Enable Javscript for better performance
பழனிக்கு செல்பவர்களுக்கு இன்று ரோப்கார் சேவை கிடையாது!- Dinamani

சுடச்சுட

    

    பழனி மலைக்கோயிலுக்கு செல்பவர்களுக்கு இன்று ரோப்கார் சேவை கிடையாது!

    Published on : 27th March 2019 11:46 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    palani ropetrail

     

    பழனி மலைக்கோயில் ரோப்கார் பராமரிப்பு பணிக்காக இன்று தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. 

    பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய  படிவழி, யானைப்பாதை, வின்ச் பாதைக்கு மாற்றாக ரோப்கார் இயக்கப்பட்டு வருகிறது.  

    இரண்டு நிமிடங்களில் மலைக்கோயில் உச்சிக்கு செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ள ரோப்கார் காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை இயக்கப்படும்.

    இந்த ரோப்கார் தினமும் மதியம் ஒருமணி நேரமும், மாதத்தில் ஒரு நாளும், வருடத்தில் ஒரு மாதமும்  பராமரிப்பு பணிக்காக நிறுத்தப்படுகிறது. இந்நிலையில் ரோப்கார் (மார்ச் 27) மாதாந்திர பராமரிப்பு பணிக்காக நிறுத்தப்படுகிறது என திருக்கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai