Enable Javscript for better performance
16 திருக்கரங்களுடன் காட்சியளிக்கும் நரசிம்மருக்கு மே 17-ல் ஜெயந்தி விழா- Dinamani

சுடச்சுட

    

    16 திருக்கரங்களுடன் காட்சியளிக்கும் நரசிம்மருக்கு மே 17-ல் ஜெயந்தி விழா

    Published on : 11th May 2019 10:51 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    narasimmar

     

    கீழப்பாவூர் நரசிம்மர் கோயிலில் நரசிம்ம ஜெயந்தி விழா வரும் 17 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது.

    16 திருக்கரங்களுடன் நரசிம்மர் காட்சியளிக்கும் இக்கோயிலில் வெள்ளிக்கிழமை (மே 17) காலை 6 மணிக்கு பகவத் பிரார்த்தனை, அனுக்ஞை, புண்யாஹவாசனம், மூலமந்த்ர ஜப ஹோமம், வேதபாராயணம், மகா பூர்ணாஹூதி ஆகியவை நடைபெறும்.  

    மாலை 3 மணி அளவில் 16 வகையான மூலிகைகளால் மூல மந்திர ஹோமம், விஷ்ணு சூக்த ஹோமம், மன்யு சூக்த ஹோமம், புருஷோத்த ஹோமம்,  அதைத் தொடர்ந்து 12 வகையான பொருள்களால் சிறப்பு  அபிஷேகம், ஆராதனை, மாலை 5.30 

    மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் பெருமாள் சப்பரத்தில் தீர்த்த வலம் வருதல், நரசிம்மருக்கு சிறப்பு அலங்காரத்தில் சகஸ்கர நாம அர்ச்சனை, விசேஷ தீபாராதனை ஆகியவை நடைபெறுகிறது. ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறையினர், ஸ்ரீஸாம்ராஜ்ய லட்சுமி நரஸிம்ஹர பீடத்தினர், நரசிம்ம சுவாமி கைங்கர்ய சபையினர் செய்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai