நாகை நெல்லுக்கடை மாரியம்மன் கோயில் செடில் உற்சவம்: 4 ஆயிரம் குழந்தைகள் பங்கேற்பு

நாகை நெல்லுக்கடை மாரியம்மன் கோயில் பிரமோத்ஸவ விழா செடில் உற்சவம் ஞாயிற்றுக்கிழமை வெகு சிறப்பாக நடைபெற்றது.
நாகை நெல்லுக்கடை மாரியம்மன் கோயில் செடில் உற்சவம்: 4 ஆயிரம் குழந்தைகள் பங்கேற்பு

நாகை நெல்லுக்கடை மாரியம்மன் கோயில் பிரமோத்ஸவ விழா செடில் உற்சவம் ஞாயிற்றுக்கிழமை வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில், 4 ஆயிரம் குழந்தைகளைப் பங்கேற்கச் செய்து செடில் சுற்றி பெற்றோர்கள் நேர்த்திக்கடன் நிறைவேற்றினர்.
 தமிழகத்தில் உள்ள ஆன்மிகப் புகழ்பெற்ற மாரியம்மன் கோயில்களில் ஒன்றாக விளங்குகிறது நாகை நெல்லுக்கடை மாரியம்மன் கோயில். இக்கோயிலில் ஆண்டுதோறும் பிரமோத்ஸவ விழா செடில் உத்ஸவம் சிறப்பாகக் கொண்டாடப்படுவது வழக்கம்.
 இதன்படி, நிகழாண்டுக்கான பிரமோத்ஸவ விழா மே 4-ஆம் தேதி திருக்கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெறுகிறது.
 ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நெல்லுக்கடை மாரியம்மன் மற்றும் எல்லையம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்ட பின்னர், திருத்தேருக்கு சுவாமிகள் புறப்பாடாகும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஐதீக முறைப்படியான வழிபாடுகளுக்குப் பின்னர் காலை 8.30 மணி அளவில் திருத்தேரோட்டம் தொடங்கியது.
 நாகை மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார் வடம்பிடித்து, தேரோட்டத்தைத் தொடங்கிவைத்தார். முதலாவதாக விநாயகர் தேரும், அதைத் தொடர்ந்து எல்லையம்மன் தேரும், பிரதான தேராக மாரியம்மன் தேரும் வலம் வந்தன.
 முன்னதாக, சிறப்பு வழிபாடுகளுக்குப் பின்னர், காத்தவராயசுவாமி செடிலுக்குப் புறப்பாடாகும் நிகழ்ச்சி காலை 6.30 மணி அளவில் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, காலை 6.45 மணிக்குக் கோயிலின் ஐதீக சிறப்புமிக்க திருவிழாவான செடில் உத்ஸவம் தொடங்கப்பட்டது.
 இதையொட்டி, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களையும் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் காலை 4 மணி முதலே தங்கள் குழந்தைகளுடன் வரிசையில் காத்திருந்தனர்.
 செடில் உத்ஸவம் தொடங்கியதும், செடிலில் காத்தவராயன் வேடமணிந்து நின்றவரிடம் தங்கள் குழந்தைகளை ஒப்படைத்து, செடில் சுற்றி நேர்த்திக் கடன்களை நிறைவேற்றினர். செடில் சுற்றினால் குழந்தைகள் பொலிவும், வலுவும் பெறுவர் என்பது ஐதீகம். நிகழாண்டில் 4 ஆயிரம் குழந்தைகள் செடில் சுற்றினர்.
 அதேபோல, நூற்றுக்கணக்கான பக்தர்கள் பால் காவடி சுமந்து வந்தும், சிலைகள் சுற்றி வைத்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றினர்.
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com