சுடச்சுட

  

  சித்தகிரி முருகன் கோயிலில் பங்குனி உத்திர விழா கொடியேற்றம்

  By DIN  |   Published on : 14th March 2019 10:54 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  siddhagiri_murugan

  அவலூர்பேட்டை மலை மீது அமைந்துள்ள சித்தகிரி முருகன் கோயில் 96-ம் ஆண்டு பங்குனி உத்திரப்பெருவிழா கொடி ஏற்றம் அருகிலுள்ள இடும்பன் கோயில் அருகே செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 

  விழாவை முன்னிட்டு மார்ச் 12-ஆம் தேதி முதல் 16-ஆம் தேதி வரை பார்வதி கரம் பற்றிய பரமன், இறைவாசகம் சொன்ன திருவாசகர், காளத்தி முதல் காரைக்கால் வரை நாதனாய் நின்றவன், தூதுவனாய் சென்றவன், பரமனின் விளையாட்டு எனும் தலைப்புகளில் கவிஞர் பட்டுக்கோட்டை ராஜப்பாவின் சொற்பொழிவும், குமரனின் பெருமை, ஆன்மிகமே ஆனந்தம், நின்னைச் சரணடைந்தேன், அரவம் வணங்கிய அப்பூபதி அடிகள், குகனை வென்ற குறமகள் எனும் தலைப்புகளில் நாஞ்சில் முத்துலட்சுமியின் சொற்பொழிவும் நடைபெற உள்ளன. 

  வருகிற 20-ஆம் தேதி இரவு ராமலிங்க சாமுண்டீஸ்வரி அம்மன் கோயிலில் இருந்து சக்திவேல் புறப்பாடு, 21-ஆம் தேதி காலை சக்திவேல், காவடி சேவார்த்திகள் ஊர்வலம், அன்று இரவு அறம் வளர்த்த நாயகி உடனுறை அகத்தீஸ்வரன் திருக்கல்யாணம், 22-ஆம் தேதி புஷ்ப ரதங்கள் ஊர்வலம், இரவு வள்ளி தேவசேனா உடனுறை முருகப்பெருமான் திருக்கல்யாணம், தங்க மயில் வாகனத்தில் திருவீதியுலா ஆகியவை நடைபெறவுள்ளன.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai