Enable Javscript for better performance
திருமலை: உண்டியல் காணிக்கை ரூ. 3.25 கோடி- Dinamani

சுடச்சுட

    


    உண்டியல் காணிக்கை ரூ. 3.25 கோடி
     திருமலை ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கை செவ்வாய்க்கிழமை ரூ. 3.25 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்தது.
     ஏழுமலையானைத் தரிசிக்க வரும் பக்தர்கள் காணிக்கைகளை கோயிலுக்குள் உள்ள உண்டியலில் செலுத்தி வருகின்றனர். அவற்றை தேவஸ்தானம் தினந்தோறும் கணக்கிட்டு வங்கிகளில் வரவு வைத்து வருகிறது. அதன்படி, செவ்வாய்க்கிழமை பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கைகளைக் கணக்கிட்டதில், தேவஸ்தானத்துக்கு, ரூ. 3.25 கோடி வருவாய் கிடைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
    ரூ. 23 லட்சம் நன்கொடை
    திருமலை ஏழுமலையான் பெயரில் தேவஸ்தானம் ஏற்படுத்தி உள்ள பல்வேறு அறக்கட்டளைகளுக்கு பக்தர்கள் நன்கொடை அளித்து வருகின்றனர். செவ்வாய்க்கிழமை அன்னதான அறக்கட்டளைக்கு ரூ. 15 லட்சம், பர்ட் மருத்துவ அறக்கட்டளைக்கு ரூ. 5 லட்சம், கல்வி தான அறக்கட்டளைக்கு ரூ. 1 லட்சம், சர்வஸ்ரேயா  அறக்கட்டளைக்கு ரூ. 1 லட்சம், உயிர்காக்கும் மருத்துவ அறக்கட்டளைக்கு ரூ. 1 லட்சம் என மொத்தம் ரூ. 23 லட்சம் நன்கொடையாக வழங்கப்பட்டது.
    65,848 பக்தர்கள் தரிசனம் 
     ஏழுமலையானை செவ்வாய்க்கிழமை முழுவதும் 65,848 பக்தர்கள் தரிசனம் செய்தனர். இவர்களில் 23,809 பேர் முடி காணிக்கை செலுத்தினர். புதன்கிழமை காலை நிலவரப்படி, 10 காத்திருப்பு அறைகளில் ஏழுமலையான் தரிசனத்துக்காக காத்திருந்தனர். அவர்களின் தரிசனத்துக்கு, 6 முதல் 8 மணி நேரம் வரை தேவைப்பட்டது. 
    நடைபாதை, நேர ஒதுக்கீடு, விரைவு தரிசனம் மற்றும் தேவஸ்தானம் வழங்கும் முதன்மை தரிசனங்களில் பக்தர்கள் 2 மணி நேரத்துக்குள் ஏழுமலையானைத் தரிசித்துத் திரும்பினர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai