சுடச்சுட

  

  காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் அறுபத்து மூவர் உற்சவம் கோலாகலம் 

  By DIN  |   Published on : 16th March 2019 02:39 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ekambaranathar

   

  காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் பங்குனி உத்திர விழாவை முன்னிட்டு இன்று காலை அறுபத்து மூவர் வீதிஉலா விமரிசையாக நடைபெற்றது. 

  மண் ஸ்தலமான ஏலவார் குழலி உடனுறை ஏகாம்பரநாதர் கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர விழா 10 நாள்களுக்கு வெகு விமரிசையாக நடத்தப்படுவது வழக்கம். 

  அதன்படி, பழைய உற்சவர் சிலை வைத்து கடந்த 11-ம் தேதி பங்குனி உத்திர விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து காலை மற்றும் மாலை வேளைகளில் உற்சவர் ஏகாம்பரநாதர் பல்வேறு வானத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார். 

  விழாவின் ஆறாம் நாளான இன்று 63 நாயன்மார்களின் வீதிஉலா சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.

  பங்குனி உத்திர விழாவின் பத்தாம் நாள் இரவு பங்குனி உத்திரமும் திருக்கல்யாணமும் வெகு விமரிசையாக நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai