Enable Javscript for better performance
இந்த வாரம் எந்த ராசிக்காரர்களுக்கு அமோகமாக இருக்கும்?- Dinamani

சுடச்சுட

  

  இந்த வாரம் எந்த ராசிக்காரர்களுக்கு அமோகமாக இருக்கும்? 

  By DIN  |   Published on : 10th May 2019 11:03 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  astrology-

   

  12 ராசிக்காரர்களுக்குமான இந்த வார (மே 10 - மே 16) பலன்களை தினமணி ஜோதிடர் கே.சி.எஸ்.ஐயர் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்து பலனடைவோம். 

  மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

  குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். மகிழ்ச்சி தாண்டவமாடும். குழந்தைகளால் பெருமை அடைவீர்கள். பொருளாதார நிலை சீராக இருக்கும். அவ்வப்போது சிறிய விரயங்களும் உண்டாகும். கடமைக்கு முக்கியத்துவம் கொடுத்து உழைப்பீர்கள்.

  உத்தியோகஸ்தர்களுக்கு உழைப்பிற்குத் தகுந்த ஊதியம் கிடைக்கும். சக ஊழியர்களிடம் எதிர்பார்த்த உதவிகளைப் பெறுவீர்கள். வியாபாரிகளுக்கு கொள்முதலில் சுமாரான லாபமே கிடைக்கும். அதனால் புதிய வாடிக்கையாளர்களைத் தேடிச் செல்லுங்கள். விவசாயிகளுக்கு மகசூல் திருப்திகரமாக இருக்கும். தானியங்களைப் பயிரிட்டு கூடுதல் லாபம் பெறுவீர்கள்.

  அரசியல்வாதிகள் பெரும் சாதனைகளைச் செய்வதற்காக முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். உங்களின் ரகசியத் திட்டங்கள் அனைத்தும் வெற்றிப்பாதையை நோக்கி இட்டுச் செல்லும். கலைத்துறையினருக்கு சமூகத்தில் பெயரும் புகழும் வளரும். திறமைக்கேற்ற ஒப்பந்தங்களைச் செய்வீர்கள். 

  பெண்மணிகளுக்கு கணவருடன் சுமுகமான உறவு நிலவும். வீண் வாக்குவாதங்களில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். மாணவமணிகளுக்கு அறிவியல் கல்வியில் நாட்டம் அதிகரிக்கும். 

  பரிகாரம்: செவ்வாயன்று ராகு காலத்தில் துர்க்கையை வழிபடவும். 

  அனுகூலமான தினங்கள்: 10, 11. 

  சந்திராஷ்டமம்: இல்லை.

  {pagination-pagination}

  ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய)

  குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். பணவரவு நன்றாக இருக்கும். அதேசமயம் புதிய முதலீடுகளில் ஈடுபட வேண்டாம். அதில் எதிர்பார்த்த லாபம், வருமானம் வராது. சமூகத்தில் செல்வாக்கு வளரும். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். 

  உத்தியோகஸ்தர்கள் அலுவலகப் பணிகளில் கவனம் செலுத்தவும். திட்டமிட்ட வேலைகளை முன்கூட்டியே செய்து முடிக்கவும். வியாபாரிகள் வரவேண்டிய பாக்கிகளை வசூலிப்பதில் அக்கறை காட்டவும். கொடுக்கல் வாங்கல்களில் லாபம் காணப்படும். விவசாயிகள் கொள்முதலில் லாபம்  பெறுவர். கால்நடைகளை வாங்கி, உபரி வருமானத்தைப் பெருக்குவர். 

  அரசியல்வாதிகளுக்கு கட்சியில் வாக்குவாதங்கள் அதிகரிக்கும். போட்டிகளைச் சந்திக்க நேரிடும். போராட்டங்களில் புதிய வேகத்துடன் ஈடுபடுவீர்கள். கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களைச் செய்வார்கள். வருமானமும் இரு மடங்காகும். 

