இந்த வாரம் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு திடீர் செலவுகள் ஏற்படும்? 

12 ராசிக்காரர்களுக்குமான இந்த வார (மார்ச் 22 - மார்ச் 27) பலன்களை தினமணி ஜோதிடர் கே.சி.எஸ்.ஐயர்
இந்த வாரம் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு திடீர் செலவுகள் ஏற்படும்? 

12 ராசிக்காரர்களுக்குமான இந்த வார (மார்ச் 22 - மார்ச் 27) பலன்களை தினமணி ஜோதிடர் கே.சி.எஸ்.ஐயர் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்து பலனடைவோம். 

மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

பணியில் தொந்தரவுகள் இருந்தாலும் செவ்வனே செய்து முடிப்பீர்கள். உடல் சோர்வு நீங்க தியானம், யோகா போன்ற பயிற்சிகளை மேற்கொள்வீர்கள். பொருளாதார நிலையில் முன்னேற்றம் காண்பீர்கள். எதிரிகளின் பலம் குறையும்.

உத்தியோகஸ்தர்கள் எதிர்வரும் இடையூறுகளை சாதுர்யத்துடன் சமாளிப்பீர்கள். மேலதிகாரிகள் அனுசரணையாக நடந்து கொள்வர். வியாபாரிகளுக்கு போட்டிகளால் பாதிப்பு ஏற்படாது. வியாபாரத்தில் புதிய யுக்திகளைப் புகுத்துவீர்கள். விவசாயிகளுக்கு வங்கிகளிடமிருந்து கடன் கிடைக்கும். நீர்வளத்தால் மகசூலைப் பெருக்கிக்கொள்வீர்கள்.

அரசியல்வாதிகளுக்கு செல்வாக்கு அதிகரிக்கும். கட்சி மேலிடத்தால் பாராட்டு கிடைக்கும். அரசு அதிகாரிகளும் விட்டுக்கொடுத்து நடந்துகொள்வார்கள். கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களால் மகிழ்ச்சி அடைவார்கள். வாய்ப்பாட்டு கலைஞர்களுக்கு இது சிறப்பான காலம். 

பெண்மணிகள் குடும்பத்தில் அமைதியையும் ஒற்றுமையையும் காண்பார்கள். உறவினர்களின் ஆதரவுடன் சுபநிகழ்ச்சிகள் நடத்துவீர்கள். மாணவமணிகள் கல்வியில் நல்ல முன்னேற்றம் காண்பார்கள். 

பரிகாரம்: வியாழக்கிழமைகளில் குருபகவான், தட்சிணாமூர்த்தியை வழிபடவும். 

அனுகூலமான தினங்கள்: 22, 23.

சந்திராஷ்டமம்: 25, 26.

{pagination-pagination}
ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய)

மன அமைதி கிட்டும். பணவரவு சீராக இருக்கும். வேலைகளை குறிப்பிட்ட நேரத்திற்குள் முடிப்பீர்கள். உறவினர்களின் மனக்கசப்புக்கு ஆளாவீர்கள். உங்களைப் புரிந்துக்கொள்ளாதவர்கள் செய்யும் அவமரியாதைகளை புறந்தள்ளவும்.

உத்தியோகஸ்தர்கள் அலைபாயும் மனதைக் கட்டுப்படுத்தவும். வேலைகளில் மனதைச் செலுத்தவும். வியாபாரிகளுக்கு கூட்டாளிகளின் ஆதரவு கிடைக்கும். புதிய முதலீடுகளில் ஈடுபட்டு லாபம் அடைவீர்கள். விவசாயிகள் புதிய குத்தகைகளைப் பெற்று பயனடைவார்கள். மேலும் மகசூல் பெருகி நல்ல லாபத்தையும் காண்பார்கள்.

அரசியல்வாதிகளின் பதவிகளுக்கு நெருங்கிய நண்பர்கள் மூலமாகவே சில இடையூறுகள் ஏற்படலாம். மாற்றுக்கட்சியை சேர்ந்தவர்களிடம் மனம் விட்டுப் பேசவேண்டாம். 

கலைத்துறையினர் அனைத்து வேலைகளையும் நேர்த்தியாகச் செய்வார்கள். பெண்மணிகள் கணவரிடம் ஒற்றுமையோடு பழகுவார்கள். இருப்பினும் காரணமில்லாமல் மனதில் சற்று அமைதி குறையும். மாணவமணிகள் அதிக மதிப்பெண்கள் பெறுவார்கள். அவர்களின் கோரிக்கைகள் நிறைவேறும்.

பரிகாரம்: பெருமாளையும் தாயாரையும் வழிபடவும். 

அனுகூலமான தினங்கள்: 22, 24. 

சந்திராஷ்டமம்: 27, 28.

{pagination-pagination}
மிதுனம் (மிருகசீரிஷம்3ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)

தர்ம சிந்தனைகள் மேலோங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலைகள் நிலவும். திட்டமிட்ட வேலைகளை வெற்றிகரமாக முடிப்பீர்கள். பேச்சிலும் பயணத்திலும் கவனமாக இருக்கவும். சிறு முயற்சிகளும் இரட்டிப்பு வெற்றியை கொடுக்கும்.

உத்தியோகஸ்தர்கள் கடமை தவறாமல் உழைக்க முயற்சிக்கவும். வேலைகளைத் தள்ளிப்போடாமல் உடனுக்குடன் செய்யவும். வியாபாரிகள் எச்சரிக்கையுடன் நடந்துகொள்ள வேண்டிய காலமிது. அறிமுகமில்லாதவர்களிடம் கடன் கொடுத்து வியாபாரத்தைப் பெருக்க வேண்டாம். விவசாயிகளுக்கு சிறிது லாபம் குறையும். கூடுதல் வருமானத்தைப் பெற தோட்டப்பயிர்களைப் பயிரிடலாம்.

அரசியல்வாதிகளுக்கு இடையிடையே சிறு பிரச்னைகள் தோன்றும். கட்சித் தலைமையிடம் மோதல் வாக்குவாதத்தைத் தவிர்க்கவும். கலைத்துறையினர் கடின முயற்சிகளுக்குப்பிறகே புதிய ஒப்பந்தங்களைப் பெறுவீர்கள்.

பெண்மணிகளுக்கு கணவரிடம் நிலவி வந்த கருத்து வேறுபாடுகள் குறையும். பிள்ளைகள் வழியில் திடீர் செலவுகளைச் சந்திக்க நேரிடும். மாணவமணிகள் படிப்பில் கவனம் செலுத்தவும்.

பரிகாரம்: திங்கள்கிழமையில் விநாயகருக்கு அருகம்புல் சாற்றி வழிபடவும். 

அனுகூலமான தினங்கள்: 23, 24. 

சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}
கடகம் (புனர்பூசம்4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

எடுத்த காரியங்களில் வெற்றியடைவீர்கள். தொழிலில் நிலவிய தடைகள் நீங்கும். நன்மைகள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் சீராகும். பெற்றோர் வழியில் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கும். நம்பிக்கையுடன் ஆன்மிகத்தில் ஈடுபடுவீர்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலக வேலைகள் சுமுகமாக முடியும். சிலருக்கு விரும்பிய இடமாற்றம் கிடைக்க வாய்ப்புள்ளது. 

வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல்கள் நல்லபடியாக முடியும். கூட்டாளிகள் உங்களுடன் இணைந்து புதிய முதலீடுகள் செய்வார்கள். விவசாயிகளுக்கு மகசூல் நன்றாக இருக்கும். கொள்முதலில் லாபம் அதிகரிக்கும். பூச்சிக்கொல்லிகளுக்கும் கால்நடைகளுக்கும் செலவு செய்வீர்கள்.

அரசியல்வாதிகள் எடுத்த காரியங்களை எளிதில் முடித்து வெற்றி பெறுவீர்கள். கட்சியிலும் முக்கியப் பொறுப்புகள் பெறுவீர்கள். கலைத்துறையினர் பல தடங்கல்களுக்குப் பிறகே ஒப்பந்தங்கள் பெறுவர். ரசிகர்களின் பாராட்டு மழையில் நனைவீர்கள். 

பெண்மணிகள் குடும்பத்தில் ஒற்றுமையை காண்பார்கள். மாணவமணிகளுக்கு படிப்பில் முன்னேற்றம் ஏற்படும். நண்பர்களை நம்பி எதையும் செய்யவேண்டாம்.

பரிகாரம்:  செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கையையை வழிபடவும். 

அனுகூலமான தினங்கள்: 22, 25. 

சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}
சிம்மம் (மகம், பூரம்,உத்திரம் முதல் பாதம் முடிய)

செயல்களை திட்டமிட்டு செய்து முடிப்பீர்கள். தெய்வீகப் பணிகளில் ஈடுபடுவீர்கள். எதையும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்துப் பேசவும். தேக ஆரோக்கியம் நன்றாகவே இருக்கும். குடும்பத்தினருடன் சுற்றுலா சென்று வருவீர்கள். 

உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைப்பதில் தடைகள் ஏற்படும். ஆனால் சக ஊழியர்கள் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள். வியாபாரிகள் நன்கு ஆலோசித்து கூடுதல் முதலீடுகளைச் செய்யவும். கூட்டாளிகளை அதிகம் நம்ப வேண்டாம். விவசாயிகளுக்கு இந்த காலத்தில் தொட்டது எல்லாம் துலங்கும். விவசாயப் பணிகள் எல்லாம் சிறப்பாக முடியும். 

அரசியல்வாதிகள் வெற்றிகளைக் குறைவாகவும் தோல்விகளை அதிகமாகவும் சந்திக்க நேரிடலாம். ஆகவே அனைத்தையும் எதார்த்தமாக எடுத்துக் கொள்வது நல்லது. கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்களில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். 

பெண்மணிகளுக்கு கணவரிடம் ஒற்றுமை அதிகரிக்கும். பணவரவுடன் கௌரவமும் கூடும். புதிய ஆடை ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். மாணவமணிகள் படிப்பில் அக்கறை காட்டவும். வெளி விளையாட்டுகளின்போது கவனமாக இருக்கவும்.

பரிகாரம்: செவ்வாய்க்கிழமைகளில் செந்திலாண்டவரை வழிபடவும். 

அனுகூலமான தினங்கள்: 24, 25. 

சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}
கன்னி  (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)

திட்டமிட்ட காரியங்களைச் செய்து முடிப்பதில்  சில சிரமங்கள் ஏற்படும். இருப்பினும் மனஉறுதியுடன் அவற்றைத் தகர்த்தெறிவீர்கள். சிலருக்கு புதிய சொத்துகள் வாங்கும் யோகம் உண்டாகும். எதிர்கால முன்னேற்றத்திற்கு எடுக்கும் முயற்சிகள் பலனளிக்கும்.

உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் கெடுபிடிகள் அதிகரிப்பதால் அதற்கேற்றவாறு உழைக்க நேரிடும். சக ஊழியர்களின் உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். வியாபாரிகள் தங்கள் கூட்டாளிகளைப் பிரிய நேரிடலாம். புதிய கடன்கள் வாங்கி வியாபாரத்தைப் பெருக்க நினைக்க வேண்டாம். விவசாயிகள் செலவு குறைந்த மாற்றுப் பயிர்களை உற்பத்தி செய்து பலன் பெறுவீர்கள். 

அரசியல்வாதிகளின் செலவுகள் விமர்சனங்களுக்கு உள்ளாகும். கட்சி மேலிடத்திடமும் எதிர்க்கட்சியினரிடமும் கவனமாக இருக்கவும். கலைத்துறையினர் சக கலைஞர்களின் உதவியுடன் திறமைகளை வெளிப்படுத்துவர். பெண்மணிகளுக்கு குழந்தைகள் மூலம் மகிழ்ச்சி கிட்டும். குடும்பத்தாரிடமும் நன்மதிப்பு பெறுவீர்கள். 

மாணவமணிகள் உள்ளரங்கு விளையாட்டுகளில் அதிக கவனம் செலுத்துவீர்கள்.

பரிகாரம்: திங்களன்று பார்வதி தேவியை வழிபடவும். 

அனுகூலமான தினங்கள்: 25, 26. 

சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}
துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம் முடிய)

பொருளாதார நிலைமை திருப்திகரமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் குதூகலமும் நிறையும். மனதிற்கினிய  செய்திகள் வந்து சேரும். எதிரிகளாலும் நன்மை அடைவீர்கள். பேசும்போது கடினமான வார்த்தைகளை பேச வேண்டாம்.

உத்தியோகஸ்தர்களின் கோரிக்கைகள் நிறைவேறும். மனதை அரித்து வந்த பிரச்னைகள் விலகும். பணியில் நிலவி வந்த கெடுபிடிகள் குறையும். வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த லாபம் வந்து சேரும். புதிய முதலீடுகள் செய்வதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். விவசாயிகள் முயற்சிகளைத் தீவிரப்படுத்தி வருமானத்தைப் பெருக்கவும். கால்நடைகளை கவனத்துடன் பராமரிக்கவும்.

அரசியல்வாதிகளுக்கு புதிய பதவிகள் கிடைக்கும். சமுதாயப் பணி செய்து மக்களுக்கு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தி அதில் நிம்மதி அடைவீர்கள். கலைத்துறையினர் புதிய முயற்சிகள் செய்து வெற்றிப் பாதையில் நடைபோடுவார்கள். 

பெண்மணிகளுக்கு குடும்பத்தில் மதிப்பு உயரும். கணவரிடம் ஒற்றுமை அதிகரிக்கும். மாணவமணிகள் வீண்வாக்குவாதங்களில் ஈடுபடவேண்டாம். நண்பர்களிடம் சுமுகமாகப் பழகவும்.

பரிகாரம்: புதன்கிழமைகளில் பெருமாளை வழிபடவும். 

அனுகூலமான தினங்கள்: 22, 26. 

சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}

விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)

தடைகள் விலகும். யோகபாக்கியங்கள் அதிகரிக்கும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். கனவுகளை நனவாக்க முயலுங்கள். பழைய கடன்களைச் செலுத்துங்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்கவும்.  மனக்கவலைகளைத் தவிர்க்கவும்.

உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு அதிகரித்தாலும் உழைப்புக்கேற்ற பலன் கிட்டும். விரும்பிய இடமாற்றங்கள் கிடைக்க வாய்ப்பு இல்லை.

வியாபாரிகள் சலிப்பில்லாமல் உழைத்தால் பலன்களைப் பெறலாம். எனினும் புதிய குத்தகை முயற்சிகளில் இறங்க வேண்டாம். விவசாயிகளுக்கு மகசூல் சுமாராக இருக்கும். ஆகையால் மாற்றுப் பயிர்களைப் பயிரிட்டு பலன் பெறலாம். 

அரசியல்வாதிகள் மேலிடத்தின் பாராட்டுகளைப் பெறுவார்கள். புதிய பயணங்களை மேற்கொண்டு நன்மை அடைவார்கள். கலைத்துறையினருக்கு சக கலைஞர்கள் நல்ல வாய்ப்புகளைத் தேடித்தருவார்கள். திடீர் செலவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. 

பெண்மணிகளுக்கு நல்லது கெட்டது கலந்து வரும். உடல் ஆரோக்கியம் சற்று பாதிக்கப்படலாம். மாணவமணிகள் கல்வியில் சற்று கூடுதல் கவனம் செலுத்தவும். பெற்றோர்களைத் தொந்தரவு செய்வதைத் தவிர்க்கவும். 

பரிகாரம்: செவ்வாய்க்கிழமைகளில் முருகப்பெருமானை வழிபடவும். 

அனுகூலமான தினங்கள்: 23, 27.

சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}
தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)

உங்கள் செல்வாக்கு உயரும். தொழிலில் தடைகள் விலகி நன்மைகள் அதிகரிக்கும். குடும்பத்தினரிடம் அன்பும் பாசமும் வளரும். உறவினர்களாலும் நண்பர்களாலும் காரிய அனுகூலம் ஏற்படும். பயணங்களின்போது எச்சரிக்கை தேவை.

உத்தியோகஸ்தர்கள் சிறப்பாகப் பணியாற்றுவார்கள். எதிர்பாராத பதவி உயர்வு, தேடி வரும். உங்கள் கடன் விண்ணப்பங்கள் சாதகமாகும். வியாபாரிகள் எதிர்பார்த்த வருமானத்தைப் பெறுவார்கள். புதிய சந்தைகளில் பொருள்களை விற்பீர்கள். விவசாயிகள் உற்பத்திப் பொருள்களால் நல்ல பலனடைவார்கள். கால்நடைகளின் மூலம் விவசாயத்தைப் பெருக்க, இது சாதகமான காலமிது. 

அரசியல்வாதிகளின் முயற்சிகள் யாவும் வெற்றி பெறும். தொண்டர்களிடம் எதிர்பாத்த ஆதரவைப் பெறுவீர்கள். கட்சித் தலைமையிடம் நல்ல பெயர் வாங்குவீர்கள். கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களைச் செய்வார்கள். வருமானம் சற்று குறைந்திருக்கும். 

பெண்மணிகள் கணவரின் ஆதவைப் பெற்று மகிழ்வீர்கள். உடல் ஆரோக்கியத்திலும் கவனம் தேவை. மாணவமணிகள் கல்வியில் விசேஷப் பயிற்சிகள் செய்து மதிப்பெண்களை அள்ளுவார்கள்.

பரிகாரம்: தினமும் சூரிய நமஸ்காரம் செய்து ஆத்ம ஒளி கூடப் பெறுங்கள். 

அனுகூலமான தினங்கள்: 24, 25. 

சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}
மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)

குடும்பத்தில் மகிழ்ச்சி தாண்டவமாடும். நீண்டகால எண்ணங்கள் ஈடேறும். கடின உழைப்பிற்குப்பிறகே வெற்றி தேடி வரும். சிறு தொல்லைகள் கொடுத்து வந்தவர்கள் அடங்கி விடுவார்கள். உடன்பிறந்தோர் உதவியாக இருப்பார்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகள் அனுசரணையாக இருக்க மாட்டார்கள். சக ஊழியர்களின் உதவியுடன் திட்டமிட்ட வேலைகளை வெற்றிகரமாக முடிப்பீர்கள். அலுவலக ரீதியான பயணங்கள் நன்மையாக இராது. 

வியாபாபரிகள் பொறுப்புடனும் பொறுமையுடனும் செயல்பட்டு வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வார்கள். விவசாயிகள் சந்தையில் போட்டிக்குத் தகுந்தவாறு விளைபொருள்களை விற்பனை செய்வர். திருப்தியான லாபமும் பெறுவார்கள். 

அரசியல்வாதிகள் எதிலும் எச்சரிக்கையுடன் இருக்கவும். கட்சி மேலிடத்தின் உத்தரவை முனைப்புடன் செயல்படுத்தவும். கலைத்துறையினர் பழைய ஒப்பந்தங்களை நன்கு நிறைவேற்றி, புதிய ஒப்பந்தங்களைப் பெறுவர். 

பெண்மணிகளுக்கு கணவரிடம் ஒற்றுமை அதிகரிக்கும். உறவினர்களை அனுசரித்து நடந்து அவர்களின் ஆதரவைப் பெறுவார்கள். மாணவமணிகளுக்கு படிப்பில் கவனம் அதிகரிக்கும். பெற்றோரின் ஆதரவு கிடைக்கும்.

பரிகாரம்: சனிக்கிழமைகளில் சனிபகவானை வழிபடவும். 

அனுகூலமான தினங்கள்: 24, 27. 

சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}
கும்பம்(அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)

மனதில் சிறு சலிப்புகள் ஏற்பட்டாலும் விரைவாக அதிலிருந்து விடுபடுவீர்கள். பொருளாதாரத்தில் முன்னேற்றம் தென்படும். ஆன்மீகத்தில் ஈடுபட்டு மன பலம் பெறுவீர்கள். பழைய கடன்களை திருப்பிச் செலுத்துவீர்கள். 

உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். சிலருக்கு விரும்பிய இடமாற்றமும் கிடைக்கும். வியாபாரிகளுக்கு வியாபாரத்தில் வளர்ச்சி உண்டாகும். குறைந்த முதலீட்டில் வியாபாரத்தை விரிவு படுத்தவும். விவசாயிகள் போட்டி பொறாமைகளைச் சந்திக்க நேரிடும். விவசாயப் பணிகளில் திட்டமிட்டு சீரிய முறையில் செயல்பட்டால் நல்ல லாபம் கிட்டும். 

அரசியல்வாதிகள் அனுகூலமான திருப்பங்களை எதிர்பார்க்க முடியாது. உற்சாகமின்மை, மேலிட அவமதிப்பு ஆகியவற்றையும் சந்திக்க நேரிடும். கலைத்துறையினர் சக 
கலைஞர்கள், ரசிகர்களின் ஒத்துழைப்பைப் பெறுவர். பெண்மணிகள் ஆடம்பர பொருள்கள் வாங்குவர். குடும்பத்தில் சந்தோஷம் நிறையும். ஆன்மிகத்தில் கவனம் செலுத்துவீர்கள். 

மாணவமணிகள் நல்ல மதிப்பெண்களைப் பெறுவார்கள். ஆசிரியர்களின் பாராட்டுகளைப் பெறுவீர்கள்.

பரிகாரம்: ஒருமுறை ஸ்ரீரங்கம் சென்று ரங்கநாதரை வழிபட்டு வரவும். 

அனுகூலமான தினங்கள்: 23, 27. 

சந்திராஷ்டமம்: 22.

{pagination-pagination}

மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

பொருளாதார சூழல் நன்றாகவே இருக்கும். எடுத்த காரியங்கள் வெற்றியடையும். மதிப்பு மரியாதை அதிகரிக்கும். உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவச் செலவுகள் செய்ய நேரிடலாம். திட்டமிட்ட வேலைகளை மிகவும் கவனத்துடன்  செய்யவும்.

உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு அதிகரிப்பதால் கூடுதலாக உழைக்க வேண்டியிருக்கும். மேலதிகாரிகள்  உங்களிடம் சற்று கடுமையாகவே நடந்து கொள்வர். 
வியாபாரிகள் முயற்சிக்குத் தகுந்த லாபத்தைப் பெறுவார்கள். புதிய முதலீடுகளில் ஈடுபட வேண்டாம். விவசாயிகளுக்கு பயிர் உற்பத்தி நன்றாகவே இருக்கும். பழைய குத்தகை பாக்கிகள் வசூலாகும். 

அரசியல்வாதிகளுக்கு வெற்றி கிடைக்கும். சமூகத்தில் செல்வாக்கு உயரும். திட்டங்களைச் செயல்படுத்தி தலைமையின் கவனத்தைக் கவர முயல்வீர்கள். கலைத்துறையினர் திறமைக்குத் தகுந்த மதிப்பும் அங்கீகாரமும் பெறுவீர்கள். 

பெண்மணிகளுக்கு இது மகிழ்ச்சிகரமான காலம். குடும்பத்தில் ஒற்றுமை மேலோங்கும். குழந்தைகளால் சந்தோஷம் கிட்டும்.  மாணவமணிகள் படிப்பில் நல்ல மதிப்பெண்கள் பெறுவார்கள். பெற்றோரின் ஆதரவு உண்டு. 

பரிகாரம்:  வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமியை வழிபடவும். 

அனுகூலமான தினங்கள்: 27, 28. 

சந்திராஷ்டமம்: 23, 24.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com