Enable Javscript for better performance
அச்சிறுப்பாக்கம் ஆட்சீஸ்வரர் கோயில் மண்டலாபிஷேகம் நிறைவு- Dinamani

சுடச்சுட

    
    eswar

    ஆட்சீஸ்வரர் கோயிலில் நடைபெற்ற சிறப்புப் பூஜை.


    மதுராந்தகம் அருகே அச்சிறுப்பாக்கம் ஆட்சீஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகத்தை அடுத்து 48-ஆம் நாள் மண்டலாபிஷேகம் புதன்கிழமை நிறைவுபெற்றது.
    வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த அச்சிறுப்பாக்கம் ஆட்சீஸ்வரர் கோயில் புதுப்பிக்கப்பட்டு, கடந்த பிப்ரவரி 10-இல் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து 48 நாள்களாக சிறப்புப் பூஜைகள் நடைபெற்று வந்தன. 
    48-ஆவது நாளில் நடைபெறும் மண்டலாபிஷேக விழாவை முன்னிட்டு, செவ்வாய்க்கிழமை தேவ அநுக்ஞை, விக்னேஸ்வர பூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெற்றன. 
    தொடர்ந்து, புதன்கிழமை காலை 9 மணிக்கு மேளதாளம் முழங்க, தலைமை அர்ச்சகர் சங்கர் சிவாச்சாரியார் தலைமையில் வேதவிற்பன்னர்கள் அச்சுமுறி விநாயகருக்கு கலசாபிஷேகம் செய்தனர். 
    தொடர்ந்து, பஞ்சமூர்த்திகள், ஆட்சீஸ்வரர், உமையாட்சீஸ்வரர், இளங்கிளியம்மன் ஆகிய சந்நிதிகளில் கலசாபிஷகம் நடைபெற்றது. 
    பின்னர், சிறப்பு அலங்காரத்துடன் சுவாமி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். பக்தர்களுக்கு பிரசாதங்களும், அன்னதானமும் வழங்கப்பட்டன. தொடர்ந்து, இன்னிசை நிகழ்ச்சி, பஞ்ச மூர்த்தி திருவீதி உலா நடைபெற்றது. 
    விழா ஏற்பாடுகளை எம்.வெங்கடேச ரெட்டியார் தலைமையில் செயல் அலுவலர் சரவணன், திருப்பணி உபயதாரர்கள் செய்திருந்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai