சுடச்சுட

  

  கும்பகோணம் கோயில்களில் பங்குனி உத்திர பெருவிழாவில் சுவாமிகள் வீதியுலா

  Published on : 16th March 2019 03:28 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  IMG-20190315-WA0011

   

  கும்பகோணம் பகுதி திருக்கோயில்களான ஸ்ரீ பிரகன் நாயகி உடனாகிய ஸ்ரீநாகேஸ்வர சுவாமி, ஸ்ரீ ஆனந்தநிதியாம்பிகை உடனாகிய ஸ்ரீகம்பட்ட விஸ்வநாதசுவாமி மற்றும் கொட்டையூர் ஸ்ரீபந்தாடு நாயகி உடனாகிய ஸ்ரீகோடீஸ்வர சுவாமி ஆகிய திருக்கோயில்களின் பங்குனி உத்திரப் பிரம்மோத்ஸவத்தின் மூன்றாம் நாள் விழா கடந்த 14-3-2019  சிறப்பு அலங்காரத்துடன் பூதவாகனத்தில் சுவாமியும் (பிரஹன்நாயகி) கிளி வாகனத்திலும், ஆனந்தநிதியம்பிகை யாளி வாகனத்திலும், பந்தாடு நாயகி சிம்ம வாகனத்திலும் எழுந்தருளினர். 

  நாகேஸ்வரர் ஆலயம் சிவனடியார்கள் விதவிதமான வடிவங்களில் தீபங்கள் ஏந்தியும், சிவ வாத்திய இசை முழங்கியும், மங்கல வாத்திய குழுவினர் இன்னிசையுடன் சிறப்பாக இவ்வீதியுலா நடைபெற்றது. அதுசமயம் பக்தர்கள் பெரும் திரளாகக் கலந்து கொண்டு சுவாமிகளைத் தரிசனம் செய்தனர்.

  - குடந்தை ப.சரவணன் (9443171383)

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai