108 சக்தி பீட ஆலயத்தில் மார்ச் 31-ல் மண்டலாபிஷேக பூர்த்தி

108 சக்தி பீட ஆலயத்தில் மார்ச் 31-ல் மண்டலாபிஷேக பூர்த்தி

கர்ம பூமியாம் நம் புனிதமான பாரத திருநாட்டை மையமாகக் கொண்டு 108 சக்தி பீடங்கள் பரவி இருந்தது. மகிரிஷி வேத வியாசர் அவர்களே வியந்து சிறப்பித்துக் குறிப்பிட்டுள்ள 108 சக்தி பீடங்கள் கால தேச வர்த்தமானங்களால் மறைந்துவிட்டன. உலக மக்களின் நன்மைக்காகவும் சக்தி பீட பாரம்பரியத்தை மீண்டும் நிலை நாட்டவும் மங்களபுரியில் ஓரிடத்தில் முதன்முறையாக 108 சக்தி பீட ஆலயங்கள். இதனை நிறுவியவர் அன்னை காமாக்ஷி தேவியின் அருட்குழுந்தையும் தவசீலர் காஞ்சி முனிவர் அவர்களின் ஆத்ம சிஷ்யரும் ஆகிய ஸ்ரீகுரு ஸ்ரீகாமாக்ஷி ஸ்வாமிகள் அவர்கள். 

108  சக்தி பீட ஆலயங்கள் முழுவதும் சிற்ப சாஸ்திர முறைப்படி அமைக்கப்பட்டு கடந்த பிப்ரவரி மாதம் 10-ம் தேதி சுமார் 250 வேத விற்பன்னர்களின் திருக்கரங்களால் காஞ்சி சங்கராச்சாரியார் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் முன்னிலையில் நடைபெற்றது. 10 நாட்கள் நடந்த இவ்விழாவில் தமிழ ஆளுநர் திரு பன்வாரிலால் புரோஹித், பல்வேறு மடாதிபதிகள் ஆன்மிக பெருமக்கள் முக்கிய பிரமுகர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான  பொது மக்களும் கலந்துகொண்டனர். 10 நாட்களும் மூன்று காலங்களும் அன்னதானம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் நம் நாட்டில் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் அமெரிக்கா, சிங்கப்பூர், மலேஷியா, ஆஸ்திரேலியா மற்றும் பல்வேறு நாடுகளிலிருந்தும் பக்தகோடிகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். விழாவில் ஒரு நிகழ்ச்சியாக சுமார் 1500 மகளிர் உலக நன்மைக்காக ஒரே சமயத்தில் ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாம பாராயணம் செய்தனர்.

மண்டலாபிஷேக பூர்த்தி 

தினமும் மாலை வேளைகளில் முன்னணி கலைஞர்களைக் கொண்டு பல்வேறு இசை, நாட்டியம், தாளம் மற்றும் நாம சங்கீர்தன நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. 108 சக்திகள் ஒன்றுசேர்ந்த ஆலயத்தில் சக்தி சங்கமம் கொடி ஏற்றப்பட்டது. பிப்ரவரி 11 முதல் தினசரி காலை மாலை வேளைகளில் 108 சக்தி பீட தேவி ஆலயங்களில் விசேஷ பூஜைகள் நடைபெற்று வருகின்றது. மஹா கும்பாபிஷேகத்திற்கு வர இயலாத பல்வேறு பக்தர்கள் தற்போது ஆலயத்தைத் தரிசித்துக் கண்டு களிக்கின்றனர். 

மண்டலாபிஷேகத்தை ஒட்டி உலக நன்மைக்காக ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாம பாராயணம், மூக பஞ்சசதி பாராயணம், அபிராமி அந்தாதி பாராயணம் போன்ற விசேஷ பாராயணங்கள் ஆலயத்தில் நடைபெற்று வருகிறது இவற்றை சென்னை மற்றும் புறநகர் சேர்ந்த வெவ்வேறு மகளிர் மண்டலியினர் நடத்தி சிறப்பிக்கின்றனர். 

தினசரி லலிதா ஸஹஸ்ரநாம ஹோமங்களைத் தவிரச் சிறப்பான சண்டி ஹோமம் நடைபெற்றது. இதனை ஒட்டி 3 குழுவினர் சென்னை, சுங்குவார் சத்திரம், மதுர மங்களம் பகுதிகளிலிருந்து பாத யாத்திரையாக அன்னையின் சக்தி கொடி ஏற்றி வந்தனர். மண்டலாபிஷேக பூர்த்தி வரும் மார்ச் 31-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை கீழ்க்கண்ட நிகழ்ச்சிகளுடன் நடைபெறவுள்ளது. 

காலை நிகழ்ச்சிகள் 

கோ பூஜை, துர்கா சப்த சதி பாராயணம், யாகசாலை பூஜை, உயர்ந்த ஸ்ரீவித்யா ஹோமம் மஹா அபிஷேகம் மற்றும் அன்னதானம். 

மாலை நிகழ்ச்சிகள்

மூல ஸ்ரீ ஸ்வர்ண காமாக்ஷி தேவிக்கு 108 சங்காபிஷேகம், மும்பை ஸ்ரீ சத்யா பாகவதர் குழுவினரின் நாமசங்கீர்த்தனம் மற்றும் அன்னதானம் இவ்வனைத்து நிகழ்ச்சிகளும் ஸ்ரீ குரு ஸ்ரீ காமாக்ஷி ஸ்வாமிகள் முன்னிலையில் நடைபெறும். 

சக்தி வலம் இவ்வாலய சிறப்பு

ஸ்வயம்பு சக்திகளான 108 சக்தி தேவியரின் ஆலயத்தைச் சுற்றி வணங்குவதில் பாபங்களை அழியும், வாழ்க்கைக்குத் தேவையான அனைத்து தார்மீக கோரிக்கைகளும் நிறைவேறும். 

மேலும் விபரங்களுக்கு நிர்வாகத்தினரை அணுகவும்: 044 27170109, 94449 04243, 98412 85245

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com