Enable Javscript for better performance
சிதம்பரம் நடராஜருக்கு தங்கப் பூக்கூடை- Dinamani

சுடச்சுட

    
    gold

    சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு பக்தர் ஒருவரால் வழங்கப்பட்ட தங்கப் பூக்கூடை.


    சிதம்பரம் நடராஜருக்கு அபிஷேகம் செய்ய பயன்படுத்தும் வகையில், ஒன்றே கால் கிலோ தங்கத்தால் செய்யப்பட்ட பூக்கூடை ஒன்றை பக்தர் ஒருவர் காணிக்கையாக புதன்கிழமை வழங்கினார்.
    சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஸ்ரீ சிவகாமசுந்தரி சமேத ஸ்ரீ நடராஜப் பெருமானுக்கு ஆண்டுக்கு 6 மகாபிஷேகம் நடைபெறுவது வழக்கம். இந்த அபிஷேகத்தின் போது, புஷ்ப அபிஷேகம் செய்ய பயன்படுத்துவதற்காக பக்தர் ஒருவர் ஒன்றே கால் கிலோ தங்கத்தால் செய்யப்பட்ட பூக்கூடை ஒன்றை பொது தீட்சிதர்களிடம் வழங்கினார்.
    இந்த தங்கப் பூக்கூடை வருகிற சித்திரை மாத மகாபிஷேகத்துக்குப் பயன்படுத்தப்படும் என பொது தீட்சிதர்கள் தெரிவித்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai