சுடச்சுட

  
  tirupathi


  திருமலையில் வருடாந்திர தெப்போற்சவத்தை முன்னிட்டு ஆர்ஜித சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

  ஏழுமலையான் கோயிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு ஆண்டுதோறும் தெப்போற்சவத்தை தேவஸ்தானம் நடத்தி வருகிறது. அதன்படி சனிக்கிழமை முதல் இவ்விழா தொடங்க உள்ளது.

  திருக்குளத்தில் அமைக்கப்பட்ட இரண்டடுக்கு தெப்பத்தில் தினமும் இரவு 7 மணி முதல் உற்சவமூர்த்திகள் வலம் வர உள்ளனர். அதற்கான ஏற்பாடுகள் நிறைவு பெற்றுள்ளன. தெப்போற்சவத்தை பக்தர்கள் அமர்ந்து காண வசதிகள் செய்யப்பட்டுள்ளன. 

  இதை முன்னிட்டு வரும் 16, 17 தேதிகளில் வசந்தோற்சவம், சகஸ்ர தீபாலங்கார சேவை ஆகியவற்றையும், 18, 19, 20 ஆகிய தேதிகளில் ஆர்ஜித பிரம்மோற்சவம், வசந்தோற்சவம், சகஸ்ர தீபாலங்கார சேவை உள்ளிட்டவற்றையும் தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai