சுடச்சுட

    

    வரதராஜப் பெருமாள் கோயில் பிரம்மோற்சவம் இன்று தொடக்கம்

    By DIN  |   Published on : 17th May 2019 02:24 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    varadharajaperumal

    சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த சேனை முதன்மையார்.


    காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் வைகாசி பிரம்மோற்சவம் வெள்ளிக்கிழமை (மே 17) தொடங்குகிறது. 
    தொன்மை வாய்ந்த வைணவத் திருத்தலங்களில் ஒன்றான இக்கோயிலில், ஆண்டுதோறும் விமரிசையாகக் கொண்டாடப்படும் வைகாசி பிரம்மோற்சவம் வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. கடந்த செவ்வாய்க்கிழமை மாலை ஸ்ரீசெல்வர் உற்சவம் நடைபெற்றது. தொடர்ந்து, புதன்கிழமை அங்குரார்ப்பணம், ஸ்ரீசேனை முதன்மையார் புறப்பாடு நடைபெற்றது. 
    அதைத் தொடர்ந்து, ஆழ்வார் திருநாளையொட்டி வரதருக்கு திருமஞ்சன உற்சவம், சிறுபுண்ணியகோடி விமானத்தில் சேனை முதன்மையார் புறப்பாடு நடைபெற்றது. இதைத்தொடர்ந்து, வெள்ளிக்கிழமை அதிகாலை 4.10 முதல் 5.30 மணிக்குள் வைகாசி பிரம்மோற்சவம் விமரிசையாக தொடங்கவுள்ளது. 
    வரும் 19-ஆம் தேதி கருடசேவையும், 23-ஆம் தேதி திருத்தேர் உற்சவமும் நடைபெறவுள்ளன. 26-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள பிரம்மோற்சவத்தில் காலை, மாலை ஆகிய இருவேளைகளிலும் பெருமாள் சிம்மம், ஹம்சம், சேஷன், யாளி, அனுமந்தர், யானை உள்ளிட்ட வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிக்கவுள்ளார். 


     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai