ஆம் வெள்ளிக்கிழமைகளில் நடத்த தேவஸ்தானத்தின் திருப்பதி செயல் இணை அதிகாரி லட்சுமிகாந்தம் முடிவு செய்துள்ளார். அதன்படி திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில், திருப்பதி கோவிந்தராஜர் கோயில், அப்பளாய்குண்டா பகுதியில் உள்ள பிரசன்ன வெங்கடேஸ்வரர் கோயில், சீனிவாசமங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வரர் கோயில், நாகலாபுரம் வேதநாராயணர் கோயில், நாராயணவனம் கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி கோயில் உள்ளிட்ட கோயில்களில் ஏற்படும் பாதுகாப்பு குறைபாடுகள், பக்தர்களின் அசௌகரியங்கள் உள்ளிட்டவை குறித்து தொலைபேசி மூலம் கேட்டறிய இந்த நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது. 
அதன்படி, முதல் நிகழ்ச்சி வரும் 15ஆம் தேதி காலை 8.30 முதல் 9.30 மணிவரை நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க விரும்பும் பக்தர்கள் 0877-2234777 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ள வேண்டும். திருப்பதியில் உள்ள வாடகை அறைகளில் பக்தர்கள் எதிர்கொள்ளும் இன்னல்கள் குறித்தும் இந்நிகழ்ச்சி மூலம் புகார் அளிக்கலாம். இதில்  பக்தர்களின் குறைகளுக்கு திருப்பதி செயல் இணை அதிகாரி லட்சுமிகாந்தம் பதிலளிக்க உள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com