சுடச்சுட

  

  பழனி பெரியநாயகி அம்மன் கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா கொடியேற்றம்

  Published on : 13th May 2019 01:57 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  temp

  பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் வைகாசி விசாக திருவிழா, அதன் உபகோயிலான பெரியநாயகி அம்மன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
   இதை முன்னிட்டு, விநாயகர் பூஜை, புண்ணியாக வாஜனம் நடத்தப்பட்டு, கொடி பூஜை தொடங்கியது. முருகனின் வாகனமான மயில், சேவல் மற்றும் வேல் உருவம் பொறிக்கப்பட்ட திருக்கொடி கோயிலை சுற்றி வலம் வந்ததை அடுத்து, சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன.
   அதன்பின்னர், கோயில் கொடி மண்டபத்தில் வள்ளி-தெய்வானை சமேத முத்துக்குமார சுவாமி எழுந்தருளினார். தொடர்ந்து, மங்கள வாத்தியங்கள் முழங்க கொடியேற்றம் நடைபெற்றது. 10 நாள்கள் நடைபெறும் வைகாசி விசாகத் திருவிழாவின் 6-ஆம் நாளான மே 17-ஆம் தேதி மாலை முத்துக்குமார சுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம் நடைபெறுகிறது.
   ஏழாம் நாளான மே 18-ஆம் தேதி வைகாசி விசாக தினத்தில், பெரியநாயகி அம்மன் கோயிலில் முத்துக்குமார சுவாமி தோளுக்கினியான் வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். அதைத் தொடர்ந்து, மாலை 4.30 மணிக்கு திருத்தேரோட்டம் நடைபெறுகிறது.மேலும், வைகாசி விசாகத் திருவிழா நடைபெறும் 10 நாள்கள் மாலையும், வள்ளி-தெய்வானை சமேத முத்துக்குமாரசுவாமி தங்கக் குதிரை, தங்க மயில், வெள்ளி ஆட்டுக் கிடாய், காமதேனு உள்ளிட்ட வாகனங்களில் நான்கு ரத வீதிகளில் வலம் வந்து அருள்பாலிக்கிறார்.
   இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர் செந்தில்குமார் உள்பட பலர் செய்து வருகின்றனர்.
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai