வெளிநாடு செல்லும் யோகம் உள்ளதாம் கன்னி ராசிக்காரர்களுக்கு! 

கன்னி ராசி அன்பர்களுக்கு இந்த விகாரி ஆண்டு பலவித நன்மைகள் நடைபெற  உள்ளது.
வெளிநாடு செல்லும் யோகம் உள்ளதாம் கன்னி ராசிக்காரர்களுக்கு! 

கன்னி ராசி அன்பர்களுக்கு இந்த விகாரி ஆண்டு பலவித நன்மைகள் நடைபெற  உள்ளது.

புரட்டாசி மாதம் வரை உள்ள காலகட்டத்தில் உங்கள் கடின உழைப்பு வீண் போகாது. செய்தொழிலில் படிப்படியான வளர்ச்சியும் வருமானத்தில் உயர்வையும் காண்பீர்கள். சேமிப்புகள் உயரும். இதனால் புதிய முதலீடுகளைச் செய்வீர்கள். செய்தொழிலில் புதிய மாற்றங்களைச் செய்வீர்கள். தற்போதுள்ள குழப்பமான நிலை மாறி நிம்மதியான சூழ்நிலை உண்டாகும். 

அசையும் அசையாச் சொத்துகளை வாங்குவீர்கள். அதன் மூலமும் வருமானம் வரத்தொடங்கும். முக்கிய விஷயங்களில் பெரியோர்களின் ஆலோசனைகளைக் கேட்டு நடப்பீர்கள். குழந்தைகளுக்கு ஒளிமயமான எதிர்காலம் உண்டாகும். எண்ணிய எண்ணங்கள் திண்ணமாய் நிறைவேறும். எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி உண்டாகும். 

பயணங்களால் நன்மைகளைப் பெறுவீர்கள். வெளிநாடு செல்லும் முயற்சிகளில்  வெற்றி உண்டாகும். பழைய கடன்களை அடைத்து விடுவீர்கள். வழக்குகளில் சாதகமான திருப்பங்கள் உண்டாகும். தீராத பிரச்னைகள் அனைத்தும் தீர்ந்து போய்விடும் காலகட்டமிது.

ஐப்பசி மாதம் முதல் ஆண்டு இறுதி வரை உள்ள காலகட்டத்தில் உடன்பிறந்தோரின் குறைகளைப் பெரிதுபடுத்த மாட்டீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிறையும். அனைவரையும் அரவணைத்துச் செல்வீர்கள். வருமானம் சிறப்பாக இருக்கும். வசிக்கும் வீட்டிற்கு பராமரிப்புச் செலவுகளையும் செய்ய நேரிடும். குடும்பத்திலும் சுபச் செலவுகள் செய்ய வேண்டி வரும்.

பெற்றோர்களுக்கும் சிறிது மருத்துவச் செலவுகள் செய்ய நேரிடும். நேர்வழியில் காரியங்களைச் செய்து புதிய இலக்குகளை எட்டுவீர்கள். பழைய காலத்தில் ஒதுக்கி வைத்திருந்த தொழிலை மறுபடியும் புதுப்பித்து தொடங்குவதற்கான மாற்றுத் திட்டங்களில் ஈடுபட்டு அதில் வெற்றியும் காண்பீர்கள். 

மகான்களைச் சந்தித்து அவர்களின் ஆசிகளையும் பெறுவீர்கள்.  தக்க நேரத்தில் எதிர்பாராத இடத்திலிருந்து  உதவியும் அதிர்ஷ்ட வாய்ப்பும் கிடைக்கும். கடந்த சில காலமாகவே தீராத வியாதியினால் பீடிக்கப்பட்டிருந்தவர்கள் அவைகளிலிருந்து முழுவதுமாக விடுபடுவார்கள். உங்களை எதிர்த்தவர்கள் மறைந்து விடுவார்கள். 

ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். ஆலய திருப்பணிகள், தர்மகாரியங்களில் உங்களை ஈடுபடுத்திக்கொள்ளும் காலகட்டமாக இது அமைகிறது என்றால் மிகையாகாது.
உத்தியோகஸ்தர்களுக்கு புத்தாண்டு விகாரி வருடத்தில் அலுவலக வேலை யாவும் சுமுகமாக முடியும். அலுவலகத்தில் அனைவரிடமும் சுமுகமாகப் பழகுவீர்கள். 

வேலைகளைக் கவனம் சிதறாமல் பட்டியலிட்டுச் செய்து முடிப்பீர்கள். உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைப்பதில் எந்த பிரச்னையும் இருக்காது. மேலதிகாரிகளால் பாராட்டப்பட்டு சில சலுகைகளையும் பெறுவீர்கள். வியாபாரிகள் கொடுக்கல் வாங்கல்களில் அனுகூலமான பலன்களைக் காண்பீர்கள். பெரிய கடன்கள் வாங்கி வியாபாரத்தையும் பெருக்க வேண்டாம். கூட்டுத்தொழில் செய்வோர் நண்பர்களிடம் உஷாராக இருக்கவும். விவசாயிகளுக்கு கொள் முதல் அதிகரிக்கும். விளைபொருள்களுக்கு நல்ல விலை கிடைக்கும். புதிய தானியங்களைப் பயிரிட்டு நல்ல மகசூலைக் காண்பீர்கள். வருமானம் நன்றாக இருக்கும். கால்நடைகளால் எதிர்பார்த்த வருமானம் இருக்கும். இந்த காலகட்டத்தில் உங்கள் உடல் உழைப்பையும் அதிகம் நம்புவீர்கள்.

அரசியல்வாதிகளுக்கு பொதுச் சேவையில் அனுகூலமான திருப்பங்கள் உண்டாகும். உங்களுக்கு எதிராக போடப்பட்டிருந்த வழக்குகளில் சாதகமான தீர்ப்பு வரும். புதிய பொறுப்புகளையும் பெறுவீர்கள். எதிர்கட்சியினருக்கு சாதுர்யமாக பதிலளிப்பீர்கள். கட்சியில் உங்கள் செல்வாக்கு கூடும். தொண்டர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வீர்கள். 

கலைத்துறையினரின் திறமைகள் பளிச்சிடும்.புதிய பொறுப்புகளையும் பெறுவீர்கள். சமூகத்தில்   பெயர், புகழ் உயரும். சக கலைஞர்களின் ஆதரவும் தொடர்ந்து கிடைக்கும். பெண்மணிகள் குடும்பத்தில் அமைதி காண்பீர்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாக அமையும். ஆடை ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உற்றார் உறவினர்கள் இணக்கமாக இருப்பார்கள். குழப்பமான சூழ்நிலைகளிலிருந்து தப்பித்துக் கொள்வீர்கள். 

மாணவமணிகள் சுறுசுறுப்பாகப் படித்து நல்ல மதிப்பெண்களைப் பெற முயற்சிக்கவும். உங்கள் சந்தேகங்களை உடனுக்குடன் ஆசிரியரிடம் கேட்டு தீர்த்துக்கொள்வீர்கள். 

பரிகாரம்

கன்னி ராசிக்காரர்கள் "ஓம் நமோ நாராயணா' மந்திரத்தை உச்சரித்து மகாவிஷ்ணுவை வழிபட அதீத பலன்கள் கிடைக்கும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com