சுடச்சுட

  

  ராஜயோக பத்ரகாளியம்மன் கோயிலில் இன்று திருக்கல்யாண உற்சவம்

  By DIN  |   Published on : 15th May 2019 12:31 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  amman

   

  காரைக்கால் கோயில்பத்து ஸ்ரீ திரௌபதியம்மன், ஸ்ரீ ராஜயோக பத்ரகாளியம்மன் கோயிலில் வருடாந்திர உத்ஸவத்தையொட்டி இன்று திருக்கல்யாண வைபவம் நடைபெறுகிறது. 

  காரைக்கால் கோயில்பத்து பகுதியில் ஸ்ரீ திரௌபதியம்மன், ஸ்ரீ ராஜயோக பத்ரகாளியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் 18-ஆம் ஆண்டாக அக்னி சட்டி வசந்தத் திருவிழா நடைபெறுகிறது. கடந்த 12-ஆம் தேதி பூச்சொரிதல் நிகழ்ச்சி நடைபெற்றது. திருவிழா முறைப்படி தொடங்கும் விதமாக திங்கள்கிழமை இரவு கொடியேற்றம் நடைபெற்றது.

  தொடர் நிகழ்வாக செவ்வாய்க்கிழமை இரவு அம்பாள் பிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழாவில், வரிசை எடுத்தல், அர்ச்சுனன், திரௌபதியம்மன் திருக்கல்யாணம் ஆகிய நிகழ்ச்சிகள் புதன்கிழமை (மே 15) நடைபெறுகின்றன.

  வியாழக்கிழமை இரவு துகில் தரிதல் நிகழ்ச்சியும், மே 17-ஆம் தேதி மாலை காரைக்கால்மேடு கிராமத்திலிருந்து தவசுமர ஊர்வலமும், இரவு தவசுமரம் நடுதல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. தொடர்ந்து, 18-ஆம் தேதி மாலை காளியம்மன் புறப்பாடும், இரவு அரவான் கடப்பலியும் நடைபெறவுள்ளது. 19-ஆம் தேதி கர்ண மோட்சம் நடைபெறுகிறது.

  பின்னர், 20-ஆம் தேதி மாலை சக்தி கரகம் எடுத்தல், இரவு அம்பாள் வீதியுலா, 21-ஆம் தேதி மஞ்சள் நீர் விளையாட்டு வழிபாடு, 22-ஆம் தேதி விடையாற்றியாக தர்மராஜ பட்டாபிஷேகத்துடன் விழா நிறைவடைகிறது.

  காரைக்கால் நகரத்தில் அமைந்திருக்கும் இக்கோயிலில் கிராமப்புற கோயிலில் நடத்தப்படுவதுபோல பல்வேறு நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து நடத்தப்படுவதால் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பார்கள்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai