Enable Javscript for better performance
திருமலையில் அதிகரித்து வரும் தண்ணீர்த் தட்டுப்பாடு- Dinamani

சுடச்சுட

    
    tirumalai


    திருமலையில் இந்தாண்டு பருவ மழை பொய்த்ததால் ஏப்ரல் மாதம் முதல் தண்ணீருக்கு தட்டுப்பாடு அதிகரிக்கும் நிலை உள்ளது. எனவே தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என தேவஸ்தானம் அறிவுறுத்தியுள்ளது.
     திருமலைக்கு வரும் பக்தர்களின் தண்ணீர்த் தேவையைச் சமாளிக்க, திருமலையில் தேவஸ்தானம் கோகர்பம், ஆகாச கங்கை, குமாரதாரா பசுப்புதாரா, பாபவிநாசம் உள்ளிட்ட நீர்த் தேக்கங்களைக் கட்டி, மழைநீரைத் தேக்கி வருகிறது. 
    மேலும், திருப்பதியில் உள்ள கல்யாணி நீர்த் தேக்கத்திலிருந்து குழாய்கள் மூலம் தினசரி திருமலைக்குத் தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. இந்நிலையில், கடந்தாண்டு பருவமழை பொய்த்ததால் திருமலையில் உள்ள நீர்த்தேக்கங்கள் வறண்டு வருகின்றன.
     மேலும், கோடை வெப்பமும் அதிகரித்துக் காணப்படுவதால் நீர்த் தேக்கத்தில் உள்ள நீர் விரைவில் ஆவியாகி விடுகிறது. 
    எனவே, திருமலையில் ஏப்ரல் மாதம் தண்ணீர்த் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளது. மேலும், கோடை விடுமுறையின்போது, திருமலைக்கு வரும் பக்தர்களின் வருகை அதிகரிக்கும் என்பதால், தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்தும் நடவடிக்கைகளில் தேவஸ்தானம் இறங்கியுள்ளது.
     திருமலையில் உள்ள தனியார் உணவகங்கள், மடங்கள் உள்ளிட்டவற்றுக்கு, தினசரி 4 மணி நேரம் மட்டுமே தண்ணீர் வழங்கப்பட உள்ளது. திருமலையில் உள்ள தேவஸ்தானத்துக்குச் சொந்தமான வாடகை அறைகளில் உள்ள குழாய்களில் தேவையானவற்றைத் தவிர்த்து, மற்ற இடங்களில் குழாய்களை அடைக்க அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
     திருப்பதியில் உள்ள கல்யாணி நீர்த் தேக்கத்திலிருந்து கூடுதல் நீரை திருமலைக்குக் கொண்டு வர புதிய குழாய்கள் பொருத்தும் பணிகள் விரைவாக நடந்து வருகிறது.
     எனவே திருமலைக்கு வரும் பக்தர்கள் தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என தேவஸ்தானம் அறிவுறுத்தி உள்ளது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai