சுடச்சுட

  
  amman

  அம்மனுக்கு  நடைபெற்ற பால் அபிஷேகம். 


  பாடியநல்லூர் முனீஸ்வரர் அங்காள ஈஸ்வரி கோயில் தீமிதித் திருவிழா வரும் 24-ஆம் தேதி நடைபெறுகிறது.
  திருவள்ளூர் மாவட்டம், பாடியநல்லூர் பர்மாநகரில் உள்ள முனீஸ்வரர் அங்காள ஈஸ்வரி ஆலயத்தின் 54-ஆம் ஆண்டு தீமிதித் திருவிழா, வியாழக்கிழமை காப்பு கட்டுதல் என்ற கொடியேற்ற நிகழ்ச்சியுடன் தொடங்கியது. 
  இந்த விழா, வரும் 25-ஆம் தேதி வரை அம்மனுக்கு சிறப்பு ஆராதனைகள் மற்றும் பூஜைகளுடன் நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து, அன்ன தானம், அம்மன் வீதியுலா ஆகியவை நடைபெறும். 
  கோயிலில் வரும் 24-ஆம் தேதி தீமிதித் திருவிழா நடைபெறுகிறது.
  விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் மனோகரன், ராஜேந்திரன், பொருளாளர் வேலாயுதம், அறங்காவலர் குழுத் தலைவரும், சோழவரம் ஒன்றிய முன்னாள் தலைவருமான பி.கார்மேகம் உள்ளிட்டோர் செய்து வருகின்றனர். 
  மாதவரம் காவல் துணை ஆணையர் ரவளி பிரியாபுனேனி தலைமையில் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில்  ஈடுபட்டுள்ளனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai