Enable Javscript for better performance
மன்னார்குடி கோயிலில் இன்று வெள்ளி ஹம்ச வாகனத்தில் ராஜ அலங்கார சேவை- Dinamani

சுடச்சுட

    

    மன்னார்குடி கோயிலில் இன்று வெள்ளி ஹம்ச வாகனத்தில் ராஜ அலங்கார சேவை

    Published on : 27th March 2019 11:25 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    mannarkudi_temple

     

    மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயிலில் பங்குனிப் பெருவிழாவை முன்னிட்டு இன்று ராஜ அலங்கார சேவை நடைபெறுகிறது. 

    பிரசித்தி பெற்ற மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் 18 நாள்கள் திருவிழாவும், அதைத் தொடர்ந்து 12 நாள்கள் விடையாற்றி விழாவும் நடைபெறும். தொடர்ந்து, கிருஷ்ண தீர்த்த தெப்ப உத்ஸவத்துடன் பங்குனி பெருவிழா நிறைவுபெறும்.

    நிகழாண்டில் இவ்விழாவின் தொடக்கமாக கடந்த திங்கள்கிழமை காலை த்வஜாரோஹணம் என்கிற திருக்கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதையடுத்து, (இன்று) மார்ச் 27-ம் தேதி வெள்ளி ஹம்ச வாகனத்தில் ராஜ அலங்கார சேவையில் ராஜகோபால சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.  

    அதைத்தொடர்ந்து, 31-ம் தேதி வண்ண புஷ்ப பல்லக்கில் ராஜ அலங்கார சேவையும், ஏப்ரல் 2-ம் தேதி சிம்ம வாகனத்தில் ராஜ அலங்காரமும், 5-ம் தேதி தங்க கருட வாகனத்தில் இரட்டை குடை சேவை மற்றும் வைகுண்டநாதன் சேவையும், 7-ம் தேதி யானை வாகனத்தில் ராஜ அலங்காரமும் நடைபெற உள்ளது.

    ஏப்ரல் 9-ம் தேதி நவநீத சேவை வெண்ணைத்தாழி உற்சவமும், 10-ம் தேதி திருத்தேர் உற்சவமும், கடைசி நாளான ஏப்ரல் 23-ம் தேதி கிருஷ்ண தீர்த்தத்தில் தெப்ப உற்சவமும் நடைபெற உள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai