இதைச் செய்தால் வாழ்நாள் முழுவதும் உணவுக்குப் பஞ்சம் இருக்காது!

நாம் உண்ணும் உணவை எப்போதும் நிந்திக்கக் கூடாது. குறை சொல்லி இகழக் கூடாது என்பதை அனைவரும் முதலில் உணர வேண்டும்.  
இதைச் செய்தால் வாழ்நாள் முழுவதும் உணவுக்குப் பஞ்சம் இருக்காது!

நாம் உண்ணும் உணவை எப்போதும் நிந்திக்கக் கூடாது. குறை சொல்லி இகழக் கூடாது என்பதை அனைவரும் முதலில் உணர வேண்டும். 

கிடைத்த உணவை வீணடிப்பதோ, தூக்கி வீசுவதோ, கேவலமாக இருக்கிறது என்று நிந்தனை செய்வதோ கூடாது. அன்றைய தினம், அந்த வேளைக்குக் கிடைத்த உணவுக்கு இறைவா..! இன்று நீ எனக்குக் கொடுத்த பிச்சை இதுவென்று நினைத்து கண்களில் ஒற்றிக்கொள்ள வேண்டும். ஒருவேளை உணவுக்கும் வழியில்லாமல் அல்லல்படுபவர்கள் இவ்வுலகில் நிறையபேர்! அதை நிறைவில் கொள்ள வேண்டும். 

அண்ணத்தை நிந்தித்தால், சரியான நேரத்துக்கு உணவு கிடைக்காமல் அவதிப்பட வேண்டிய நிலை ஏற்படும். அண்ணத்தைச் சபிப்பவர்களும், குறை கூறுபவர்களும் அடுத்த பிறவியில் தரித்திரனாய் பிறக்க நேரும். 

உணவு பரிமாறுபவர் உணவைத் தொட்டு வணங்கி இந்த உணவை வழங்கிய கடவுளுக்கு நன்றி தெரிவித்து, இந்த உணவினால் எந்தவித தீய உணர்ச்சிகள் ஏற்படாதவாறு அருள்புரிய வேண்டும்.

உணவு மயமான குண்டலினி சக்தியே |

அன்னபூரணி மாதா உங்களுக்கு நமஸ்காரம் |

இந்த உணவு தினசரி கிடைக்க அருள் புரிய வேண்டும் என்று சொல்லித் தொட்டு வணங்கிய பின்தான் பரிமாற வேண்டும்.

உணவு உண்பவரும் இவ்வாறு நன்றி தெரிவித்தபின் தான் உணவு உண்ண வேண்டும். இதனால் குண்டலினி எழும் ஆற்றல் உண்டாகும். வாழ்நாள் முழுவதும் உணவுக்குப் பஞ்சம் இருக்காது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com