ஒரே நாளில் 1,01,086 பேர் தரிசனம்

ஏழுமலையானை ஞாயிற்றுக்கிழமை முழுவதும் 1,01,086 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 43,876 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். 


ஏழுமலையானை ஞாயிற்றுக்கிழமை முழுவதும் 1,01,086 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 43,876 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். 
திங்கள்கிழமை காலை நிலவரப்படி 31 காத்திருப்பு அறைகளில் ஏழுமலையான் தரிசனத்திற்காக காத்திருந்தனர். அவர்கள் 24 மணிநேரத்திற்கு பின் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். நடைபாதை, நேர ஒதுக்கீடு, விரைவு தரிசனம் மற்றும் தேவஸ்தானம் வழங்கும் முதன்மை தரிசனங்களில் பக்தர்கள் 3 மணிநேரத்திற்குள் ஏழுமலையானை தரிசித்துத் திரும்பினர். 
திருப்பதியில் உள்ள கோவிந்தராஜஸ்வாமி கோயிலில் 18,393 பக்தர்களும், சீனிவாசமங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வரர் கோயிலில் 7,738 பக்தர்களும், திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் 22,010 பக்தர்களும், அப்பளாயகுண்டாவில் உள்ள பிரசன்ன வெங்கடேஸ்வரர் கோயிலில் 1,300 பக்தர்களும், கபில தீர்த்தத்தில் உள்ள கபிலேஸ்வரர் கோயிலில் 4,135 பக்தர்களும் ஞாயிற்றுக்கிழமை தரிசனம் செய்ததாக தேவஸ்தான மக்கள் தொடர்புத்துறை அதிகாரி ரவி தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com