எப்படி கிரகங்களை வணங்குவது?

கிரகங்களை எப்படி முறையாக வணங்க வேண்டும் என்பதைப் பற்றிப் பார்க்கலாம். 
எப்படி கிரகங்களை வணங்குவது?

கிரகங்களை எப்படி முறையாக வணங்க வேண்டும் என்பதைப் பற்றிப் பார்க்கலாம். 

• பூஜை அறையில் அல்லது இருக்கும் இடத்திலிருந்து உரிய கிரகத்தின் மந்திரத்தை ஜபிக்கலாம்.

• பழமையான கிரக கோவிலுக்கு அல்லது உங்கள் ஊருக்கு அருகே அமைந்த கிரக கோவிலுக்குச் சென்று பரிகாரம் செய்தோ, விளக்கு ஏற்றியோ, அர்ச்சனை செய்தோ, சூலம் ஏற்றியோ வழிபடலாம். 

• உரியக் கிரக கோவிலுக்குத் தேவையான பொருட்களை அதாவது எள், எண்ணெய், பசு நெய், குங்குமம், தாலி, கடவுளுக்குத் தேவையான உலோகத்தால் ஆன பொருட்கள் ஆகியவை கொடுக்கலாம்.

• கோவில் திருப்பணிக்கு ஒரு ரூபாய் முதல் பலகோடி வரை காணிக்கையாக கொடுக்கலாம்.
 
• கிரக தாக்கத்துக்கு ஏற்றவாறு உணவு தானம், வஸ்திர தானம் கொடுக்கலாம்.

• அந்தந்த கிரகங்களுக்கு உரியக் கற்கள் அணிந்து, கிரக சக்தியின் வலிமையை அதிகப்படுத்தலாம்.

• கிரகங்களுக்கு உரிய உலோகங்களைப் பயன்படுத்துவதன் மூலம் உடலில் அதன் கிரக சக்தியை அதிகப்படுத்தலாம்.

• ஒருவரின் ஜாதகத்தில் கிரக பலம் பெற அதற்குரிய கிரகங்கள் மற்றும் கிழமைகளில் நெய் தீபம் ஏற்றி, கிரகத்துக்குரிய நிவேதனம், கிரகத்துக்குரிய மலர்களால் அர்ச்சனை, ஸ்தோத்திர பாராயணம் செய்யலாம். அப்பொழுது கிரகங்கள் பலம்பெறும்.

• ஜோதிடரை கேட்டு சரியான ருத்ராட்சம் அணியலாம். இவ்வாறு தொடர்ந்து செய்துவந்தால் கிரக தோஷம் நிவர்த்தியாகும். 

- ஜோதிட சிரோன்மணி பார்வதிதேவி 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com