சுடச்சுட

    
    govindarajar

    பிரம்மோற்சவத்தில் வியாழக்கிழமை காலை அனுமந்த வாகனத்தில் வலம் வந்த பெருமாள். 


    திருப்பதியில் உள்ள கோவிந்தராஜர் கோயிலில் நடந்து வரும் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் 6-ஆம் நாளான வியாழக்கிழமை காலை அனுமந்த வாகனத்தில் கோதண்டராமர் அவதாரத்தில் கோவிந்தராஜர் மாடவீதியில் வலம் வந்தார். 
    இக்கோயிலில் கடந்த சனிக்கிழமை வருடாந்திர பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதன் 6-ஆம் நாளான வியாழக்கிழமை காலை 7 மணி முதல் 8.30 மணி வரை அனுமந்த வாகன சேவை நடைபெற்றது. அனுமந்த வாகனத்தில் கையில் கோதண்டம் ஏந்தி கோதண்டராமராக கோவிந்தராஜர் மாடவீதியில் வலம் வந்தார். வாகன சேவை அருகில் வந்தபோது அங்கு கூடியிருந்த பக்தர்கள் கற்பூர ஆரத்தி எடுத்து வணங்கினர். மதிய வேளையில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத கோவிந்தராஜருக்கு ஸ்நபன திருமஞ்சனமும், மாலையில் ஊஞ்சல் சேவையும் நடைபெற்றன.
    இரவு 8 மணிக்கு யானை வாகனத்தில் கோவிந்தராஜப் பெருமாள் மாடவீதியில் வலம் வந்தார். வாகன சேவையில் பக்தர்களும், கோயில் அதிகாரிகளும் கலந்து கொண்டனர். வாகன சேவைக்கு முன் ஜீயர்கள் நாலாயிர திவ்யபிரபந்தப் பாடல்களை பாராயணம் செய்தனர். கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன. கோயில் எதிரில் உள்ள குளக் கரையில் மாலை வேளையில் கதாகாலட்சேபம், பக்திப் பாடல் கச்சேரி, ஹரிகதை, ஆடல், பாடல் உள்ளிட்ட ஆன்மிக நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai