கருவிழியுடன் கண் திறந்து பார்த்த ஸ்ரீனிவாசப் பெருமாள்

கும்பகோணம் அடுத்துள்ள நாச்சியார் கோயிலில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ வஞ்சுளவல்லி தாயார்..
கருவிழியுடன் கண் திறந்து பார்த்த ஸ்ரீனிவாசப் பெருமாள்

கும்பகோணம் அடுத்துள்ள நாச்சியார் கோயிலில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ வஞ்சுளவல்லி தாயார் சமேத ஸ்ரீனிவாசப்பெருமாள் ஆலயத்தில் (அருள்மிகு கல்கருட பகவான் தலம்) நடைபெற்று வரும் பங்குனி திருத்தேர் திருவிழாவின் மூன்றாம் நாள் விழாவினை முன்னிட்டு கடந்த 14-ம் தேதி இரவு ஸ்ரீ லட்சுமி நாராயணன் சிறப்பு  அலங்காரத்தில் தாயார், பெருமாள் சேஷ வாகன புறப்பாடு நடைபெற்றது.

அப்போது எடுத்தப் புகைப்படங்களில் இடப்பக்கம் அமர்ந்த கோலத்தில் எழுந்தருளியிருக்கும் தாயாரைப் பெருமாளின் இடது கண் இமை திறந்து கருவிழியுடன் பார்த்த  வண்ணம் உள்ளது. இந்த தரிசனம் மிக அபூர்வ திருக்காட்சியாகும்.

மார்ச் 15-ம் தேதி இரவு 9.00 மணிக்கு கல் கருட பகவான் வீதியுலா நடைபெற்றது.  இதில் சிறப்பம்சம் என்னவென்றால் எப்பொழுதும் பெருமாளின் வலது பாகத்தில் எழுந்தருளும் தாயார் இந்த அலங்காரத்தில் மட்டுமே இடது பாகத்தில் எழுந்தருளியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

- குடந்தை ப.சரவணன் (9443171383)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com