  பெண்மணிகள் குடும்பத்தில் ஒற்றுமையை காண்பர். எதிர்பாராத உதவிகளைப் பெற்று, செயற்கரிய செயல்களைச் செய்வீர்கள். மாணவமணிகள்  கல்வியில் அதிக கவனம் செலுத்தவும். எதிர்பார்த்ததைவிட நிறைய மதிப்பெண்கள் பெற முடியும். 

  பரிகாரம்: காமாட்சி அம்மனை வேண்டி, தினம் "காமாட்சி விருத்தம்' படிக்கவும். 

  அனுகூலமான தினங்கள்: 10, 12. 

  சந்திராஷ்டமம்:  இல்லை.

  {pagination-pagination}
  மிதுனம் (மிருகசீரிஷம்3ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)

  பணிகளைச் செய்து முடிப்பதில் சில சிரமங்கள் ஏற்பட்டாலும் அவற்றைச் சரியாகச் செய்து முடிப்பீர்கள். புனிதப் பயணங்களை மேற்கொள்வீர்கள். நண்பர்கள் மற்றும் உற்றார் உறவினர்களுக்கு உதவி செய்து மகிழ்வீர்கள். தவறானவர்களின் தொடர்புகளைத் தவிர்த்து விடுதல் நலம்.

  உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு கிட்டும். வேலைத்திறன் அதிகரிக்கும். சக ஊழியர்களும் ஆதரவோடு நடந்து கொள்வர். வியாபாரிகளுக்கு அலைச்சலும் டென்ஷனும் குறையும். வருமானம் அதிகரிக்கும். எந்த வகையிலாவது மாற்றங்கள் செய்து, வியாபாரத்தைப் பெருக்குவீர்கள். 

  விவசாயிகள் அதிக மகசூலைப் பெறுவதில் சிரமங்கள் ஏற்படும். ஆனாலும் கால்நடைகள் மூலம் கிடைக்கும் வருமானம் செலவுகளை ஈடுசெய்யும்.

  அரசியல்வாதிகள் யோசித்து எடுக்கும் முடிவுகள் அனைத்தும் பெரும் வெற்றிகளைக் கொடுக்கும். தொண்டர்களையும் அனுசரித்துச் செல்லவும். கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களைச் செய்வார்கள். 

  பெண்மணிகளுக்கு பணவரவு சீராக இருக்கும். பேச்சில் உஷ்ண வார்த்தைகளை உதிர்க்க வேண்டாம். மாணவமணிகள் படிப்பில் மேலும் கவனம் செலுத்தவும். 

  பரிகாரம்: வெள்ளியன்று மகாலட்சுமியை தீபமேற்றி வழிபடவும். அனுகூலமான தினங்கள்:  11, 12. சந்திராஷ்டமம்:  இல்லை.

  {pagination-pagination}
  கடகம் (புனர்பூசம்4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

  தற்போதைய சூழ்நிலைகளில் சிறிய மாற்றங்களைக் காண்பீர்கள். மனதில் புதிய நம்பிக்கைகள் பளிச்சிடும். உயர்ந்த எண்ணங்களால் சிறப்படைவீர்கள். திட்டமிட்ட பணிகளைச் சாதுர்யத்துடன் முடிப்பீர்கள். தொடர்ந்து செய்யும் பணிகளில் எதிர்பார்த்த பலனை அடைவீர்கள்.

  உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகப் பணிகள் அனைத்தும் சாதகமாக முடியும். வரவேண்டிய பணம் வந்து சேரும். அலுவலகத்தில் புதிய பொறுப்புகளை ஏற்றுக் கொள்வீர்கள். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல்கள் சுமுகமாகவே முடியும். வரவேண்டிய  பணமும் வந்து சேரும். விவசாயிகள் புதிய சாதனங்களை வாங்கி விவசாயத்தைப் பெருக்குவார்கள். 

  அரசியல்வாதிகளுக்கு அனுகூலமான திருப்பங்கள் ஏற்படும். எதிரிகளால் தொல்லைகள் வராது என்றாலும் கவனமுடன் இருக்கவும். கலைத்துறையினருக்கு புகழும் அங்கீகாரமும் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்களைச் செய்வீர்கள். 

  பெண்மணிகளுக்கு கணவருடனான ஒற்றுமை சீராகவே இருக்கும். உற்றார் உறவினர்களால் நன்மைகள் உண்டாகும். மாணவமணிகள் கல்வியில் கவனம் செலுத்தவும்.  மதிப்பெண்கள் பெற அதிகமாக உழைக்கவும்.

  பரிகாரம்: செவ்வாயன்று கந்தசஷ்டி கவசம் படித்து முருகரை வழிபடவும். 

  அனுகூலமான தினங்கள்:  10, 11. 

  சந்திராஷ்டமம்:  இல்லை.

  {pagination-pagination}
  சிம்மம் (மகம், பூரம்,உத்திரம் முதல் பாதம் முடிய)

  சோதனைகள் மறைந்து நலன்கள் கூடும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடக்கும். அலைச்சல்கள் குறையும். உங்களிடமிருந்து விலகி இருந்த உறவினர்கள் மீண்டும் வந்து சேர்வார்கள். தெய்வ தரிசனம் மற்றும் மகான்களின் தரிசனங்கள் கிட்டும். 

  உத்தியோகஸ்தர்கள் அனைத்து வேலைகளையும் குறித்த காலத்தில் செய்து, மேலதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவார்கள். வியாபாரிகள் கொடுக்கல் வாங்கல்களில் கவனமாக இருக்கவும். தொழிலைப் பெருக்கும் முயற்சிகள் வெற்றியைத் தரும். விவசாயிகளுக்கு கொள்முதல் வியாபாரம் சற்று மந்தமாக இருக்கும். கால்நடைகளின் பராமரிப்புச் செலவும் அதிகரிக்கும். 

  அரசியல்வாதிகள் சிறப்பாகப் பணியாற்றுவார்கள். எதிரிகளும் அடங்கியே நடப்பார்கள். ஆனாலும் எவரிடமும் வீண் வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். 
  கலைத்துறையினருக்கு பணவரவு அதிகரிக்கும். சிறந்த வாய்ப்புகள் உங்களைத் தேடிவரும். பெண்மணிகளுக்கு கணவரிடம் ஒற்றுமை அதிகரிக்கும். ஆன்மிகத்தில் ஆர்வம் பெருகும். குழப்பங்களிலிருந்து விடுபடுவீர்கள். மாணவமணிகள் நல்ல மதிப்பெண்கள் பெறுவார்கள். பெற்றோரின்ஆதரவு கிடைக்கும்.

  பரிகாரம்: மகாவிஷ்ணுவையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபடவும். 

  அனுகூலமான தினங்கள்: 11, 13. 

  சந்திராஷ்டமம்:  இல்லை.

  {pagination-pagination}
  கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)

  பொருளாதார நிலையில் முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் நிலவும் குழப்பங்கள் அகலும். செயல்கள் அனைத்தும் சுறுசுறுப்பாக முடியும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புகள் நலம் தரும்.

  உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகள் புரிந்து கொண்டு நடப்பார்கள். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு இருக்கும்.   எதிர்பார்த்த ஊதியத்தையும் பெறுவீர்கள். வியாபாரிகள் புதிய யுக்திகளைக் கையாண்டு வியாபாரத்தைப் பெருக்குவார்கள். புதிய முதலீடுகளிலும் ஈடுபடலாம். விவசாயிகள் புதிய யுக்திகளைப் பெறுவார்கள். மகசூல் அதிகரித்து நல்ல லாபத்தைக் காண்பார்கள்.

  அரசியல்வாதிகள் அனைவராலும் பாராட்டப் படுவார்கள். புதிய பதவிகளில் அமர்ந்து மக்களுக்கு சேவை செய்யும் வாய்ப்பைப் பெறுவார்கள். கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்கள் செய்து வெற்றி பெறுவார்கள். பெண்மணிகள் கணவருடன் ஒற்றுமையோடு பழகுவார்கள். பொன், பொருள் சேர்க்கையால் மகிழ்ச்சியடைவார்கள். 

  மாணவமணிகளின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும். உங்களின் நீண்ட காலத் திட்டங்களுக்கு இது உகந்த காலமாகும்.

  பரிகாரம்: திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாளை வழிபடவும். 

  அனுகூலமான தினங்கள்:  12, 13. 

  சந்திராஷ்டமம்:  இல்லை.

  {pagination-pagination}
  துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம் முடிய)

  கவலைகள் வந்து போகும். உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருப்பது நலம். உடன்பிறந்தோர் வகையில் நிலவி வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். பொருளாதாரத்தில் படிப்படியான முன்னேற்றம் தென்படும். 

  உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பாராத நிம்மதி ஏற்படும். மேலதிகாரிகள் உங்கள் நலனில் அக்கறை காட்டுவார்கள். சக ஊழியர்களிடம் எச்சரிக்கை தேவை. வியாபாரிகள் கடுமையாக உழைத்து வருவாய் ஈட்டி முக்கியப் பிரச்னைகளைச் சமாளிப்பார்கள். விவசாயிகளுக்கு நல்ல வருமானம் கிடைக்கும். மாற்றுப்பயிர் செய்வதன் மூலம் கூடுதல் லாபம் பெறலாம்.

  அரசியல்வாதிகளுக்கு கட்சியில் முக்கிய பொறுப்புகள் கிடைக்கும். தொண்டர்களின் ஆதரவுடன் அரிய சாதனைகள் செய்வீர்கள். அனாவசியப் பயணங்களைத் தள்ளிப்போடவும். கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். 

  பெண்மணிகள் கணவரிடம் ஒற்றுமையாக இருப்பார்கள். இல்லத்தில் சுபநிகழ்ச்சிகளை நடத்துவீர்கள். மாணவமணிகள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும்.  படிப்பில் போதிய அக்கறை காட்டினால் நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும்.

  பரிகாரம்: செந்திலாண்டவரையும் துர்க்கையையும் வழிபடவும். 

  அனுகூலமான தினங்கள்:  11 14. 

  சந்திராஷ்டமம்: இல்லை.

  {pagination-pagination}
  விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)

  தொழிலில் லாபம் ஏற்ற இறக்கமாகவே வரும். மேலும் வளர்ச்சி அடைவதற்கான திட்டங்களைத் தீட்டுவீர்கள். சுபச் செய்திகள் தேடிவரும். கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும். குடும்பத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும்.

  உத்தியோகஸ்தர்கள் அலுவலகப் பணிகளில் கவனத்துடன் ஈடுபடவும். இல்லாவிட்டால் மேலதிகாரிகளின் கோபத்துக்கு ஆளாகலாம். பணவரவுக்கு எந்தக் குறையும் இருக்காது. வியாபாரிகள் துணிந்து முதலீடுகளைச் செய்வார்கள். லாபம் அதிகரிக்கும். விவசாயிகளுக்கு  தொட்டதெல்லாம் துலங்கும். சீரிய முயற்சியுடன் ஈடுபடுவது நல்லது. 

  அரசியல்வாதிகளுக்கு வெற்றியும் தோல்வியும் மாறி மாறி வரும். யாரிடமும் மனம் திறந்து பேசுவதைத் தவிர்க்கவும். கலைத்துறையினர் தீவிர முயற்சியால் ரசிகர்களின் ஆதரவைப் பெறுவார்கள். புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பெண்மணிகளுக்கு பணவரவில் ஏற்பட்ட தடைகள் நீங்கும். இல்லத்தில் சுப காரியங்கள் நடைபெறும். 

  மாணவமணிகள் பாடங்களை ஒருமுறைக்கு இருமுறை படித்து பயிற்சி செய்யவும். விளையாட்டில் கவனத்துடன் செயல்படுவது நல்லது.

  பரிகாரம்: ஞாயிற்றுக்கிழமைகளில் சூரியபகவானை வழிபடவும். 

  அனுகூலமான தினங்கள்:  12, 15. 

  சந்திராஷ்டமம்:  இல்லை.

  {pagination-pagination}
  தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)

  மதிப்பு மரியாதை கூடும், ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.  உறவினர்களுக்கு உங்களாலான  உதவிகளைச் செய்து மகிழ்வீர்கள். உடல் ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்தவும். பேசும்போது வார்த்தைகளில் கவனமாக இருப்பது நல்லது.

  உத்தியோகஸ்தர்களுக்கு பிரச்னைகள் குறையும். மேலதிகாரிகளால் மனக்கசப்புகள் நீங்கி கரிசனத்துடன் நடந்து கொள்வர். சக ஊழியர்கள் ஆதரவு கரம் நீட்டுவர். வியாபாரிகள் பொறுமையுடன் செயல்பட்டு வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யவும். விவசாயிகள் அதிகம் உழைக்க வேண்டி வரும். உடல் நலமும் பாதிக்கப் படலாம். கொள்முதல் லாபம் சிறக்கும்.

  அரசியல்வாதிகளுக்கு கட்சியில் கருத்து வேறுபாடுகள் உண்டாகும். ஆகவே கவனமாகச் செயல்படுங்கள். அவசர முடிவுகளைத் தவிர்ப்பது நல்லது. கலைத்துறையினருக்கு எதிர்பார்த்த வாய்ப்புகள் கைநழுவிப்போகும். 

  பெண்மணிகள் குடும்பத்தினரிடமும் உறவினர்களிடமும் விட்டுக்கொடுத்து நடந்துகொள்வார்கள். ஆடை ஆபரணங்களை வாங்கி மகிழ்வார்கள். மாணவமணிகள் படிப்பில் கவனம் செலுத்தவும். உங்கள் கனவுகள் நிறைவேறுவதற்கான அறிகுறிகள் தென்படும். 

  பரிகாரம்: சனிக்கிழமையில் ஆஞ்சநேயருக்கு வெற்றிலைமாலை அணிவித்து வழிபடவும். 

  அனுகூலமான தினங்கள்: 12, 15.

  சந்திராஷ்டமம்:  10, 11.

  {pagination-pagination}
  மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)

  உங்கள் பேச்சுக்கு மதிப்பு அதிகரிக்கும். பணவரவு  கூடும். புதிய திட்டங்களால் பயனடைவீர்கள். உறவினர்கள் ஆதரவுக் கரம் நீட்டுவர். தீயோர் நட்பினால் பணவிரயம் , கௌரவக் குறைச்சல் உண்டாக வாய்ப்புள்ளதால் கவனமாக இருக்கவும்.  

  உத்தியோகஸ்தர்கள் தவறுகளைத் திருத்திக் கொண்டு அலுவலக வேலைகளில் கவனம் செலுத்தவும். மேலதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். வியாபாரிகளுக்கு கடன் வசூலாகிவிடும். கொடுக்கல் வாங்கல்கள் சிறப்பாகவே அமையும். விவசாயிகளுக்கு மகசூல் அதிகரிக்கும். புதிய நிலங்களை வாங்கி வருங்காலத்திற்கு அஸ்திவாரம் போடுவீர்கள். 

  அரசியல்வாதிகள் பொறுப்புகளை உணர்ந்து செயல்படவும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். கட்சி மேலிடத்திலும் ஆதரவு குறைவாகவே இருக்கும். 

  கலைத்துறையினர் பல தடங்கல்களுக்கு மத்தியில் புதிய முயற்சிகளில் ஈடுபடுவார்கள். பெண்மணிகள்குடும்பத்தில் ஒற்றுமையை காண்பார்கள். கணவரின் பாராட்டுகளால் மகிழ்ச்சி அடைவார்கள். 

  மாணவமணிகள் கல்வியில் நல்ல முன்னேற்றம் அடைவார்கள். விளையாட்டுகளில் வெற்றி பெற்று பரிசுகளை அள்ளுவார்கள்.

  பரிகாரம்: செவ்வாயன்று பைரவரையும் துர்க்கையையும் வழிபடவும். 

  அனுகூலமான தினங்கள்: 10, 15. 

  சந்திராஷ்டமம்:  12, 13, 14.

  {pagination-pagination}
  கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)

  சந்தோஷம் பெருகும். மதிப்பு மரியாதை கூடும். எடுத்த காரியங்கள் அனைத்தையும் குறித்த காலத்திற்குள் முடிப்பீர்கள். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடக்கும். சிந்தனைகளில் தெளிவு உண்டாகும். நெடுநாளைய ஆசை ஒன்று பூர்த்தியாகும்.

  உத்தியோகஸ்தர்களுக்கு பிரச்னைகள் குறையும். மேலதிகாரிகள் மனக்கசப்பு நீங்கி, உங்களிடம் நட்பு பாராட்டுவார்கள்.வியாபாரிகள் சில சிக்கல்களில் மாட்டிக் கொள்ள நேரிடும். கூட்டாளிகளிடம் சற்று எச்சரிக்கையுடன் பழகவும். விவசாயிகள் சிறிய முதலீட்டில் புதிய நிலங்களை வாங்கலாம். பால் வியாபாரம்  எதிர்பார்த்த லாபத்தைத் தரும்.

  அரசியல்வாதிகளுக்கு எடுத்த காரியங்கள் வெற்றிகரமாக முடியும். பலருடைய பாராட்டையும் பெறுவார்கள். கலைத்துறையினருக்கு சில சிரமங்களுக்குப்பிறகே புதிய ஒப்பந்தங்களைப் பெறுவீர்கள். பெண்மணிகள் பெரியோர்களின் ஆசியுடன் திட்டமிட்ட வேலைகளைச் செவ்வனே செய்து முடிப்பார்கள். மாணவமணிகள் வருங்காலத்திற்காகச் செய்யும் முயற்சிகள் வெற்றிகரமாக முடியும். புதிய விஞ்ஞானப் பயிற்சிகளில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள்.

  பரிகாரம்: "நமசிவாய' என்று தினமும் 108 முறை ஜபித்து வழிபடவும். 

  அனுகூலமான தினங்கள்: 10, 13. 

  சந்திராஷ்டமம்:  15, 16.

  {pagination-pagination}

  மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

  எண்ணங்கள் அனைத்தும் ஈடேறும். தெய்வ வழிபாட்டில் மனம் ஈடுபடும். பண வசதி சரளமாக இருக்கும். உடல் ஆரோக்கியம் மேன்மையடையும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடக்கும். உறவினர்கள் சுமுகமாகப் பழகுவார்கள்.

  உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பாராத நிம்மதி கிடைக்கும். சுபகாரியங்கள் உங்கள் நலனில் அக்கறை செலுத்துவார்கள். வியாபாரிகள் லாபம், நஷ்டம் இரண்டையும் மாறி மாறிச் சந்திப்பார்கள். அடுத்தவர்களைச் சரியாகப் புரிந்து கொண்டு கூட்டு சேரலாம். விவசாயிகள் உற்பத்திப் பொருள்களில் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். கால்நடைகளால் நன்மையடைவார்கள். 

  அரசியல்வாதிகள் அரசு அதிகாரிகளின் லட்சியப்போக்குக்கு ஆளாவார்கள். இதனால் பொறுமை இழக்கும் சூழ்நிலை உருவாகும். கலைத்துறையினர் தடைகளைக் கடந்து புதிய ஒப்பந்தங்கள் பெறுவீர்கள். பணவரவு சீராக இருக்கும். 

  பெண்மணிகள் பொருத்தவரை குடும்பத்தில் வீண் குழப்பங்களைச் சந்திக்க நேரிடும். மாணவமணிகள் நல்ல மதிப்பெண்களை அள்ளுவார்கள். விளையாட்டுகளில் கலந்துகொண்டு வெற்றி பெறுவீர்கள்.

  பரிகாரம்: புதனன்று பெருமாளையும் வெள்ளியன்று தாயாரையும் வழிபடவும். 

  அனுகூலமான தினங்கள்: 15, 16. 

  சந்திராஷ்டமம்:  இல்லை.


   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai