நவக்கிரகங்களுக்கு செய்ய வேண்டிய முறையான பரிகாரங்கள்!

ஒருவர் ஜாதகத்தில் நவக்கிரகங்களும் நல்ல நிலையில் இருக்கவேண்டியது மிகவும் அவசியமாகும்.
நவக்கிரகங்களுக்கு செய்ய வேண்டிய முறையான பரிகாரங்கள்!

ஒருவர் ஜாதகத்தில் நவக்கிரகங்களும் நல்ல நிலையில் இருக்கவேண்டியது மிகவும் அவசியமாகும். நவக்கிரகங்கள் வலிமை இழந்திருந்தாலோ அல்லது பாதிக்கப்பட்டு இருந்தாலோ அல்லது நீச்சம் அடைந்து இருந்தாலோ இந்த எளிமையான பரிகாரங்களை செய்து வரலாம். 

சூரியன் 

1. பிரதி ஞாயிறன்று உபவாசம் இருக்கவும்.

2. கோதுமை, சிவப்பு பூ (செம்பருத்தி), சிவப்பு துணி, செப்பு பாத்திரம் இவற்றை ஞாயிறன்று தானமாக அளிக்கவும்.

3. சிவப்பு மற்றும் பிங்க் நிற ஆடைகளை தவிர்க்கவும். 

4. சிவப்பு பூ (செம்பருத்தி) உடன் நீர், கொஞ்சம் அரிசி மணிகளுடன் சிறிது சர்க்கரை இவை அனைத்தையும் ஒரு செப்பு பாத்திரத்தில் வைத்து தினமும் சூரியனுக்கு காலையில் படைக்கவும். 

5. ஞாயிறன்று, மாமிச உணவு, சாராய வஸ்துக்கள், புகையிலை போன்றவற்றைப் பயன்படுத்தாமலும், தாம்பத்திய உறவு கொள்ளாமலும் இருத்தல் நல்லது. 

சந்திரன் 

1. பிரதி திங்களன்று உபவாசம் இருக்கவும். 

2. வெள்ளை நிற உணவு வகைகளான அரிசி சாதம் , நெய் , தயிர், மோர், பால், ஜவ்வரிசி கிச்சடி போன்றவற்றை அதிகமாக உண்ணவும். 

3. அதிகமாக வெள்ளை நிற ஆடைகளை உடுத்தவும், எப்பொழுதும் உங்கள் உடலில் ஏதாவது ஒரு வெள்ளை ஆடை (உள் / வெளி ) இருப்பது நல்லது. 

4. சுண்டு விரலில் நல்முத்து மோதிரம் அணிய பரிந்துரைக்கப்படுகிறது.
 
5. திங்களன்று, மாமிச உணவு, சாராய வஸ்துக்கள், புகையிலை போன்றவற்றை பயன்படுத்தாமலும், தாம்பத்திய உறவு கொள்ளாமலும் இருத்தல் நல்லது.        

செவ்வாய் 

1. பிரதி செவ்வாயன்று உபவாசம் இருக்கவும்; பகலில் ஒரு உணவு மட்டும் நல்லது.

2. ஹனுமன் பாதத்தில் கடுகு எண்ணைப் பூசவும் அல்லது கடுகு எண்ணெய்யில் விளக்கேற்றி அதனை அரச மரத்தடியிலோ அல்லது விநாயகர் / ஹனுமன் கோயிலிலோ, செவ்வாய்க்கிழமைகளில் வைக்கவும். 

3. சிவப்பு வண்ண ஆடைகள், சிவப்பு வண்ண காலணிகள், பணப்பைகள், பெல்ட்கள், தொப்பி இவைகளை தவிர்க்கவும். 

4. செவ்வாயன்று மாமிச உணவு, சாராய வஸ்துக்கள், புகையிலை போன்றவற்றைப் பயன்படுத்தாமலும், தாம்பத்திய உறவு கொள்ளாமலும் இருத்தல் நல்லது.    

புதன்

1. பிரதி புதனன்று உபவாசம் இருக்கவும். 

2. பச்சை நிற ஆடையை புதன் அன்று தவிர்க்கவும். 

3. 5 - புதன் கிழமைகளுக்கு 5 - திருமணம் ஆகாத பெண்களுக்கு பச்சை வண்ண மலர்கள், பச்சை வண்ண பழங்கள், பச்சை நிற ஆடைகள், பச்சை நிற பேனாக்கள் அல்லது பென்சில்கள் தானமாக அளிக்கவும். 

4. 27 புதன் கிழமைகளுக்கு பசு மாட்டிற்கு பசுமை நிறத் தீவனம் அளித்து வரவும். 

குரு

1. பிரதி வியாழனன்று உபவாசம் இருக்கவும்; 

2. ஒவ்வொரு வியாழனன்றும் 3 மஞ்சள் பழத்தையும் ஊறவைத்த கடலையும் பசு மாட்டிற்கு அளித்துவரவும். 

3. வியாழனன்று பருப்பு, தானியவகைளை தவிர்த்து காய்கறி, பழம், தயிர் (YOGURT) மற்றும் பழ ரசங்களைப் பருகுவது நல்லது. 

4. மஞ்சள் நிற ஆடைகள் ஏதாவது ஒன்றை வியாழக்கிழமைகளில் பிராமணர்களுக்கு அளித்து வரவும். 

5.  வியாழனன்று மாமிச உணவு, சாராய வஸ்துக்கள், புகையிலை போன்றவற்றைப் பயன்படுத்தாமலும், தாம்பத்திய உறவு கொள்ளாமலும் இருத்தல் நல்லது.    

சுக்கிரன்

1. பிரதி வெள்ளியன்று உபவாசம் இருக்கவும்; 

2. வெள்ளியன்று மாமிச உணவு, சாராய வஸ்துக்கள், புகையிலை போன்றவற்றைப் பயன்படுத்தாமலும் , தாம்பத்திய உறவு கொள்ளாமலும் இருத்தல் நல்லது.    

3. பிரதி வெள்ளியன்று , துர்கா மந்திரங்களை சொல்லி துர்கா பூஜை செய்யவும். முடிந்தால், 5 திருமணமாகாத பெண்களுக்கு உணவளித்து, பழச்சாறு தரவும். 

4. அனைத்துவித நீல நிற ஆடைகள், மற்றும் வஸ்துக்கள் வெள்ளியன்று தவிர்க்கவும். 

5. பச்சை உருளைக்கிழங்கை மஞ்சள்தூள் கலந்து பசுவிற்கு அளிக்கவும். 

6. வெள்ளியாலான மிகச்சிறு பந்தினை எப்போதும் நீங்கள் பயன்படுத்தும் பை, பணப்பெட்டி, வீட்டில், அலுவலகத்தில் வைத்திருக்கவும்.

7. ஐந்து வெள்ளி அன்று திருக்கோவிலுள்ள யாரேனும் பெண்களுக்கு பால், அரிசி உணவு, சர்க்கரை கலந்த மிட்டாய் / BARFFI , வெள்ளை நிற ஆடைகளை அளித்து வரவும். 

8. ஓடும் நீரில், நீரோடை போன்றவற்றுள் நீல் நிற பூக்களை பிரதி வெள்ளியன்று விடவும். 

9.  ஏதேனும் ஒரு வெள்ளை கல் அல்லது பளிங்கு கல்லில் சந்தனம் பொட்டு வைத்து ஓடும் நீரில் விட்டு வரவும். 

சனி

1. பிரதி சனியன்று உபவாசம் இருக்கவும்.  

2. பிரதி சனியன்று யன்று மாமிச உணவு, சாராய வஸ்துக்கள், புகையிலை போன்றவற்றை பயன் படுத்தாமலும் , தாம்பத்திய உறவு கொள்ளாமலும் இருத்தல் நல்லது.    

3. பிரதி சனியன்று அனைத்து வித கருப்பு  நிற ஆடைகள், மற்றும் கருப்பு  நிற வஸ்துக்கள் தவிர்க்கவும்.

4. பிரதி சனியன்று,  கடுகு எண்ணையை சனி பகவானுக்கு அளித்தோ அல்லது அதில் விளக்கேற்றியோ அல்லது அரச மரத்தடியில் அவ்விளக்கை வைத்தோ வரவும். 

5. குளிக்கும் நீரில் 7 சொட்டு கடுகு எண்ணெய்யை ஊற்றிக் குளித்து வரவும். 

ராகு 

1. பிரதி சனியன்று உபவாசம் இருக்கவும். 

2. பிரதி சனியன்று,  கடுகு எண்ணெய்யைச் சனி பகவானுக்கு அளித்தோ அல்லது அதில் விளக்கேற்றியோ அல்லது அரச மரத்தடியில் அவ்விளக்கை வைத்தோ வரவும். 

3. பிரதி சனியன்று அனைத்து வித கருப்பு /நீல நிற ஆடைகள், மற்றும் கருப்பு / நீல  நிற வஸ்துக்கள் அணிவதையும், பிறரிடம் இருந்து பெறுவதையும், தவிர்க்கவும்.

4. மாதத்திற்கு ஒரு சனியன்று, அன்று செய்த முதல் சப்பாத்தியினை காகத்துக்கோ அல்லது கருப்பு நிற பசுவிற்கோ அளித்தல் நல்லது. 

5. மாதத்தில் ஏதாவது ஒரு நாளோ அல்லது சனியன்றோ ஏழை ஒருவருக்கு வயிறு நிறையும் (FULL MEAL)வரை அன்னமிடல் சால சிறந்தது. 

கேது

1. பிரதி செவ்வாயன்று உபவாசம் இருக்கவும்; பகலில் ஒரு உணவு மட்டும் நல்லது. 

2. ஹனுமன் பாதத்தில் கடுகு எண்ணைப் பூசவும் அல்லது கடுகு எண்ணெய்யில் விளக்கேற்றி அதனை அரச மரத்தடியிலோ அல்லது விநாயகர் / ஹனுமன் கோயிலிலோ, செவ்வாய்க் கிழமைகளில் வைக்கவும். 

3. பிரதி செவ்வாயன்று மாமிச உணவு, சாராய வஸ்துக்கள், புகையிலை போன்றவற்றை பயன் படுத்தாமல் இருத்தல் நல்லது.

4. ஏழை நோயாளி (மருந்து வாங்க இயலாதவற்கு ) எவருக்காவது, செவ்வாய் அன்று அவருக்கு தேவையான மருந்து வாங்கி அளித்தல் நல்லது. 

5.  முடியுமானால், எப்போதாவது வெள்ளை / கருப்பு நிற கம்பளி போர்வையை கோவில் / மசூதி / தேவாலயம் / குருத்துவார்  போன்றவற்றை உள்ள பூசாரிக்கு அளிக்கவும். 

6.  பல வண்ணம் கொண்ட பசு / நாய்க்கு சப்பாத்தி அளித்துவரவும். 

7.  வெள்ளை / கருப்பு எள்ளை சிறிது எடுத்து கருப்பு துணியில் சுற்றி ஓடும் நீரில் மூழ்கடிக்கவும். 

இவைகளே, வேத பரிகார முறைகளாக ஜோதிடர்கள் குறிப்பிடுகின்றனர். இதற்கு சில / பல மாற்றங்களுடன் கூறுவோரும் உண்டு. 

மேலே கூறியவைகளில், ஏதேனும் ஒன்றை மட்டும் அந்தந்த கிரக பரிகாரமாக, அந்தந்த கிழமைகளில் தொடர்ச்சியாகச் செய்தல் நல்லது.

நவக்கிரங்களை  எந்த நேரத்தில் சுற்றினால் அதீத பலன்கள் கிடைக்கும்?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com