திருக்குவளை தியாகராஜ சுவாமி கோயிலில் மே 15-ல் தேர்த் திருவிழா

நாகை மாவட்டம், திருக்குவளை தியாகராஜ சுவாமி கோயிலில் வைகாசி பெருந்திருவிழாவையொட்டி,
திருக்குவளை தியாகராஜ சுவாமி கோயிலில் மே 15-ல் தேர்த் திருவிழா

நாகை மாவட்டம், திருக்குவளை தியாகராஜ சுவாமி கோயிலில் வைகாசி பெருந்திருவிழாவையொட்டி, தேர் திருவிழா மே 15-ம் தேதி நடைபெறுகிறது.

திருக்கயிலாய பரம்பரைத் தருமை ஆதீனத்துக்குச் சொந்தமான கதகாரண்யமாகிய திருக்குவளை என்னும் திருக்கோளிலி ஸ்ரீ தியாகராஜ சுவாமி தேவஸ்தான வைகாசி பெருந்திருவிழா ஏப்ரல் 29-ஆம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

ஆண்டுதோறும் வைகாசிப் பெருந்திருவிழாவின்போதும் கோயிலில் கொடியேற்றம் நடைபெறுவது வழக்கம். அதன்படி, நிகழாண்டுக்கான விழாவையொட்டி, நேற்று கொடியேற்றம் நடைபெற்றது. தொடர்ந்து, கொடி மரத்துக்கு அபிஷேகம் ஆராதனை, நைவேத்தியம் செய்யப்பட்டது.

அப்போது,  திரளான பக்தர்கள் பங்கேற்று கொடிமர தரிசனம் செய்தனர். அடுத்து, இரவு திக்பந்தனம், பஞ்ச மூர்த்திகளின் புறப்பாடு, விநாயகர் உத்ஸவம் நடைபெற்றது. இதையடுத்து, மே.9-ஆம் தேதி சதுர் துவஜாரோகணமும், அதைத் தொடர்ந்து நாள்தோறும் ஒவ்வொரு வாகனத்தில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நடைபெறுகிறது. விழாவின், முக்கிய நிகழ்வான தேர் வடம் பிடித்தல் மே 15-ஆம் தேதி நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com