பங்குனி உத்திரம்: திருச்செந்தூரில் வள்ளி திருக்கல்யாணம்

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு  பல்லாயிரக்கணக்கானோர் சுவாமி தரிசனம்
பங்குனி உத்திரத்தை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் வியாழக்கிழமை குவிந்த பக்தர்கள்.
பங்குனி உத்திரத்தை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் வியாழக்கிழமை குவிந்த பக்தர்கள்.


திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு  பல்லாயிரக்கணக்கானோர் சுவாமி தரிசனம் செய்தனர். இரவில் கோயிலில் வள்ளியம்மன் திருக்கல்யாணம் நடைபெற்றது.
முருகப்பெருமானின் முக்கியத் திருவிழாக்களில் ஒன்றான பங்குனி உத்திர திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து 4.30 மணிக்கு விஸ்வரூபம், 5 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகத்தை தொடர்ந்து, வள்ளியம்மன் தவசுக்கு புறப்பாடு நடைபெற்றது. மதியம் சாயரட்சை தீபாராதனைக்கு பின், பிற்பகலில் சுவாமி கோயிலில் இருந்து புறப்பட்டு சன்னதித் தெரு வழியாக சிவன் கோயிலுக்கு வந்தார்.
தொடர்ந்து பந்தல் மண்டபம் முகப்பில்  சுவாமி, அம்மனை மூன்று முறை வலம் வந்து சுவாமி அம்மன் தோள்மாலை மாற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதன்பின்னர் சுவாமி, அம்மன் திருவீதி வலம் வந்து, இரவு 108 மகாதேவர் சன்னதி முன்பு வைத்து திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.
பங்குனி உத்திரத்தை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். திருக்கல்யாண வைபவத்தில் பங்கேற்ற பக்தர்கள், மொய் எழுதி பிரசாதம் பெற்றுச் சென்றனர்.
குன்றுமேலய்யன் சாஸ்தா: திருக்கோயிலின் உபகோயிலான நாலுமூலைக்கிணறு அருள்மிகு குன்றுமேலய்யன் சாஸ்தா கோயிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை ஆகியவை நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை திருக்கோயில் தக்கார் இரா.கண்ணன், இணை ஆணையர் சி.குமரதுரை, கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com